எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...
கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், நவம்பர் 09, 2011

கீ போர்டில் ஒரு சில குறுக்குவழி பட்டன்களை தெரிந்து கொள்ளுங்கள்



Short Kut Keys



Cntrl  +  C    OR    Cntrl  +  Insert

காப்பி செய்ய விரும்பும் தகவலை அல்லது பக்கத்தை காப்பி
செய்ய Cntrl + C அல்லது Cntrl + Insert டைப் செய்யவும் .


Cntrl  +  V     OR   Shift   +  Insert

காப்பி செய்ததை சேமித்து வைக்க பேஸ்ட் செய்வோம் .
அப்பிடி பேஸ்ட் செய்ய

Cntrl + V அல்லது Shift  + Insert டைப் செய்யவும் .



Cntrl  +  Z    And     Cntrl  +  Y

முந்தைய செயலுக்கு செல்ல தவறாக ஒரு செய்தி டைப்
செய்தால் முந்தைய செயல் செல்ல அதாவது Undo செய்ய .
Cntrl + Z  டைப் செய்யவும் .


அடடா அவசரப் பட்டு Undo செய்ததை திரும்ப பெற Redo செய்ய
Cntrl + Y டைப் செய்யவும் .





Cntrl  +  F

ஏதாவது பக்கத்தை தேட (இண்டர்ட் உட்பட )Cntrl + F என டைப்
செய்தால் வரும் பெட்டியில் நமக்கு தேவையான எழுத்து
அல்லது முகவரி டைப் செய்து தேடலாம் .


Alt  +  Tab

கடைசியா பார்த்த பக்கத்தை சுலபமாக திறக்க உதாரணத்திற்கு
நெட்டில் ஏதாவது பார்க்கறீங்க ,அப்புறம் அதனை மினிமைஸ்
செய்துவிட்டு ஒரு வோர்ட் பக்கத்தை திறந்து ஒர்க் பண்றீங்க
கடைசியா மினிமைஸ் செய்ததை மீண்டும் ஓபன் செய்ய
Alt + Tab அழுத்திப் பிடித்தால் போதும் .

Cntrl  +  Tab

நெட்டில் பலபக்கங்க்களை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும்
பொழுது கடைசியா பார்த்த பக்கத்திற்கு செல்ல
Cntrl + Tab ஒரு சேர அழுத்துங்க .

Cntrl + Shift + Tab

அப்புறம் மேலே சொன்னது போல நிறைய பக்கங்கள்
திறந்து பார்க்கும் பொழுது அடுத்தடுத்த பக்கத்தை
ஓபன் செய்ய மவுச எடுத்து க்ளிக்காம சுலபமா
Cntrl + Shift + Tab மூன்றையும் க்ளிக்கினால் போதும்.



Cntrl + Backspace


அப்புறம் அட்ரஸ் டைப் பண்ணக்கூடிய இடத்துலையோ
அல்லது வோர்ட் எதுல வேணாலும் டைப் செய்யும்
பொழுது தவறாக வார்த்தை டைப் செய்தால் Backspace
அழுத்தி தவறான வார்த்தையை நீக்குவோம் .

ஆனால் டைப் அடித்த அனைத்து எழுத்தும் தவறென்றால்
(வார்த்தை முழுதும் ) அதனை நீக்க ஒவ்வொரு எழுத்தாக
நீக்காமல் முழுதும் உடனே நீக்க Cntrl + Backspace இரண்டையும்
அழுத்திப் பிடிங்க அவ்வளவு தான் .


Cntrl  + Left Arrow    OR    Cntrl   +  Right Arrow

அப்புறம் ஒரு வாக்கியத்தின் மீது கர்சரை ஓட்ட வலது
அல்லது இடது ஏரோ கீ உபயோகிப்போம் .அது ஒவ்வொரு
எழுத்தாக மாறிப் போகும் .அவ்வாறு இல்லாமல் ஒவ்வொரு
வார்த்தையாக ஜம்ப் செய்து போக Cntrl + வலது அல்லது இடது 
ஏரோ கீ அழுத்தவும் (வலது புறம செல்ல வலது ஏரோ இடது
புறம் செல்ல இடது ஏரோ ).





Cntrl + S

நாம் டைப் செய்யும் தகவல் அல்லது டாக்குமென்ட் ஏதாகிலும்
சேமித்து வைக்க Cntrl + S அழுத்தினால் போதும் .


Cntrl + Home      And     Cntrl + End 

அப்புறம் நாம் ஒரு பக்கத்தை பார்க்கும் பொழுது அது
நீண்டு பெரிதாக இருந்தால் மேலே அல்லது கீழே செல்ல
கர்சரை உருட்ட வேண்டும் .ஏன் இந்த கவலை
பக்கத்தின் மேலே செல்ல Cntrl + Home
பக்கத்தின் கீழே செல்ல Cntrl + End அழுத்தினால் போதும் .





Page Up / Page Down Or Space Bar


சரி படார்னு மேலேயே அல்லது கீழேயே போகாமல்
கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்ல Page Up 
அல்லது கொஞ்சம் கொஞ்சமாக கீழே செல்ல
Page Down Or Space Bar அழுத்தவும் 



Cntrl + P

பார்க்கும் பக்கத்தை பிரிண்ட் செய்ய Cntrl + P





நன்றி 

சனி, ஜூன் 04, 2011

விண்டோஸ் 7 - டிப்ஸ்



நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். குறிப்பிட்ட ஒரு பகுதியை மட்டும் Screen Shot எடுப்பது எப்படி?
வழக்கமாக அனைவரும் Print Screen பட்டனை பயன்படுத்துவார்கள். இது விண்டோஸின் அனைத்து பதிப்புகளிலும் வேலை செய்யும். ஆனால் இது முழு திரையையும் படம் பிடித்துவிட வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு பகுதி மட்டும் படம் பிடிக்க வேண்டுமென்றால், விண்டோஸ் 7, Snipping Tool என்ற மென்பொருளை தருகிறது. Start - Programs - Accessories -Snipping Tool வழியாக, இதனை பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருளை நான்கு வகையாக பயன்படுத்தலாம்.
  • Free-form Snip - திரையில் எந்தப் பகுதி வேண்டுமோ, அதை மௌஸை வைத்து குறித்தால் போதும். அந்தப் பகுதி ஒரு .png படமாக சேமிக்கப்பட்டுவிடும்.
  • Rectangular snip - ஒரு செவ்வகப் பெட்டிக்குள் திரையில் தோன்றுவதை .png இமேஜாக சேமிக்கலாம்.
  • Window Snip - ஒரு ஃபயர் பாக்ஸ் விண்டோவுக்குள் தோன்றுவதை மட்டுமோ, ஒரு ஹெல்ப் மெனு விண்டோவில் தோனறுவதை மட்டுமோ நாம் .png படமாக சேமிக்கலாம்.
  • Full-screen Snip - முழு திரையையும் ஒரு .png படமாக சேமிக்கலாம்
என்னுடைய வன்தட்டுகளை (Hard disk) பாதுகாக்க அடிக்கடி Defragment செய்கிறேன். என் ஹார்டு டிஸ்கில் C,D,E, F என நான்கு டிரைவ்கள் உள்ளன. இவற்றை தனித்தனியாக defrag செய்யாமல், ஒரே கட்டளையில் அனைத்தையும் Defrag செய்ய முடியுமா?
எளிதாகச் செய்யலாம். முதலில் ஒரு புதிய NotePad ஃபைலை திறந்து கொள்ளுங்கள். அதில் பின்வரும் கட்டளைகளை உள்ளிடுங்கள்.
@echo off
defrag.exe -f c
defrag.exe -f d
defrag.exe -f e
defrag.exe -f f
பின்னர் இந்த ஃபைலை defrag.cmd என்ற பெயரில் சேமியுங்கள். பிறகு Start->Run->கிளிக் செய்து cmd என டைப் செய்யுங்கள். DOS திரை வரும். அங்கு defrag.cmd என டைப் செய்யுங்கள். இது போதும். Defrag துவங்கிவிடும்.

விண்டோஸ் 7, XP மற்றும் Vistaவிலும் இந்த கட்டளைகள் வேலை செய்யும்.

நான் தமிழ் எழுத்துருக்களை(fonts) விண்டோஸ் 7ல் இன்ஸ்டால் செய்வது எப்படி?
முந்தைய பதிப்புகளை ஒப்பிடும்போது, முதல்பார்வையில் எழுத்துருக்களை இன்ஸ்டால் செய்வது கடினம் போலத் தான் தோன்றும். ஆனால் இதிலும் மிக எளிதுதான். நான் இரண்டு வழிகளைச் சொல்கிறேன். 
  • முதல் வழி, Fonts இருக்கும் ஃபோல்டர்களை திறந்து கொண்டு, ஃபாண்டுகளின் பெயருக்கு மேல் வலது மௌஸ் பட்டனை அழுத்தி Installஐ தேர்ந்தெடுக்கலாம்.
  • இரண்டாவது வழி, Fonts ஃபோல்டர்களை திறந்து கொண்டு, Alt பட்டனை அழுத்துங்கள். மெனு தோன்றும். அதில் File Menuவில், 'New Font' வழியாக, இன்ஸ்டால் செய்ய வேண்டிய ஃபாண்டுகளை தேர்ந்தெடுங்கள்.
குறிப்பு - Fonts Folder எங்கிருக்கிறது எனத் தெரியாவிட்டால், Control Panelஐ தேர்வு செய்து, Appearance and Personalization என்பதை கிளிக் செய்து, பின்னர் Fonts ஃபோல்டரை கண்டு கொள்ளுங்கள்

வெள்ளி, மே 27, 2011

Internet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க



சிலருக்கு அவர்களது internet browsing ஸ்பீட் ரொம்பவே குறைவாக இருக்கும்.இதை அதிகரிக்க எந்த சாஃப்ட்வேரும்  தேவை இல்லை.பின்வரும் படிசெய்தால் போதும்.


கிளிக் programs--> Run

windows 7 க்கு programs---> search box---> Type "Run"

Run box இல் கீழே உள்ளதை டைப் செய்யவும் 

"gpedit.msc"




இப்போது வரும் புதிய விண்டோக்களில் பின்வருவதை கிளிக் செய்யவும்.


--> Computer Configuration

--> Administrative Templates

--> Network

--> QoS Packet Scheduler

--> Limit Reservable Bandwidth

இதில் Not Configured என்பது கிளிக் செய்யப்பட்டு இருக்கும் இதனை Enable என மாற்றி பின்னர் படத்தில் உள்ளது போல கீழே உள்ள 20 ஐ 0 ஆக்கவும்.



இப்போ OK or APPLY செய்யவும்.
அவ்ளோதான்.

கம்ப்யூட்டர் வேகமாக இயங்க msconfig



யதேச்சையாக நேற்று பழைய பாட புத்தகத்தை திரும்ப பார்த்துக் கொண்டு இருந்தேன் அதில் இருந்த msconfig விஷயம் ஆச்சர்யப்பட வைத்தது. நம் கம்ப்யூட்டரில் தேவை இல்லாமல் ஸ்டார்ட் ஆகும் ப்ரோக்ராம்களை நிறுத்த இது உதவுகிறது. வாருங்கள் என்ன விஷயம் என்று பார்க்கலாம்.


எதற்கு இந்த msconfig? 

உங்கள் கணினியில் நிறைய சாஃப்ட்வேர்கள் நீங்கள் இன்ஸ்டால் செய்து இருப்பீர்கள். அவற்றில் சில கம்ப்யூட்டர் ON ஆன உடன் உங்கள் விண்டோவில் வந்து நிற்கும். சில உங்களுக்கு தெரியமாலயே ஸ்டார்ட் ஆகி இருக்கும். ஒவ்வொரு முறையும் இவற்றை நாம் close செய்வதற்க்கு பதிலாக அவை automatic ஆக ஸ்டார்ட் ஆவதை நிறுத்தி தேவையான போது மட்டும் எடுத்து பயன்படுத்த இது உதவும்.

இதனால் கம்ப்யூட்டர் ஸ்பீட் ஆனது அதிகரிக்கும். RAM ஆனது இடைஞ்சல் எதுவும் இன்றி வேலை செய்யும்.

இது XP, Vista, Windows 7  வேறு விதமாக உள்ளதால் மூன்றையும் தருகிறேன்.

 XP பயனர்களுக்கு 

இதில் Run-->  msconfig

இப்போது கீழே உள்ள விண்டோ வரும்.  அதில் Start Up என்பதை தெரிவு செய்யவும்



இதில் உங்கள் கம்ப்யூட்டர் ON ஆனவுடன் என்ன ப்ரோக்ராம்கள் ஸ்டார்ட் ஆகின்றன என்பது கொடுக்கப்பட்டு இருக்கும். இதில் உங்களுக்கு அடிக்கடி தேவை இல்லாத ப்ரோக்ராம் இருந்தால் அதனை Uncheck செய்து இப்போது OK கொடுத்து விடவும்.

இப்போது restart செய்ய சொல்லி வரும். செய்து விட்டு பாருங்கள் அவை இப்போது Automatic ஆக ஸ்டார்ட் ஆகாது.


Vista பயனர்களுக்கு 

இது இப்போது கைவசம் இல்லாத காரணத்தால் run இல் கொடுத்து முயற்சி செய்யவும். அல்லது start menu வில் search செய்யும் இடத்தில் முழுவதுமாக msconfig என டைப் செய்தால் இந்த விண்டோ கிடைக்கும். அதற்கு பின் செய்முறையில்  Windows 7 க்கும் இதற்கும் ஏதேனும் வித்தியாசம் இருப்பின் கீழே comment இல் சொல்லவும்.


Windows 7 பயனர்களுக்கு

இதிலும் Run-->  msconfig

இதில் வரும் புதிய விண்டோவில் Start up என்பது  கடைசிக்கு முந்தையதாகவே இருப்பதை கவனிக்கவும். இனி மேலே XP க்கு உள்ளது போல அடிக்கடி பயன்படுத்தாத ப்ரோக்ராம்களை Uncheck செய்து விடவும். பின்னர் OK கொடுத்து விட்டு ரீஸ்டார்ட் செய்யவும்.

Virus வந்த pen drive ஐ Format செய்வது எப்படி?



நாம் நமது Pen Drive ஐ Format செய்யும் போது நமக்கு சில சமயம் அது Format ஆவது இல்லை.  முக்கிய காரணமாக வைரஸ் தான் இருக்கக் கூடும். இதனை எப்படி சரி செய்வது என்றும், அதோடு ஒரு pen drive வாங்கினால் அதை எப்படி பாதுகாப்பது என்றும் தெரிந்து கொள்ளலாம்.


முதலில் format செய்யும் பிரச்சினையை சரி செய்வோம்.
உங்களால் உங்கள் pen drive ஐ நேரடியாக Format செய்ய இயலவில்லை எனில் 


 Right Click "My Computer"
-->Manage
--> Disk Management
--> Right Click your Pen drive
--> "Change Drive Letter And Paths"
Select ஆகி உள்ள letter ஐ  remove செய்யவும்.




இப்போது அதே இடத்தில உங்கள் pen drive மீது ரைட் கிளிக் செய்து format கொடுக்கவும். 
இப்போது Format ஆகிவிடும் பின்னர் மீண்டும் ரைட் கிளிக் செய்து அதற்க்கு லெட்டர் add செய்து விடவும், இல்லை என்றால் உங்கள் pen drive my computer இல் தெரியாது.


இந்த முறையில் format ஆகவில்லை என்றால் உங்கள் கம்ப்யூட்டர் அந்த pen drive ஐ format செய்யாது. வேறு கம்ப்யூட்டர் இல் முயற்சி செய்யவும்.


எப்படி pen drive ஐ பாதுகாப்பது??


1 . இன்று எல்லா pen drive களும் ஒரே தரத்தில் கிடைத்தாலும் நண்பர்களிடம் கேட்டு விட்டு அவர்கள் எத்தனை நாட்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பதை பொருத்து அதை முயற்சி செய்யலாம். (முழுவதுமாக நம்ப முடியாது )

2 . Browsing Center களில் பயன்படுத்த வேண்டாம்.

3 .  மூச்சுக்கு முன்னூறு முறை Format அடிக்காதீர்கள்.  தேவை இருப்பின் மட்டும் செய்யவும்.

4 . Pen drive வேறு யாரிடமாவது கொடுத்து இருந்தால் பின்னர் வாங்கும் போது ஸ்கேன் செய்து வைரஸ் இருந்தால் மட்டும் Format செய்யலாம்.

5 . டெல்லியில் Electronic பஜாரில் மட்டும் pen drive ஐ வாங்க வேண்டாம்.

6 . தண்ணீரில் விழுந்து விட்டால் தலைதெரித்து கம்ப்யூட்டர் இல் செருக வேண்டாம். அதை நன்றாக காயவைத்து மட்டும் தண்ணீர் போய்விட்டது என்று தெரிந்த பின் மட்டும் செருகவும்.

7 . Pen drive சொருகியவுடன் ஸ்கேன் செய்ய சிறந்த சாப்ட்வேர் 
USB-Disk-Security

திங்கள், மே 16, 2011

யூடியூப் வீடியோக்களை தேவையான போர்மட்டில் தரவிறக்க செய்வதற்கு

யூடியூப் இணையதளத்தில் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு ஏகப்பட்ட படங்கள் உள்ளன.
படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளிவருகிறதோ இல்லையோ இதில் முன்கூட்டியே வெளியிடப்படும். இதில் படங்களைப் பார்ப்பவர்கள் பிடித்திருந்தால் தரவிறக்க வேண்டும் என நினைப்பார்கள்.
சிலர் மென்பொருள்களின் மூலமும், சில இணையதளங்களின் மூலமாகவும் படங்களைத் தரவிறக்கம் செய்வார்கள். இதில் படங்கள் FLV என்ற வடிவத்தில் இருக்கும். இதனால் படங்களைத் தரவிறக்கி மறுபடியும் நமக்குப் பிடித்த வடிவத்திற்கு மாற்றுவோம்.
வேறு எந்த மென்பொருளின் துணையின்றியும் வேறு இணையதளத்திற்குச் செல்லாமலும் பயர்பொக்ஸ் உலவியில் ஒரு நீட்சியைச் சேர்ப்பதன் மூலம் எளிதாக யூடியூப் படங்களைத் தரவிறக்க முடியும். இந்த நீட்சியின் பெயர் Easy Youtube Video Downloader.
இதில் உள்ள சிறப்பு வசதி என்னவென்றால் பார்த்துக் கொண்டிருக்கிற படம் பிடித்திருந்தால் நேரடியாக படத்திற்கு கீழேயே தரவிறக்கம் செய்வதற்கான இணைப்பில் வேண்டிய வகையைத் தேர்வு செய்து தரவிறக்கலாம்.
Mp3, Mp4, FLV மற்றும் யூடியூபின் புதிய வசதியான High Definition வகையிலும் தரவிறக்க முடியும். சில படங்கள் HD யில் இல்லாமல் இருக்கும். அவற்றிற்கு கிழே HD என்ற வசதி மட்டும் இருக்காது.
பின்னர் பயர்பொக்ஸ் உலவியை ஒருமுறை மறுதொடக்கம் செய்து விட்டு யூடியூப் தளத்திற்குச் சென்று எதாவது ஒரு படத்தைக் கிளிக் செய்து பாருங்கள். வீடியோவிற்குக் கிழே Download as என்ற மெனு புதியதாக இருக்கும். அதில் வேண்டிய வடிவத்தைத் தேர்வு செய்தால் படம் உங்கள் கணணிக்கு எளிதாக தரவிறக்கப்படும்.
குரோம் உலவிக்கும் இந்த நீட்சி தரப்பட்டுள்ளது.
பயர்பொக்ஸ் நீட்சி
குரோம் நீட்சி

செவ்வாய், மே 10, 2011

கணினியை பராமரிக்க எளிய வழிமுறைகள்



இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் புறொக்கிறாம்களை (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்) குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது. கணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் புறொக்கிறாம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன.நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனற்றதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம். சில இணையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install)உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது. எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபிடித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வழிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும். நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம். கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள். கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒப்றேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs)கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல். எப்படிச் செய்வது? உங்கள் கணினியில்My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:)என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Propertiesஎன்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும். அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும். அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம். Defragment Nowஎன்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம். Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Startஎன்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும். சில ஒப்றேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்கும். அதற்கும் Yesபொத்தானை அழுத்தவும். இப்போது கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது. கணினி ஸ்கான் செய்வதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.

பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா?



கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு கம்ப்யூட்டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா? அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப் போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட்வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் பறிபோகும் வாய்ப்புண்டு.
2. உங்கள் நிதி சார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அதுபோல பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் காப்பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசைக்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது.
3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூலம் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. இதனாலும் உங்கள் பெர்சனல் தகவல்கள் போக வாய்ப்புண்டு.
4. பொதுக் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அழித்துவிடுங்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்துவிடுங்கள். அல்லது Delete All பட்டனைத் தட்டுங்கள்.
5. இன்னொரு சின்ன வேலையும் பாதுகாப்பானதே. கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரியில் இருக்கும் பைல்களை அழித்துவிடும்.