எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...

புதன், நவம்பர் 09, 2011

கீ போர்டில் ஒரு சில குறுக்குவழி பட்டன்களை தெரிந்து கொள்ளுங்கள்



Short Kut Keys



Cntrl  +  C    OR    Cntrl  +  Insert

காப்பி செய்ய விரும்பும் தகவலை அல்லது பக்கத்தை காப்பி
செய்ய Cntrl + C அல்லது Cntrl + Insert டைப் செய்யவும் .


Cntrl  +  V     OR   Shift   +  Insert

காப்பி செய்ததை சேமித்து வைக்க பேஸ்ட் செய்வோம் .
அப்பிடி பேஸ்ட் செய்ய

Cntrl + V அல்லது Shift  + Insert டைப் செய்யவும் .



Cntrl  +  Z    And     Cntrl  +  Y

முந்தைய செயலுக்கு செல்ல தவறாக ஒரு செய்தி டைப்
செய்தால் முந்தைய செயல் செல்ல அதாவது Undo செய்ய .
Cntrl + Z  டைப் செய்யவும் .


அடடா அவசரப் பட்டு Undo செய்ததை திரும்ப பெற Redo செய்ய
Cntrl + Y டைப் செய்யவும் .





Cntrl  +  F

ஏதாவது பக்கத்தை தேட (இண்டர்ட் உட்பட )Cntrl + F என டைப்
செய்தால் வரும் பெட்டியில் நமக்கு தேவையான எழுத்து
அல்லது முகவரி டைப் செய்து தேடலாம் .


Alt  +  Tab

கடைசியா பார்த்த பக்கத்தை சுலபமாக திறக்க உதாரணத்திற்கு
நெட்டில் ஏதாவது பார்க்கறீங்க ,அப்புறம் அதனை மினிமைஸ்
செய்துவிட்டு ஒரு வோர்ட் பக்கத்தை திறந்து ஒர்க் பண்றீங்க
கடைசியா மினிமைஸ் செய்ததை மீண்டும் ஓபன் செய்ய
Alt + Tab அழுத்திப் பிடித்தால் போதும் .

Cntrl  +  Tab

நெட்டில் பலபக்கங்க்களை திறந்து பார்த்துக் கொண்டிருக்கும்
பொழுது கடைசியா பார்த்த பக்கத்திற்கு செல்ல
Cntrl + Tab ஒரு சேர அழுத்துங்க .

Cntrl + Shift + Tab

அப்புறம் மேலே சொன்னது போல நிறைய பக்கங்கள்
திறந்து பார்க்கும் பொழுது அடுத்தடுத்த பக்கத்தை
ஓபன் செய்ய மவுச எடுத்து க்ளிக்காம சுலபமா
Cntrl + Shift + Tab மூன்றையும் க்ளிக்கினால் போதும்.



Cntrl + Backspace


அப்புறம் அட்ரஸ் டைப் பண்ணக்கூடிய இடத்துலையோ
அல்லது வோர்ட் எதுல வேணாலும் டைப் செய்யும்
பொழுது தவறாக வார்த்தை டைப் செய்தால் Backspace
அழுத்தி தவறான வார்த்தையை நீக்குவோம் .

ஆனால் டைப் அடித்த அனைத்து எழுத்தும் தவறென்றால்
(வார்த்தை முழுதும் ) அதனை நீக்க ஒவ்வொரு எழுத்தாக
நீக்காமல் முழுதும் உடனே நீக்க Cntrl + Backspace இரண்டையும்
அழுத்திப் பிடிங்க அவ்வளவு தான் .


Cntrl  + Left Arrow    OR    Cntrl   +  Right Arrow

அப்புறம் ஒரு வாக்கியத்தின் மீது கர்சரை ஓட்ட வலது
அல்லது இடது ஏரோ கீ உபயோகிப்போம் .அது ஒவ்வொரு
எழுத்தாக மாறிப் போகும் .அவ்வாறு இல்லாமல் ஒவ்வொரு
வார்த்தையாக ஜம்ப் செய்து போக Cntrl + வலது அல்லது இடது 
ஏரோ கீ அழுத்தவும் (வலது புறம செல்ல வலது ஏரோ இடது
புறம் செல்ல இடது ஏரோ ).





Cntrl + S

நாம் டைப் செய்யும் தகவல் அல்லது டாக்குமென்ட் ஏதாகிலும்
சேமித்து வைக்க Cntrl + S அழுத்தினால் போதும் .


Cntrl + Home      And     Cntrl + End 

அப்புறம் நாம் ஒரு பக்கத்தை பார்க்கும் பொழுது அது
நீண்டு பெரிதாக இருந்தால் மேலே அல்லது கீழே செல்ல
கர்சரை உருட்ட வேண்டும் .ஏன் இந்த கவலை
பக்கத்தின் மேலே செல்ல Cntrl + Home
பக்கத்தின் கீழே செல்ல Cntrl + End அழுத்தினால் போதும் .





Page Up / Page Down Or Space Bar


சரி படார்னு மேலேயே அல்லது கீழேயே போகாமல்
கொஞ்சம் கொஞ்சமாக மேலே செல்ல Page Up 
அல்லது கொஞ்சம் கொஞ்சமாக கீழே செல்ல
Page Down Or Space Bar அழுத்தவும் 



Cntrl + P

பார்க்கும் பக்கத்தை பிரிண்ட் செய்ய Cntrl + P





நன்றி