எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...

புதன், அக்டோபர் 19, 2011

அல்குரானை இலகுவான முறையில் ஓத கற்று கொள்ளவும் அல்குரான் வசனங்களின் மொழிபெயர்ப்பினை அறிந்து கொள்ளவும் வழிகாட்டும் ஒரு இணையத்தளம்



இலகுவான முறையில் அல்குரானை ஓத கற்று கொள்ளவும் அல்குரான் வசனங்களின்  மொழிபெயர்ப்பினை அறிந்து கொள்ளவும் வழிகாட்டுகிறது Tanzil Info எனும் இந்த  இணையத்தளம்  http://tanzil.info/  

அல்குரானை அழகிய ராகதுடனோ அல்லது எழுத்துக்களை கோர்த்து சரளமாகவும் திருத்தமாகவும் ஓதுவதற்கு பயற்சி பெற விரும்புவோருக்கு இத்தளம் மிக உபயோகமாக இருக்கும். 



இனி இத்தளத்தினை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம் இத்தளத்தினை பயன்படுதுவதற்கு   சில முக்கியமான்  Option களும் தரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றாக அது பற்றி நோக்குவோம்.



01. Serch Box
இதனுள்  ஒரு குறித்த சொல்லை வழங்கி அந்த சொல் எந்தெந்த வசனங்களில் வந்திருக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம். சில நேரம் குறித்த ஒரு வசனத்தின் ஒரு சொல் நினைவில் இருந்தால் அந்த சொல்லை வைத்து அது எந்த வசனத்தில் எந்தெந்த சூராக்களில் வந்திருக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம். அல்லது சம்மந்தப்பட்ட வினையடியினை ( root مصدر) கொடுத்தும் தேடி கொள்ளலாம், குறிந்த அந்த சொல் எத்னை தடவைகள் எத்தனை வசனங்களில் வந்திருக்கின்றது என்பதனையும் அறிந்து கொள்ளலாம். அல்குரான் வசனங்களை மேற்கோள் காட்டி மார்க்க சொற்பொளிவுகளை நிகழ்த்துபவர்களுக்கும், ஆய்வு கட்டுரைகளை எழுதுபவர்களும் குறித்த ஒரு விடயம் சம்மந்தமாக அல்குரான் வசனங்களை தொகுத்து ஆய்வு செய்வது இலகு படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக நோன்பு பற்றிய அல்குரான் வசனங்களை அறிந்து கொள்ள الصيام என்று தட்டச்சு செய்வதன் மூலமோ அல்லது root என்பதனை கிளிக் செய்து தரப்பட்டுள்ள சொற்களில் صوم என்பதனை தேர்வுசெய்து தேடுவதன் மூலமோ அது பற்றிய அனைத்து அல்குரான் வசனங்களையும் பெற்றுக்கொள்ளலாம்.




02. Browse
இக் கட்டத்திற்குள் Sura என தரப்பட்டிருக்கும் இடத்தில் விருப்பமான அல்குரான் சூரா வினை தெரிவு செய்து கொள்ளலாம். இரண்டாவதாக காணப்படும் Aya எனும் இடத்தில் உங்களுக்கு தேவையான வசனத்தை தெரிவு செய்யலாம். அல்லது தரப்பட்டிருக்கும் முதலாவது வசனத்தில் இருந்தே ஓதுவதற்கு ஆரம்பிக்கலாம். இவை இரண்டும் தெரிவு செயப்பட்டதும். அந்த வசனம் அல்குரானின் எத்தனையாவது ஜுஸ்உ (பகுதி) என்பதும் அல்குரானில் எத்தனையாவது பக்கம் என்பதும் காட்டப்படும்.


                 
03. Recitation
இந்த கட்டத்திற்குள் அழகிய முறையில் ஓதக்கூடிய காரிகளின் (அல்குரானை இனிமையாக ஓத கூடியவர்கள்) கிறாத் (அல்குரான் ) களை ஒலி வடிவில் கேட்கலாம் இந்த பகுதியில் நம்மக்கு விருப்பமான காரிகளின் கிறாத்களை தரப்பட்டிருக்கும். drop down menu வில் இருந்து தெரிவு செய்யலாம், இமாம் அப்துல் றஹ்மான் சுதைசி, இமாம் ஷுரைம், ஷேய்க் அஹ்மத் அல் அஜமி , ஷேய்க் முஹம்மது அயூப் உட்பட பிரபலமான காரிகளின் கிறாத்களினை தெரிவு செய்து கேட்கலாம். ஷேய்க் மிஷாரி அல் பாஸியின் குரல் வழி ஓதப்பட்ட ஒலிக்கோப்புகள் Default ஆகா தரப்பட்டிருக்கின்றன. இதன் கீழே காணப்படும் Play Button இனை  அழுத்துவதன் மூலம் நாம் கண்களினால் அல்குரானிய வசனங்களை Screen இலே பார்த்து கொண்டிருந்தவாறே   ஷேய்க் மிஷாரி அல் பாஸியின் குரல்வழி உச்சரிப்பினையும் ராகத்தினையும் கேட்கலாம். எந்த வசனம் ஒலித்து கொண்டிருக்கின்றதோ அந்த வசனம் நிழட்படுத்தபட்டு காண்பிக்கப்படும். குறித்த வசனத்தினை மீண்டும் ஒரு தடவை கேட்க   வேண்டுமாயின் அவ்வசனத்தின் மீது ஒரு தடவை கிளிக் செய்யுங்கள்,


                        
அல்குரானை அழகிய ராகதுடனோ அல்லது எழுத்துக்களை கோர்த்து சரளமாகவும் திருத்தமாகவும் ஓதுவதற்கு முடியாதவர்கள் தனிமையில் Headset இனை   காதுகளில் அணிந்து கொண்டு Screen ஐ பார்த்தபடி ஓதிக்கொண்டே செல்லலாம் உங்களுக்கு அருகில் இருந்தே இமாம் மிஷாரி அல் பாஸி ஓதி தருவது போன்று இருக்கும் இப்பயிற்சியினை தொடர்தேர்ச்சியாக கடைப்பிடித்தால் காலப்போக்கில் சுயமாக அல்குரானை அதற்கேயுரிய உச்சரிப்புடனும் ராகத்துடனும் இனிமையாக ஓதக்கூடிய ஆற்றல் தானாக வளர்ந்துவிடும்.

04. Translation
இந்த கட்டத்தில் உலகின் பல்வேறு முக்கியமான மொழிகள் நிரற்படுத்த பட்டிருக்கும். இதில் நமது தாய் மொழியான தமிழினை அல்லது சர்வதேச மொழியான ஆங்கிலத்தினை தெரிவு செய்து கொள்ளலாம். இந்த கட்டத்தில் மூன்று வகையான தெரிவுகள் தர பட்டிருக்கும். அல்குரான் வசனங்களுக்கான மொழிபெயர்ப்பினையும் வாசித்து கொள்ள முடியுமாக இருப்பது இத்தளத்தின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். இந்த கட்டத்தில் மூன்று வகையான தெரிவுகள் தர பட்டிருக்கும்.
           

                        
Fixed translation box என்ற கட்டளையின் முன்னால் உள்ள சிறய வட்டத்திற்குள் கிளிக் செய்தவுடன் இப்பொழுது நீங்கள் ஓதிக்கொண்டிருக்கின்ற குறித்த வசனத்தின் மொழி பெயர்ப்பு அந்த வசனத்தை தொடர்ந்தவாறே தனியாக ஒரு கட்டத்தினுள் காட்டப்படும். கீழே தரப்பட்டிருக்கும் Screen shot இனை பார்க்கவும்.



அல்லது நீங்கள் Translate on mouse over எனும் தெரிவின் முன்னால் கிளிக் செய்வதன் மூலமாக உங்கள் mouse இன் அசைவிற்கு ஏற்ப தேவையான இடங்களில் மட்டும் மொழிபெயர்ப்பினை அறிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த வசனத்தின் மொழிபெயர்ப்பை வாசிக்க விரும்புகிறீர்களோ அந்த வசனத்தின் மீது  mouse இனை கொண்டு செல்லவும் உடனே மொழிபெயர்ப்பு காட்டப்படும்.



அல்லது நீங்கள் அல்குரான் ஓதப்படும் ஒலியினை கேட்டவாறே மொழிபெயர்ப்பினை மாத்திரம் படிப்பதற்கு விரும்பினால் இத்தளத்தின் மேற்பகுதியில் காணப்படும் Translation எனும் தெரிவினை கிளிக் செய்யவும். 



05 Quran
அடுத்து Quran என தலைப்பிடப்பட்டிருக்கும், கட்டத்திற்கு செல்லுங்கள் இங்கு எதுவும் செய்ய தேவையில்லை நீங்கள் அல்குரானின் ஏனைய எழுத்ணி முறைகளை அறிய விரும்பினால் மட்டும் கிளிக் செய்து பார்க்கலாம். ஆனால் தரப்பட்டிருக்கும் இந்த பொதுவான  எழுத்தணி முறை  இலகுவானதாகும்.


06.Disply Option
Disply Option எனும் கட்டத்தில் நீங்கள் உங்களுக்கு பிடித்தமானஎழுத்துருக்களை (fonts) மாற்றிக்கொள்ளலாம். அல்லதுஅல்குரான் வசன எழுத்துக்கள் கொஞ்சம் பெரிதாக இருந்தால்தாமதமில்லாமல்  சரளமாக ஓதமுடியுமே என எண்ணுபவர்கள்உங்களின்  விருப்பதிற்கு    ஏற்ப எழுத்துக்களின் அளவினைபெருப்பித்து கொள்ளலாம்.



****    ****    ****


இந்த  Tanzil Project  2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இணைய வழியாக அல்குரான் வசனங்களை தேடுபவர்களுக்கோ அல்லது அல்குரான் சம்பந்தப்பட்ட இணையதளங்களை நிருவகிப்பவர்களுக்கோ மிக சரியான எழுதுக்களுடன் அல்குரான் வசனங்களை  தருவதை நோக்கமாக கொண்டே இஸ்லாமிய சகோதரர்  Hamid Zarrabi-Zadeh என்பவரால் உருவாக்கப்பட்டது.


2008 ஆம் ஆண்டுக்கு முன் அல்குரான் வசனம் ஒன்றினை  Internet  Search engine   வாயிலாக தேடியபோது  சில பொழுதுகளில் எழுத்து பிழைகளுடன் கூடிய வசனங்களும் இணையத்தில் காணப்பட்டமையே இத்திட்டத்தை முன்னெடுக்க காரணமாக இருந்ததென இவர் விவரிக்கின்றார்.  இது பற்றிய  மேலதிக தகவல்களை பெற இவ்விணைப்பினை கிளிக் செய்து வாசிக்கவும்
http://tanzil.info/wiki/Tanzil_Project