எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...

muthur political


திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களும் பாராளுமன்றம




165 கும் அதிகமான மஸ்ஜிதுகளும் ,90 கும் அதிகமான முஸ்லிம் பாடசாலைகளை கொண்ட மாவட்டம் திருகோணமலை மாவட்டம் இங்கு 63 வருட காலமாக தொடர்ந்தும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்க பட்டுவருகின்றது அதிலும் ஆளும் தரப்பு பிரதிநிதித்துவத்தை

பெற்றுவந்த முஸ்லிம் அரசியல் பாரம்பரியம் என்று குறிபிடலாம் இந்த முறை சற்று வித்தியாசம் எனிலும் இந்த 7 ஆவது பாராளுமன்ற தேர்தலிலும் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்க பட்டுள்ளது திருகோணமலை மாவட்டத்தில் 1947 ஆம் ஆண்டு தொடக்கம் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்க பட்டுவருகின்றது

திருகோணமலை முஸ்லிம் அரசியல் இலங்கை மக்கள் தொகை மதிப்பீட்டுத் திணைக்களத்தின் 2007 ஆம் ஆண்டின் புள்ளி விபரப்படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3 இலட்சத்து 34 ஆயிரத்து 363 பேர் வாழ்கின்றார்கள் . இதில் மாவட்டத்தின் பெரும்பான்மையான முஸ்லிம்கள் 15,1692 (45.4%) பேரும் தொகையில் இரண்டாம் நிலையில் இருக்கும் தமிழர்கள் 95,652 (28.6%), பேரும் மாவட்டத்தின் விரிவாக பார்க்க..
சிறுபான்மையான சிங்கள மக்கள் தொகை 84,766 (25.4%) பேரும் உள்ளனர் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்க பட்டுவந்தாலும் முஸ்லிம்கள் அங்கு பெற்றிருக்கும் வாக்கு வங்கிக்கு உரிய பிரதிநிதித்துவத்தை பெறுவதில் கடந்த 2004, 2010 ஆகிய இரண்டு ஆண்டுகளும் கடந்த தடவைகளை போன்று தவறியுள்ளனர். மக்கள் தொகையின் அடிப்படையில் நியாயமா பார்த்தால் இரண்டு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளை மாவட்டம் பெற்றிருக்க வேண்டும் மாவட்டத்தின் முஸ்லிம் வேட்பாளர்கள் பிரிந்தமை , வாக்களிக்காமை போன்ற இரண்டு பிரதான காரணங்களால் இந்த முறையும் மாவட்டம் கொண்டுள்ள முஸ்லிம் வாக்கு வங்கிக்கு ஏற்ப பிரதிநிதிகளை பெறமுடியவில்லை

முஸ்லிம் வாக்குகள் மிகவும் கூடுதலாக பிரிக்கபட்டுள்ள இடங்களில் திருகோணமலையை முதலாவதாக குறிபிடும் அளவுக்கு முஸ்லிம் வாக்குகள் பிரிக்கபட்டுள்ளதுடன் இந்த மாவட்ட முஸ்லிம்கள் , தமிழர்களை போன்று அதிகமாக வாக்களிக்கவும் தவறியுள்ளனர்

இதனால் இந்த முறை மாவட்டத்தின் சிறுபான்மையான சிங்கள மக்கள் தமது வாக்குளில் 90% மானவற்றை ஆளும் தரப்பு சிங்கள வேட்பாளர்களுக்கு ஒற்றுமையாக திட்ட மிட்டு வழங்கியமையாலும் முஸ்லிம் வாக்குகள் ஆளும் தரப்பால் இந்த முறை நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு முஸ்லிம்களின் வாக்குகள் பிரிக்க பட்டமையாலும் இந்த முறையும் நியாயமாக பெறவேண்டிய மேலும் ஒரு பிரதிநிதித்துவம் பறிபோயுள்ளது

முஸ்லிம் வாக்குகள் ஆளும் தரப்பில் இந்த முறை நான்கு முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு முஸ்லிம்களின் வாக்குகள் ஆளும் தரப்பால் திட்ட மிட்டு பிரிக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளது கடந்த பாராளுமன்ற தேர்தல்களின் போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பின் மூன்று முஸ்லிம்களையும் ஒரு தமிழரையும் மூன்று சிங்கள வேட்பாளர்களையும் நிறுத்தும் வழக்கம் ஆனால் இந்தமுறை தமிழ் வேட்பாளர் தவிர்க்கப்பட்டு அதற்கு பதிலாக முஸ்லிம் வேட்பாளர்கள் நான்கு பேர் நிறுத்தியமை முஸ்லிம் வாக்குகள் பிரிந்தமைக்கு பிரதான காரணமாக கருதப்படுகின்றது

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தொகை 241,133 பேர் அதில் 149,982 வாக்காளர்கள் வாக்களிதுள்ளனர் 91,151 பேர் வாக்களிக்கவில்லை முஸ்லிம் காங்கிரஸ் சார்பான ஐக்கிய தேசிய முன்னணி 39,691 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தையும் , ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புகு 59,784 வாக்குகளை பெற்று 02 ஆசனத்தையும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 33,268 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தையும் பெற்று கொண்டது ஆளும் தரப்பில் களம் இறங்கிய நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் தோல்விகண்டனர்

2004 ஆம் ஆண்டு மொத்த பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 224,307 பேர் இதில் வாக்களித்தவர்கள் 191,657 பேர் அதில் 32,650 பேர் வாக்களிக்கவில்லை அந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் 65,185 (35.66%) வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31,053 (16.99%) வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும், இலங்கை தமிழரசுக் கட்சி 68,955 (37.72%) வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டன. ஐ.தே. க. 15,693 (08.59%) வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இந்த மாவட்டத்தில் 100,000 முஸ்லிம் வாக்காளர்களும் , 80,000 தமிழ் வாக்காளர்களும் , 60,000 சிங்கள வாக்காளர்களும் உள்ளனர் இங்கு தேர்தல் முடிவுகள் முஸ்லிம்களின் வாக்குகள் அதிகமாக பிரித்து இருப்பதை, முஸ்லிம் வாக்காளர்கள் பலர் தமது வாக்குகளை பயன்படுத்த வில்லை என்பதையும் காட்டுகின்றது 1 லச்சம் முஸ்லிம் வாக்காளர்கள் குறைந்தது இரண்டு பாராளுமன்ற பிரதிநிதிதுவதை பெற்றிருக்க வேண்டும் ஆனால் கடந்த 2004 ஆம் ஆண்டு இழந்ததை போன்று இந்த 2010ஆம் ஆண்டு தேர்தலிலும் பெற முடியவில்லை

எவ்வாறாயினும் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய இரண்டு நியாயமான பாராளுமன்ற பிரதிநித்துவத்தில் ஒன்று ஆளும் தரப்பு சார்பாக பறிபோயுள்ளது என்பது மட்டும் உண்மை இந்த வகையில் கண்டி மாவட்டத்தில் 13 வீதம் மக்கள் தொகையை கொண்ட முஸ்லிம்கள் நான்கு பாராளுமன்ற பிரதிநிதிகளை சரியாக சிந்தித்து பெற்றுள்ளார்கள் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் திருகோணமலை மாவட்டம் போன்று செறிவாக வாழவில்லை அக்குரனையில் மட்டும்தான் செறிவாக வாழ்கின்றார்கள் ,கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்கள் 21 பிரதேச செயலாளரர் பிரிவுகளில் சிதறி வாழ்கின்றார்கள் எனிலும் அவர்களின் வாக்குகள் சிதறி போகவில்லை கண்டி மாவட்டத்தில் களம் இறங்கிய நான்கு முஸ்லிம் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது திருகோணமலை மாவட்டம் முஸ்லிம்களுக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு

மாவட்டத்தின் சிறுபான்மை வேட்பாளர்கள் இருவர் வெற்றி பெற்றிருப்பது அவர்களின் ஒற்றுமையை காட்டுகின்றது முஸ்லிம் வேட்பாளர்களின் தேல்வி முஸ்லிம் வாக்காளர்களின் ஒற்றுமை இன்மையை காட்டுகின்றது முஸ்லிம் வாக்குகளை சிதறடிப்பதற்காக செய்யப்படும் அரசியல் நகர்வுகளை சம்மந்த பட்டவர்கள் சரியாக ,சரியான நேரத்தில் இனம் கண்டுகொண்டால் தோல்விகளை தவிர்துகொள்ளமுடியும்