எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 12, 2011

உள்ளமும் உளநோய்களும்



- எம். டீ. எம். ஹிஷாம் (ஸலபி, மதனி)
மனிதனின் தேகத்தில் உள்ளம் மிகச் சிறப்பு வாய்ந்த ஓர் அங்கமாகும். எவருடையஉள்ளம் உயிரோட்டமுள்ள உள்ளமாக இருக்கின்றதோ அவர் உயிரோட்டமுள்ள மனிதனாகவும் மற்றும், எவருடைய உள்ளம் மரித்த நிலையில் இருக்கின்றதோ அவர் மரித்த மனிதனாகவும் கருதப்படுவார். இவ்வடிப்படையைக் கருத்தில் கொண்டே அல்லாஹ்வும் அவனது தூதரும் தத்தம் பொன்மொழிகளை அமைத்துள்ளார்கள். எடுத்துக்காட்டாக. . .
அல்லாஹ் கூறுகின்றான்: “எவருக்கு உள்ளம்இருக்கிறதோ அவருக்கும், அல்லது மன ஒருமைப்பாடுடன் செவியேற்கின்றாரோ அவருக்கும் நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கின்றது.” (காப்: 37)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: “நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ, அதில் உங்கள் மீது குற்றமில்லை எனினும், உங்களது உள்ளங்கள் வேண்டுமென்றே கூறுவது (உங்கள் மீது குற்றமாகும்). (அல் அஹ்ஸாப்: 5)
நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக உடம்பில் ஒரு சதைப்பிண்டம் இருக்கின்றது, அது சீர் பெறுமானால் உடம்பு பூராகவும் சீர் பெற்றுவிடும், அது கெட்டுவிட்டால் உடம்பு பூராகவும் கொட்டுவிடும், அதுவே உள்ளமாகும்.” (புகாரி, முஸ்லிம்)

உள்ளத்தின் பண்புகள்

பிரதானமாக உள்ளத்திற்கு இரு பண்புகள் உள்ளன.
1. தடம் புரளக்கூடிய தன்மை
உள்ளமானது எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. அவ்வப்போது நிலை மாறக்கூடிய தன்மையைப் பெற்றிருக்கும். அதற்கான காரணம் என்ன என்பதை பின்வரக்கூடிய ஹதீஸைப் படிக்கும் போது புரிந்து கொள்வீர்கள்.
“ஒரு சமயம் நபியவர்கள், “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். இதனைச் செவியுற்ற சிலர்: அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களையும், நீங்கள் கொண்டுவந்ததையும் விசுவாசம் கொண்டுள்ளோம் இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபியவர்கள்: ஆம், நிச்சயமாக உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கு மத்தியில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள். (திர்மிதி, அஹ்மத்)
இப்படி உள்ளமானது நிலைமாறும் தன்மையைக் கொண்டிருப்பதால், அதனைச் சீர் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது எமது கடமையாகும். அல்குர்ஆனிலும் நபி மொழியிலும் அதற்கான பிரார்த்தனைகள் நிரம்பக் காணப்படுகின்றன.
  • அல்லாஹ் கூறுகின்றான்: “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு நீ நேர்வழி காட்டிய பின்னர் எங்கள் உள்ளங்களை தடம்புரளச் செய்து விடாதே!” (ஆலஇம்ரான்: 5)
  • “இறைவா! உள்ளங்களை மாற்றியமைக்கக்கூடியவனே! எங்களது உள்ளங்களை உன்னை வழிப்படுவதின் பால் மாற்றியமைப்பாயாக!” என நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (முஸ்லிம்)
  • “மேலும், உன்னிடத்தில் சாந்தியான உள்ளத்தைக் கேட்கிறேன்” எனவும் நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். (ஹாகிம்)
2. பித்னாக்களை உள்வாங்கக்கூடிய தன்மை
பொதுவாக மனித உள்ளமானது எப்போதும் பித்னாக்களை உள்வாங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டு அவற்றை விட்டும் உள்ளங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது எம் பாரிய பொறுப்பாகும். ஒரு மனிதன் பித்னாக்களுக்கு உட்பட்டு, அவற்றில் ஆர்வம் கொண்டு, ஈடுபாடு காட்டினால் அவனது உள்ளம் காலப்போக்கில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்தறிய முடியாத அளவுக்கு இருளடைந்துவிடும். அதேபோன்று பிரிதொரு மனிதன் பித்னாக்களைவிட்டு ஒதுங்கி தன்னைத் தற்காத்துக் கொண்டு காரியம் அற்றினால் அவனது உள்ளம் பளிச்சிடும் வெண்ணிறத்தை அடையும் என நபியவர்கள் கூறியிருக்கிறார்கள். (முஸ்லிம், அஹ்மத்)

உள்ளத்தின் வகைகள்

பொதுவாக உள்ளத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
  1. சீராண உள்ளம்
  2. மரணித்த உள்ளம்
  3. நோய்வாய்ப்பட்ட உள்ளம்
1. சீராண உள்ளம்
இத்தகைய உள்ளமானது, மனோ இச்சைக்குக் கட்டுப்படுதல் மற்றும் நபியவர்களின் பொன்மொழிகளில் சந்தேகம் கொள்ளல் போன்றவற்றைவிட்டும் ஈடேற்றம் பெற்றதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளமானது முழுமையாக அல்லாஹ்வின் ஏவல் விலக்கல்களுக்கு சிரம் தாழ்த்தக்கூடியதாக இருக்கும். அத்தோடு மார்க்கத்திலிருந்து ஒரு கட்டளை பிறப்பிக்கப்படும் போது அதற்கெதிராகத் தன்னுடைய அபிப்பிராயத்தையோ, மனோ இச்சையையோ வெளிப்படுத்தாது இருக்கும். இத்தகைய உள்ளம் படைத்தவர்களே நிச்சயமாக மறுமை நாளில் ஈடேற்றம் பெறக்கூடியவர்களாக இருப்பர். இது குறித்து இப்றாஹீம் (அலை) அவர்களின் ஒரு பிரார்த்தனைபற்றி அல்லாஹுத்தஆலா கூறும் போது: “அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருபவரைத் தவிர அந்நாளில் செல்வமோ, பிள்ளைகளோ பயன்தராது” என்கிறான். (அஷ்ஷூஅரா: 88,89)
2. மரணித்த உள்ளம்
இவ்வுள்ளமானது சீராண உள்ளத்திற்கு மாற்றமானதாகும். மேலும், இவ்வுள்ளமானது தன்னுடைய இரட்சகனை அறியாத நிலையிலும் அவனை வணங்காத நிலையிலும் காணப்படும். அத்தோடு தனது இரட்சகனின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக முழுமையாக மனோ இச்சைக்கு வழிப்பட்டதாக இருக்கும். இத்தகைய உள்ளம் குறித்து நபியவர்கள் கூறும் போது: “அல்லாஹ்வை ஞாபகிப்பவனுக்கும் ஞாபகிக்காதவனுக்கும் உதாரணம் உயிரோடு இருப்பவனும் மரணித்தவனும் ஆவார்;கள்.” (புகாரி, முஸ்லிம்)
3. நோய்வாய்ப்பட்ட உள்ளம்
இவ்வுள்ளத்தைப் பொருத்தளவில் உயிரோட்டமுள்ளதாகக் காணப்படினும் நோயுற்றதாக இருக்கும். மேலும், இவ்வுள்ளத்தில் அல்லாஹ் மீது அன்பும் உறுதியான விசுவாசமும் காணப்படும். ஆயினும் தவறான விடயங்களின் பால் ஆர்வம் கொண்டாதகவும் அதில் அதிக ஈடுபாடு உடையதாகவும் இருக்கும். சில சமயம் இந்நோய் முற்றி ஒருவரை மரணித்த உள்ளம் உடையவர் என்ற நிலைக்குக் கூட தள்ளிவிடும்.

உள நோய்களின் வகைகள்

பொதுவாக உளநோய்களை இரு பெரும் பிரிவுக்குள் உள்ளடக்கலாம்.
  1. சந்தேகங்களுடன் தொடர்புடைய நோய்கள்
  2. இச்சையுடன் தொடர்புடைய நோய்கள்

1. சந்தேகங்களுடன் தொடர்புடைய நோய்கள்
இவ்வகையான நோயானது உள்ளம் தொடர்பான நோய்களில் மிகக் கடுமையானதாகும். இந்நோயானது நம்பிக்கை சார்ந்த அம்சங்களில் பெரிதும் தாக்கம் விளைவிக்கின்றது. இந்நோயின் காரணமாக தவறான கொள்கைகளும் கற்பனைகளும் மனதில் பதியப்படுகின்றன.
மேலும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கடுமையான நிலைக்கு தள்ளப்பட்டவர்களாக இணைவைப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும், நூதன அநுட்டாளிகளையும் குறிப்பிடலாம்.
அல்பகரா அத்தியாயத்தின் 10ஆம் வசனத்தில் இந்நோயால் பீடிக்கப்பட்டவர்கள் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகையில்: “அவர்களின் உள்ளங்களில் (சந்தேகம் எனும்) நோய் உள்ளது. எனவே, அல்லாஹ் அவர்களுக்கு நோயை அதிகப்படுத்தி விட்டான்” என்கிறான். (அல்பகரா: 10)
இந்நோயிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு:
  • அல்குர்ஆன், அஸ்ஸுன்னாஹ்வில் இடம்பெற்றிருக்கக்கூடியவற்றிக்கு முழுமையாகக் கட்டுப்படல்.
  • அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாஹ்வையும் எம்முடைய முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்கள் எவ்வாறு விளங்கினார்களோ அவ்வாறே நாமும் விளங்க முற்படல்.
2. இச்சையுடன் தொடர்புடைய நோய்கள்
இவ்வகை நோய்களில் மனிதன் நன்றாக அறிந்து வைத்துள்ள அனைத்து வகையான பாவமான காரியங்களும் உள்ளடங்கும். அதனடிப்படையில் பொறாமை, உலோபித்தனம், விபச்சாரம், மற்றும் ஹராமான பார்வை போன்றவற்றை சுட்டிக்காட்டலாம்.
மேலும், இத்தகைய உளநோய்களுக்குக் காரணமாக இருக்கக்கூடிய உள்ளத்தைப்பற்றி அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது: “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பீர்களானால், குழைந்து பேசாதீர்கள். ஏனெனில், எவனது உள்ளத்தில் நோய் இருக்கின்றதோ, அவன் ஆசை கொள்வான்” என்கிறான். (அல்அஹ்ஸாப்: 32)
இந்நோயில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு:
  • அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் ஏவல் விலக்கல்களுக்கு முழுமையாக அடிபணிதல்.
  • எவ்வேளையும் அல்லாஹ் எம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வில் காரியமாற்றுதல்.
  • ஷைத்தானின் சதிவலைகளை விட்டும் எச்சரிக்கையாக இருத்தல்.
  • ஒவ்வொரு பாவமான காரியத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனைகளை கருத்தில் கொண்டு அவற்றை விட்டும் விலகிக் கொள்ளல்.
உள்ளம் சீர் பெறுவதற்காக சில ஆளோசனைகள்
  • தான் ஏற்றிருக்கும் மார்க்கத்திற்கு பங்கம் விளைவிக்கக்கூடிய காரியங்களைத் தவிர்ந்துக் கொள்ளல்.
  • உள நோய்களைவிட்டும் மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ளல்.
  • பித்னாக்கள் ஏற்படக்கூடிய இடங்களை விட்டும் தூரமாகுதல்.
  • ஒவ்வொரு நாளும் தன்னை சுயபரிசோதனை செய்தல்.
  • நல்லமல்கள் புரிவதற்கு உள்ளத்துடன் போராடல்.
  • அல்லாஹ்வை வழிப்படும் விடயத்திலும், அவனுக்கு மாறு செய்யும் விடயத்திலும் பொறுமையைக் கடைபிடித்தல்.
  • படிப்பினை பெறும் நோக்கில் நல்ல மனிதர்களின் வரலாறுகளை வாசித்தல்.
  • அல்குர்ஆனை தொடர்ந்து ஓதி வரதல்.
  • உள்ளத்தை சீர் செய்யுமாறு அல்லாஹுத்தஆலாவிடம் பிரார்த்தித்தல்.
  • அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கக்கூடிய நண்பர்களைத் தெரிவு செய்தல்.
  • பாவங்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் தன்னையே நொந்து கொள்ளல்.
  • தான் செய்த நல்லமல்களை எண்ணிப் பெருமிதமடையாதிருத்தல்.
  • எப்போதும் அல்லாஹ்வை வழிப்படும் விடயத்தில் தான் திருப்தியற்ற நிலையில் உள்ளேன் என்ற உணர்வில் இருத்தல்.
  • மரணத்தை அடிக்கடி ஞாபகப்படுத்தல்.
  • மண்ணறைகளை தரிசிக்கச் செல்லல்.
  • தவறான ஊசலாட்டங்களை விட்டும் மனதை தற்காத்துக் கொள்ளல்.
  • ஒவ்வோர் ஆத்மாவும் ஒவ்வொரு கணணொடிப்பொழுதிலும் அல்லாஹ்வின் பால் தேவையுடையதாக இருக்கின்றது என்ற எண்ணத்தை மனதில் பதித்தல்.
  • உள்ளத்திற்குப் பூரணமான மார்க்க அறிவை வழங்குதல்.
  • இம்மை மறுமை வாழ்க்கையின் எதார்த்த தன்மையைப் புரிந்து கொள்ளல்.
  • அதிகமாக திக்ர் செய்தல்.
  • பாவங்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் அதிகமாக இஸ்திக்பார் மற்றும் தவ்பா செய்தல்.
  • சிறுபாவங்கள் நிகழும் சந்தர்ப்பங்களில் அவற்றைத் தொடர்ந்து நல்ல காரியங்களில் ஈடுபடுதல்.
எனவே, மேற்குறிப்பிடப்பட்ட போதனைகளைக் கருத்தில் கொண்டு எம் உள்ளங்களையும் சீர் செய்து நல்ல மனிதர்களாக வாழ்ந்து ஈடேற்றம் பெறவதற்கு எனக்கும் உங்களுக்கும் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக! ஆமீன் .....

புதன், நவம்பர் 09, 2011

கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர்.






கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டுடும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.
ஆனால், என்ன வியப்பு! உலகத்தில் வேற எந்த நூலிலும காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களைக் குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.
நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல. குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரைத் திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.
நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்படிருந்தது. மில்லரின் வியப்பைக் கூட்டியது.
“குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்னில் ஒரு வசனம் அவரைத் தூக்கி வாரிப் போட்டது.

“இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள்” (4:82)என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.
இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: “இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால், சிந்தனைகளில் தவறு இருக்கும். தவறு இல்லை என்பது நரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால் தான் அது முடியவில்லை.
உலகில் எந்தப படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது. இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.
டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:

“இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (21:30}1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். “பெருவெடிப்பு” (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பல கோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.
‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தைின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்குஇணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறித்த மூலத்தில் ‘அல்ஃபதக்’ எனம் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். {ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!}
நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார் போலும், இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதை கண்டு திகைத்துப் போனார் மில்லர்.

“இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல. அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211) என்று கூறும் குர்ஆன்,“(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!’ (18:98) என்ற கடடளையிடுகின்றது.ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்கு முன் என்னை விட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?
டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்க வைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம் பெறுகின்றன. அவற்றை ‘அற்புதங்கள்’ என்கிறார் அற்புதகக் கூட்டங்கள பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீ லஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படடையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை – தான் நரகவாசி என்பதை பொய்யாக்கியிருக்கலாம்.
ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப் பெற்றது

புதன், அக்டோபர் 19, 2011

Download high quality Al Quraan Recitations


Download high quality Al Quraan Recitations


Dear Friends I'd like share with you all, a resourceful website, I found this website  when I was searching Salah Al Budiar's Quran recitation, Salah Al Budair is the present Imam of Masjid Al Nabavi, Madeena. His qiraath pleases our mind and soul while we listen to it


http://www.quranicaudio.com/ here we can find many qaaries' recitations with their respective accents.


http://www.quranicaudio.com/ is your source for high quality recitations of the Quran. All the Quran recitations on this site are in high quality and free for download and streaming as mp3 format.


In this all in one website the whole Quran can downloaded in mp3 format, Please enjoy your stay and download the recitations and listen to it in this holy month of Ramadan


Click this website and select the name of Qaari, then  you will be directed to the  below page


http://www.quranicaudio.com/




Please click  favorite  Qaari's name in the list, for an example click on  Salah Al Budair than you will be directed to an Option Manu to download  respective Soorah of Al Quran 



"خيركم من تعلم القرآن وعلمه "

The best amongst you are those who learn the Quran and teach it ( Saheeh Bukhari )

Dear friends let your friends and students know about this website and .....................
kindly introduce amongst them ............
we all will get Ajr form Almighty Allah.......................


அல்குரானை முழுமையாகவோ அல்லது தேவையான குறித்த சில சூராக்களையோ Mp3 வடிவில்  இந்த  http://www.quranicaudio.com/ தளத்திற்கு சென்று தரவிறக்கி கொள்ளலாம்,அல்குரானை  மிக இனிமையாக அவர்களுக்கே உரிய ராகத்துடன்  ஓதுவதில்  புலமை பெற்ற நமக்கு பிடித்தமான காரிகளின் கிராத்களை தெரிவு செய்து தரவிறக்கி கொள்ள முடியுமாக இருப்பது இத்தளத்தின் சிறப்பம்சமாகும் . 

"அல்குரானை தானும் கற்று பிறருக்கும் கற்பிக்கின்றவர் உங்களில் மிகச்சிறந்தவர் ஆவார்"
 (நபி மொழி )

முகம்மது நபி (ஸல்) அவர்களது வாழ்க்கை சரிதையை ஒலி வடிவில் (Mp3) தரவிறக்கம் செய்யலாம்




முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை விளக்குகின்ற புத்தகங்கள் ஏராளமாக இருக்கின்றன ஆரம்ப கால இமாம்களால் எழுதப்பட்ட முதன்மையான புத்தகங்கள் பின்னர் அவ்வாறான பல முதன்மையான நூல்களை உசா துணையாக கொண்டு எழுதப்பட்ட நவீன கால இஸ்லாமிய சிந்தனையாளர்களின் புத்தகங்கள் என வகைப்படுத்தலாம்,

இவாறு சீறா பற்றிய அல்-குரான் அல்-ஹதீஸ் களின் நிலைக்களநிலிருந்தும் ஏனைய மூலநூல்களின் தரவுகளின் வாயிலாகவும் எழுதப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட புத்தகம் அல்-றஹீக் அல்- மக்தூம் ( The Seald Nectar) ஆகும் .தற்காலத்தில் வெளியான சீறா பற்றிய நூல்களில் காத்திரமானதும் எளிமையான வடிவில் இறைதூதரின் வாழ்வினை விவரிக்கின்ற புத்தகம் என பெயர் பெற்றது அல்-றஹீக் அல்-மக்தூம். 1976 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி இடம்பெற்ற மகா நாடொன்றில் சவூதி அரேபியா, மக்காவை மையமாக வைத்து இயங்கும் “ராபிததுல் ஆலமில் இஸ்லாமி” (Muslim World League) எனும் அமைப்பின் ஆய்வுக்கட்டுரை போட்டி ஒன்றிற்காக இவர் எழுதி உலகளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற ஆய்வே இந்த நூலாகும் இது பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள இந்த நூலின் பதிப்புரையினை இந்த இணைப்பினை கிளிக் செய்து வாசிக்கவும்http://www.islamkalvi.com/portal/?p=613


இந்த புத்தகத்தின் Mp3 ஒலி வடிவினை இஸ்லாம் கல்வி .கொம் தளத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம். மிக இலகுவான தமிழ் நடையில் வார்த்தைகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன , ஒரு சிறு குழந்தைக்கு கதை சொல்வது போன்ற லாவகமான மொழி நடையில் இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்கை சரிதை விவரிக்கப்படுகின்றது. நபியவர்கள் கலந்து கொண்ட யுத்தங்கள் பற்றிய வர்ணனைகளும் விவரிப்புகளும் நம் மனக்கண் முன் காட்சிகளாக விரிகின்றன.


இந்த Mp3 ஒலிப்பேழைகளை (CD) தரவிறக்கி வீட்டில் அனைவருக்கும் கேட்கும் படி ஒலிக்க விடலாம், அல்லது தனிமையில் மன ஓர்மையுடன் ஹெட்செட் மூலமாக் கேட்பது இலகுவில் மனதில் பதிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். வேண்டுமானால் தூங்குவதற்கு முன் கேட்டுப்பாருங்கள் பெருமானாரின் வரலாற்றையே ஒருவர் நம்மக்கு கதையாக சொல்வது போன்று இருக்கும், இரண்டு மூன்று தடவைகள் செவிமடுக்கும் போது இயல்பாகவே சீறா பற்றிய ஓரளவு தெளிவினை பெற்றுக்கொள்ளலாம். புத்தகம் ஒன்றினை வாசித்து கிடைக்கும் தரவுகளின் மூலமாக பெருமானாரின் வாழ்க்கை சரிதையை நினைவில் நிறுத்துவதை இலகு படுத்தி இருக்கின்றன இந்த ஒலிப்பேழைகள்.


சிலவேளைகளின் முதல் ஓரிரு பாகங்களில் விவரிக்கபட்டிருக்கும் நபியவர்களின் குலம், கோத்திரம் மற்றும் இஸ்லாத்திற்கு முன்னரான அரேபியர்களது வாழ்வுமுறை அதிகமான தரவுகளை முன்வைப்பதால் சற்று சுவாரசியம் குறைவாக இருக்கலாம், ஆனாலும் அதன் பின்னர் வருகின்ற அனைத்து பாகங்களும் அடுத்து என்ன நடைபெறும் எனும் வகையில் நம் ஆவலை தூண்டி கொண்டே இருக்கும். குறிப்பாக நபியவர்களது வாழ்வில் இடம்பெற்ற மிஹ்ராஜ் இரவு ஹிஜ்ரத் பற்றிய விவரிப்புகள், தவிரவும் நபியவர்கள் கலந்து கொண்ட யுத்தங்கள், உடன்படிக்கைகள், என்பன சுவாரசியமானதும் விறுவிறுப்பானதுமான நடையில் கூறப்பட்டிருக்கின்றன , புத்தகத்தில் குறிப்பிட்ட படி இவை அத்தனையும் அந்த யுத்தங்களில் நேரடியாக கலந்து கொண்ட சஹாபாக்களின் வர்ணனைகளுடன் சற்றேனும் சுவாரசியம் குன்றாமல் இந்த ஒலிப்பேழை வாயிலாக கேட்கலாம்.

Graves of Martyrs in Badr



இதிலும் குறிப்பாக இந்த கதை சொல்லியின் குரல் சம்பவங்களுக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் ஒரு வகை ராகத்துடன் இருப்பது செவிமடுப்பவர்களின் கவனத்தை சிதற விடாமல் செய்கின்றது.


அதிகரித்த வேலைப்பளுக்களுக்கு மத்தியில் புத்தகங்களை வாசித்து நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய முடியாதவர்கள் கிடைக்கின்ற ஓய்வு நேரத்தில் இந்த அல்-றஹீக் அல்- மக்தூம் புத்தகத்தின் ஒலி வடிவினை கேட்பதன் மூலமாக பெருமானாரின் வாழ்க்கை சரிதையை அறிந்து கொள்ளலாம் குறிப்பக சிறுவர்களுக்கு இதனை அறிமுகப்படுத்தலாம் கதைகளின் வாயிலாக சலிப்பேதுமின்றி சீறா பற்றிய அறிவினை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும்.


இதனை முழுமையாக தரவிறக்கி கொள்ள இந்த இணைப்பினை கிளிக் செய்யவும் மொத்தமாக மூன்று CD கள் நிரற்படுத்த பட்டிருக்கும். ஒவ்வொன்றாக தரவிறக்கி கொள்ளுங்கள். 

http://www.islamkalvi.com/download_cd/al_raheeq/browse/


அல்லது குறிப்பிட்ட பாகத்தினை ஒன்லைன் வழியாக கேட்பதற்கு விரும்பினால் இந்த இணைப்பினை கிளிக் செய்து கேட்கலாம் விரும்பினால் பக்கத்திலிருக்கும் தரவிறக்க இணைப்பினை கிளிக் செய்து குறித்த Mp3 கோப்பினை தரவிறக்கலாம். மொத்தமாக 45 பாகங்கள் நிரற்படுத்த பட்டிருக்கின்றன. http://www.islamkalvi.com/history/raheeq_audio/index.htm



எதோ முடிந்தளவு குறுகிய நேரத்திற்குள் எழுதி இருக்கிறேன். தவறுகள் அல்லது திருத்தங்கள் இருந்தால் தயவு செய்து சுட்டி காட்டவும் நீங்கள், என் பதிவுக்கு வாக்களிக்கா விட்டாலும் பரவாயில்லை சற்றேனும் என் பதிவின் மூலம் உங்களுக்கு பிரயோசனம் கிடைத்தால் அதுவொன்றே போதும்.

அல்குரானை இலகுவான முறையில் ஓத கற்று கொள்ளவும் அல்குரான் வசனங்களின் மொழிபெயர்ப்பினை அறிந்து கொள்ளவும் வழிகாட்டும் ஒரு இணையத்தளம்



இலகுவான முறையில் அல்குரானை ஓத கற்று கொள்ளவும் அல்குரான் வசனங்களின்  மொழிபெயர்ப்பினை அறிந்து கொள்ளவும் வழிகாட்டுகிறது Tanzil Info எனும் இந்த  இணையத்தளம்  http://tanzil.info/  

அல்குரானை அழகிய ராகதுடனோ அல்லது எழுத்துக்களை கோர்த்து சரளமாகவும் திருத்தமாகவும் ஓதுவதற்கு பயற்சி பெற விரும்புவோருக்கு இத்தளம் மிக உபயோகமாக இருக்கும். 



இனி இத்தளத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம் இத்தளத்தினை பயன்படுதுவதற்கு   சில முக்கியமான்  Option களும் தரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றாக அது பற்றி நோக்குவோம்.



01. Serch Box
இதனுள்  ஒரு குறித்த சொல்லை வழங்கி அந்த சொல் எந்தெந்த வசனங்களில் வந்திருக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம். சில நேரம் குறித்த ஒரு வசனத்தின் ஒரு சொல் நினைவில் இருந்தால் அந்த சொல்லை வைத்து அது எந்த வசனத்தில் எந்தெந்த சூராக்களில் வந்திருக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம். அல்லது சம்மந்தப்பட்ட வினையடியினை ( root مصدر) கொடுத்தும் தேடி கொள்ளலாம், குறிந்த அந்த சொல் எத்னை தடவைகள் எத்தனை வசனங்களில் வந்திருக்கின்றது என்பதனையும் அறிந்து கொள்ளலாம். அல்குரான் வசனங்களை மேற்கோள் காட்டி மார்க்க சொற்பொளிவுகளை நிகழ்த்துபவர்களுக்கும், ஆய்வு கட்டுரைகளை எழுதுபவர்களும் குறித்த ஒரு விடயம் சம்மந்தமாக அல்குரான் வசனங்களை தொகுத்து ஆய்வு செய்வது இலகு படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக நோன்பு பற்றிய அல்குரான் வசனங்களை அறிந்து கொள்ள الصيام என்று தட்டச்சு செய்வதன் மூலமோ அல்லது root என்பதனை கிளிக் செய்து தரப்பட்டுள்ள சொற்களில் صوم என்பதனை தேர்வுசெய்து தேடுவதன் மூலமோ அது பற்றிய அனைத்து அல்குரான் வசனங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.




02. Browse
இக் கட்டத்திற்குள் Sura என தரப்பட்டிருக்கும் இடத்தில் விருப்பமான அல்குரான் சூரா வினை தெரிவு செய்து கொள்ளலாம். இரண்டாவதாக காணப்படும் Aya எனும் இடத்தில் உங்களுக்கு தேவையான வசனத்தை தெரிவு செய்யலாம். அல்லது தரப்பட்டிருக்கும் முதலாவது வசனத்தில் இருந்தே ஓதுவதற்கு ஆரம்பிக்கலாம். இவை இரண்டும் தெரிவு செயப்பட்டதும். அந்த வசனம் அல்குரானின் எத்தனையாவது ஜுஸ்உ (பகுதி) என்பதும் அல்குரானில் எத்தனையாவது பக்கம் என்பதும் காட்டப்படும்.


                 
03. Recitation
இந்த கட்டத்திற்குள் அழகிய முறையில் ஓதக்கூடிய காரிகளின் (அல்குரானை இனிமையாக ஓத கூடியவர்கள்) கிறாத் (அல்குரான் ) களை ஒலி வடிவில் கேட்கலாம் இந்த பகுதியில் நம்மக்கு விருப்பமான காரிகளின் கிறாத்களை தரப்பட்டிருக்கும். drop down menu வில் இருந்து தெரிவு செய்யலாம், இமாம் அப்துல் றஹ்மான் சுதைசி, இமாம் ஷுரைம், ஷேய்க் அஹ்மத் அல் அஜமி , ஷேய்க் முஹம்மது அயூப் உட்பட பிரபலமான காரிகளின் கிறாத்களினை தெரிவு செய்து கேட்கலாம். ஷேய்க் மிஷாரி அல் பாஸியின் குரல் வழி ஓதப்பட்ட ஒலிக்கோப்புகள் Default ஆகா தரப்பட்டிருக்கின்றன. இதன் கீழே காணப்படும் Play Button இனை  அழுத்துவதன் மூலம் நாம் கண்களினால் அல்குரானிய வசனங்களை Screen இலே பார்த்து கொண்டிருந்தவாறே   ஷேய்க் மிஷாரி அல் பாஸியின் குரல்வழி உச்சரிப்பினையும் ராகத்தினையும் கேட்கலாம். எந்த வசனம் ஒலித்து கொண்டிருக்கின்றதோ அந்த வசனம் நிழட்படுத்தபட்டு காண்பிக்கப்படும். குறித்த வசனத்தினை மீண்டும் ஒரு தடவை கேட்க   வேண்டுமாயின் அவ்வசனத்தின் மீது ஒரு தடவை கிளிக் செய்யுங்கள்,


                        
அல்குரானை அழகிய ராகதுடனோ அல்லது எழுத்துக்களை கோர்த்து சரளமாகவும் திருத்தமாகவும் ஓதுவதற்கு முடியாதவர்கள் தனிமையில் Headset இனை   காதுகளில் அணிந்து கொண்டு Screen ஐ பார்த்தபடி ஓதிக்கொண்டே செல்லலாம் உங்களுக்கு அருகில் இருந்தே இமாம் மிஷாரி அல் பாஸி ஓதி தருவது போன்று இருக்கும் இப்பயிற்சியினை தொடர்தேர்ச்சியாக கடைப்பிடித்தால் காலப்போக்கில் சுயமாக அல்குரானை அதற்கேயுரிய உச்சரிப்புடனும் ராகத்துடனும் இனிமையாக ஓதக்கூடிய ஆற்றல் தானாக வளர்ந்துவிடும்.

04. Translation
இந்த கட்டத்தில் உலகின் பல்வேறு முக்கியமான மொழிகள் நிரற்படுத்த பட்டிருக்கும். இதில் நமது தாய் மொழியான தமிழினை அல்லது சர்வதேச மொழியான ஆங்கிலத்தினை தெரிவு செய்து கொள்ளலாம். இந்த கட்டத்தில் மூன்று வகையான தெரிவுகள் தர பட்டிருக்கும். அல்குரான் வசனங்களுக்கான மொழிபெயர்ப்பினையும் வாசித்து கொள்ள முடியுமாக இருப்பது இத்தளத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். இந்த கட்டத்தில் மூன்று வகையான தெரிவுகள் தர பட்டிருக்கும்.
           

                        
Fixed translation box என்ற கட்டளையின் முன்னால் உள்ள சிறய வட்டத்திற்குள் கிளிக் செய்தவுடன் இப்பொழுது நீங்கள் ஓதிக்கொண்டிருக்கின்ற குறித்த வசனத்தின் மொழி பெயர்ப்பு அந்த வசனத்தை தொடர்ந்தவாறே தனியாக ஒரு கட்டத்தினுள் காட்டப்படும். கீழே தரப்பட்டிருக்கும் Screen shot இனை பார்க்கவும்.



அல்லது நீங்கள் Translate on mouse over எனும் தெரிவின் முன்னால் கிளிக் செய்வதன் மூலமாக உங்கள் mouse இன் அசைவிற்கு ஏற்ப தேவையான இடங்களில் மட்டும் மொழிபெயர்ப்பினை அறிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த வசனத்தின் மொழிபெயர்ப்பை வாசிக்க விரும்புகிறீர்களோ அந்த வசனத்தின் மீது  mouse இனை கொண்டு செல்லவும் உடனே மொழிபெயர்ப்பு காட்டப்படும்.



அல்லது நீங்கள் அல்குரான் ஓதப்படும் ஒலியினை கேட்டவாறே மொழிபெயர்ப்பினை மாத்திரம் படிப்பதற்கு விரும்பினால் இத்தளத்தின் மேற்பகுதியில் காணப்படும் Translation எனும் தெரிவினை கிளிக் செய்யவும். 



05 Quran
அடுத்து Quran என தலைப்பிடப்பட்டிருக்கும், கட்டத்திற்கு செல்லுங்கள் இங்கு எதுவும் செய்ய தேவையில்லை நீங்கள் அல்குரானின் ஏனைய எழுத்ணி முறைகளை அறிய விரும்பினால் மட்டும் கிளிக் செய்து பார்க்கலாம். ஆனால் தரப்பட்டிருக்கும் இந்த பொதுவான  எழுத்தணி முறை  இலகுவானதாகும்.


06.Disply Option
Disply Option எனும் கட்டத்தில் நீங்கள் உங்களுக்கு பிடித்தமானஎழுத்துருக்களை (fonts) மாற்றிக்கொள்ளலாம். அல்லதுஅல்குரான் வசன எழுத்துக்கள் கொஞ்சம் பெரிதாக இருந்தால்தாமதமில்லாமல்  சரளமாக ஓதமுடியுமே என எண்ணுபவர்கள்உங்களின்  விருப்பதிற்கு    ஏற்ப எழுத்துக்களின் அளவினைபெருப்பித்து கொள்ளலாம்.



****    ****    ****


இந்த  Tanzil Project  2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இணைய வழியாக அல்குரான் வசனங்களை தேடுபவர்களுக்கோ அல்லது அல்குரான் சம்பந்தப்பட்ட இணையதளங்களை நிருவகிப்பவர்களுக்கோ மிக சரியான எழுதுக்களுடன் அல்குரான் வசனங்களை  தருவதை நோக்கமாக கொண்டே இஸ்லாமிய சகோதரர்  Hamid Zarrabi-Zadeh என்பவரால் உருவாக்கப்பட்டது.


2008 ஆம் ஆண்டுக்கு முன் அல்குரான் வசனம் ஒன்றினை  Internet  Search engine   வாயிலாக தேடியபோது  சில பொழுதுகளில் எழுத்து பிழைகளுடன் கூடிய வசனங்களும் இணையத்தில் காணப்பட்டமையே இத்திட்டத்தை முன்னெடுக்க காரணமாக இருந்ததென இவர் விவரிக்கின்றார்.  இது பற்றிய  மேலதிக தகவல்களை பெற இவ்விணைப்பினை கிளிக் செய்து வாசிக்கவும்
http://tanzil.info/wiki/Tanzil_Project