எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...
சிந்தனைக்கு சில லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிந்தனைக்கு சில லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, டிசம்பர் 24, 2011

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான யூத ஊடகங்கள் (அவசரமாக வாசியுங்கள்)

அலாவுத்தீன் இம்தாதி

நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87) அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181) அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64) அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46) அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுவது (3:75) பூமியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது, யுத்தச் சூழலை உருவாக்குவது (5:64) முஃமீன்களை கடும் பகைவர்களாகக் கருதுவது (3:118-119) ஒப்பந்தங்களை முறிப்பது (2:100) மார்க்கத்தை கேலிப் பொருளாகவும் விளையாட்டாகவும் கருதுவது (5:57) தடை செய்யப்பட்ட பொருள்களை உண்பது, மக்கள் சொத்தை முறைகேடாக உண்பது, வட்டியை உண்பது (4:161) உலக வாழ்வை அளவு கடந்து நேசிப்பது, மரணத்தை வெறுப்பது (2:96) ஈவு, இரக்கத்தைத் தொலைத்து எந்தப் பழிபாவத்துக்கும் அஞ்சாமல் மனதைக் கல்லாக இறுக வைத்துக் கொள்வது (5:13)

இவையெல்லாம் யூதர்களின் குணங்களும் இழிவான செயல்களுமாகும் என்று அல்லாஹ் (சுபு) தனது திருமறைக் குர்ஆனில் அடையாளம் காட்டியிருக்கிறான்.

இந்த இழிகுணம் மற்றும் ஈனச் செயல்களின் காரணமாக வரலாற்றில் உலகின் எந்த பாகத்திலும் யூதர்கள் நிம்மதியாக வாழ்ந்ததுமில்லை, வாழவிடப்பட்டதும் இல்லை. உலகின் பலதேசங்களில் மன்னர்களின் ஆணைக்கிணங்கவே இவர்கள் கடுந்துன்பங்களுக்குள்ளாக்கப்பட்டார்கள்; அடித்து விரட்டப்பட்டார்கள். இதனால் மிக நீண்ட காலமாகவே இவர்கள் தங்களுக்கென ஒரு நாடு இல்லாமல் நாடோடிகளாகவே திரிந்தார்கள். இதன் விளைவாக நமக்கொரு நாடு வேண்டும்; நம்மை ஒடுக்கிய உலகத்தை நாம் மேலாதிக்கம் செய்து பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் 1700களின் மத்தியில் இவர்களுக்கு ஏற்பட்டு அதற்கான செயல்வடிவங்களும் ஏற்படத் தொடங்கின.

இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு 1760களிலிருந்து பல ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். அந்நிலையில் ஜெர்மனியில் வசித்துக் கொண்டிருந்த ’ஆதம்வைஸ் ஹாரிபட்’ என்ற யூத அறிஞர் 1776 ஆம் ஆண்டில் `பேரொளியாளர்களின் சங்கமம்’ என்ற பொருள்படும் இதழ் ஒன்றை யூதர்களிடையே ரகசியமாகச் சுற்றுக்கு விட்டு வந்தார். அவ்விதழில் “கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம் யூத இனம் மட்டுமே! ஆகவே அவர்களே இவ்வுலகை ஆளவும் ஆதிக்கம் செலுத்தவும் உரிமையுள்ளவர்கள்” என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்தி பல ஆக்கங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இது சிதறிக் கிடந்த யூதர்களை ஒருங்கிணைக்கப் பெரிதும் உதவியதுடன் அவர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களுக்கும் வலுசேர்த்தது.

1869ஆம் ஆண்டில் `ஹாஹாம் ஷெரோன்’ என்ற யூதரின் (ஹாஹாம் என்றால் யூதர்களின் மொழியில் ‘சித்தாந்த’ குரு என்று பொருள்) தலைமையில் “யூதர்களை ஒருங்கிணைப்பது, உலகை மேலாதிக்கம் செய்வது” என்ற தலைப்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஷெரோன் இப்படிக் கூறினார்.

யூதர்களாகிய நாம் இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய வேண்டுமானால் நமக்கு இரண்டு ஆற்றல்கள் தேவை. ஒன்று, ஏராளமான தங்கம். மற்றொன்று பத்திரிக்கை (அக்காலத்தில் தங்கம்தான் பணமாக புழக்கத்தில் இருந்தது என்பதையும் ஊடகமாக அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்)

ஷெரோனின் யோசனைக்கேற்ப யூதர்கள் ஏராளமான தங்கங்களை அதாவது பொருளாதாரத்தைச் சேமிக்கத் தொடங்கினார்கள். அதே சமயம் ஊடகங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். தாங்களே ஊடகங்களை உருவாக்குவது, வளர்ந்த ஊடகங்களில் ஊடுருவி தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது, பரவலான மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ள ஊடகங்களை விலைக்கு வாங்குவது என்று தொடங்கிய அவர்களின் ஊடக ஊடுருவல் இன்று மலைக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

உலகிலுள்ள மொத்த ஊடகங்களில் 25 சதவீத ஊடகங்கள் இன்று யூதர்களுக்குச் சொந்தம். அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வளர்ந்த, முன்னணி ஊடகங்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஊடகங்களில் 52 சதவீத ஊடகங்கள் யூதர்களுக்குச் சொந்தம். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் வெளியாகும் முன்னணி இதழ்களில் பெரும்பாலானவை யூதர்களுக்குச் சொந்தம்.யூதர்கள் ஊடகங்களின் மீது மூன்று வழிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.

1.ஊடகங்களை உருவாக்குவது, 2. வளர்ந்த ஊடகங்களை மட்டும் விலைக்கு வாங்குவது, 3. முன்னணி ஊடகங்களின் பங்குகளை அதிகமாக வாங்கிக் குவித்துக் கொள்வது.

அமெரிக்காவில் பெருவாரியான வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள “நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், டெய்லி நியூஸ்” ஆகிய நாளேடுகளின் 80 சதவீதப் பங்குகள் இன்று யூதர்களுக்குச் சொந்தமாகும்.

அதேபோல வாரம் ஒன்றுக்கு 5 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்க்கும் `டைம்’ வார ஏட்டின் பெரும்பான்மையான பங்குகளை ஜான்மேயர் என்ற யூதர் வைத்திருக்கிறார். மிகவும் பிரபலமான `நியூஸ் வீக்’ இதழை மால்கம் மேயர் என்ற யூதர் 1973 ஆம் ஆண்டில் வாங்கினார். அதன் நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் இன்று யூதர்களின் கையிலேயே இருக்கிறது.

`ஃபார்டுவர்டு’ என்ற வார இதழின் பெரும் பங்குகளை யூதர்கள் கட்டுப்படுத்துவது போலவே `நியூயார்க் போஸ்ட்’ என்ற நாளேட்டின் பெரும்பான்மைப் பங்குகளை நியூஸ்கார்ப்பரேஷனின் முதலாளியும் நம்ம ஊரு ஸ்டார், ஜீ குழுமத்தின் அதிபருமான `ரூபர்ட் முர்டோக்’ என்ற யூதர் கட்டுப்படுத்துகிறார்.

அமெரிக்காவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ள `வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழும் யூதர்களின் பிடியிலிருந்து தப்பவில்லை.

இந்த நாளிதழின் தலைமைப் பீடத்தில் 1933 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யூதர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதன் தொழிலாளர் நலன் நிருவாகக் கமிட்டியில் `லாரீ இஸ்ரேல்’ என்ற யூதர் தலைவராக இருந்து வருகிறார்.

அமெரிக்காவிலுள்ள நியூஆர்லியன்ஸ் நகரத்திலிருந்துவெளிவரும் ’பீகான்டைம்ஸ்’ என்ற நாளேட்டை நியூஹவுஸ் நிறுவனத்தின் யூத முதலாளி வாங்கினார்.

அந்த நாளிதழை வாங்கியபோது நியூ ஆர்லியன்ஸ் நகரில் விழா நடந்தது. அதில் உரையாற்றிய நியூஹவுஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறினார் :- “நான் பீகான் டைம்ஸை வாங்கியபோதே நியூ ஆர்லியன்ஸ் நகரையும் வாங்கிவிட்டேன்”!

இன்று நியூ ஹவுஸ் என்ற யூத நிறுவனம் 12 தேசங்கடந்த அதாவது கண்டங்களைக் கடந்த நாளிதழ்கள், 24 தொலைத் தொடர்பு நிறுவனங்கள், 26 தேசிய இதழ்கள், 78 நாளேடுகள் மற்றும் உலகெங்கும் எண்ணற்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் கூட்டு என்று தனது ஊடக ஆதிக்கத்தைப் பரப்பி வருகிறது.

பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் மிகப்பிரபலமும் செல்வாக்கும் படைத்த ’டைம்ஸ்’ நாளேட்டை ரூபர்ட் முர்டோக் கைப்பற்றிக் கொண்டார். மேலும் சண்டே டைம்ஸ், சன், நியூஸ்ஆஃப்த வேல்ட் போன்ற நாளேடுகளும் சிட்டி மேகசின் என்ற வார ஏடும் ரூபர்ட் மூர்டோக்குக்குச் சொந்தம்.

பலகோடி மக்களின் “அறியாமையைப் போக்கி அறிவொளி ஏற்றும்’’ நாற்றமெடுத்த ‘ப்ளேபாய்’ இதழும் யூதர்களுக்குச் சொந்தமானதே. 1855ஆம் ஆண்டில் யூதர்களால் தொடங்கப்பட்ட டெய்லி டெலிகிராப் நாளேடு யூதர்களின் ஆதிக்கத்தை இன்றும் பிரிட்டனில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸில்

ஆஸ்திரேலியாவில் ரூபர்ட் முர்டோக் என்ற யூதர் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாளேடு மற்றும் வார ஏடுகளைச் சொந்தமாக வைத்திருக்கிறார். இவையனைத்தும் முன்னணி ஏடுகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவில் முன்னணி ஏடுகளையும் செய்தி நிறுவனங்களையும் யூதர்களே சொந்தமாகக் கொண்டுள்ளனர். போரிஸ் பெர்ஸோவ்ஸ்கி, கோசின்ஸ்கி ஆகிய இரு யூதர்களும் ரஷ்யாவிலுள்ள ஏராளமான ஊடகங்களின் முதலாளிகளாக உள்ளனர். ரஷ்ய மொழியில் வெளிவருகிற மிகப் பிரபலமான நாளேடுகளான சேஃப் துன்யா, நோஸாஃபோஸீமாய, அஸ்ஃபசோதா ஆகிய நாளேடுகளும் ஈதோகீ, ஓஹூ நியூக் முதலான வார ஏடுகளும் மேற்படி இரு யூதர்களுக்கே சொந்தம்.

இவை தவிர ஏராளமான அச்சு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் இவர்கள் இருவருக்கும் சொந்தமாக உள்ளன. பிரான்சில் ஷார்ல் ஹாப்ஸ் என்ற யூதர் 1935 ஆம் ஆண்டில் ஹாப்ஸ் செய்திகள் என்ற பெயரில் ஒரு செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் அச்செய்தி நிறுவனத்திலிருந்து ’பிரஞ்ச் பிரஸ்’ என்ற தினசரி வெளிவந்தது. இதுவும் இதுபோன்ற எண்ணற்ற பல ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் யூதர்களுக்குச் சொந்தமாக இன்று பிரான்சில் உள்ளன.

உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மின்னணு ஊடகங்களிலும் ஆயிரக்கணக்கான அச்சு ஊடகங்களிலும் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதை முன் பக்கங்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். . எனினும் அந்தப் பக்கங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அடையாளம் காட்டியிருக்கிறோம். அதுவும் உலகளவில் மிகவும் பிரபலமடைந்த ஊடகங்களின் நிலையை மட்டுமே அடையாளம் காட்டி இருக்கிறோம் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு ஒரு நாடு இல்லாமல் – போக்கிடமில்லாமல் நாடோடிகளாக யூதர்கள் திரிந்து கொண்டிருந்த நிலையில், தங்களுக்காக ஒரு நாடு, ஏராளமான சொத்துக்கள், ஊடகங்களில் ஊடுருவல், மேலாதிக்கம் என்று சிந்தித்துக் களமிறங்கியதில் “ஏதோ ஒரு வகையில்” நியாயமிருக்கலாம்.

ஆனால் இன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாலஸ்தீன நிலப்பரப்பை அமெரிக்க, ஐரோப்பிய ஷைத்தானியப் பேரரசுகளின் துணையுடன் சர்வாதிகாரமாக ஆக்ரமித்துக் கொண்டு அதில் தங்களுக்கென ஒரு நாட்டையும் இராணுவத்தையும் உருவாக்கிக் கொண்டு பாலஸ்தீன முஸ்லிம்களை ஒடுக்கிப் படுகொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், ஊடகங்களில் இந்தளவுக்கு வெறித்தனமான ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருப்பது ஏன்? இதுதான் மிகவும் முக்கியமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய விசயம். அவர்கள் இன்றும் இந்த அளவுக்கு ஊடகங்களில் வெறித்தனமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதற்கு முக்கியமான மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.

1. வர்த்தகச் சூதாட்டம். அதாவது இன்றைய உலகமயமாக்கல் சூழலில், உலக நாடுகளை நிதிச்சந்தைக் கட்டுப்படுத்தும் சூழலில், எந்த ஒரு நிறுவனமும் பங்குச்சந்தைக்குள் நுழைந்து கோடி கோடியாய்க் கொள்ளையடிக்கலாம் என்ற சூழலில், வளர்ந்த, தேசங்கடந்த ஊடகங்களின் மூலம் பங்குச் சந்தையில் கோடி கோடியாய் லாபமீட்டலாம் என்பதுடன் படிப்படியாக பங்குச் சந்தையையே கைப்பற்றி உலக நாடுகளை ஆட்டுவிக்கலாம். அத்துடன் பங்குகளை ஒரே நேரத்தில் உருவி பங்குச்சந்தையையும் அதைச்சார்ந்து நிற்கும் உங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் ஆட்டங்காணச் செய்வோம் என்று மிரட்டி பல காரியங்களை பல நாடுகளின் அதிபர்கள் மூலமே சாதித்துக் கொள்ளலாம். மேலும் ஊடகங்கள் கைவசம் இருப்பதால் மந்த நிலையில் இருக்கும் பங்குச் சந்தையைக் கூட சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஏற்றம் காணுகிறது. கொள்ளை லாபம் கொட்டப்போகிறது என்று புளுகி, சாதாரண, நடுத்தர முதலீட்டாளர்களை முதலீடு செய்ய வைத்துக் கொள்ளையிடலாம். மொத்தத்தில் பலதேசங்களை மொட்டையடிக்கலாம். பலதேசங்களை மிரட்டலாம், ஆட்டுவிக்கலாம், காரியம் சாதிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் இன்று வளர்ந்த, முன்னணி அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் கொள்ளை லாபத்தில் தான் இயங்குகின்றன. விளம்பரம் மற்றும் அரசின் சலுகைகள் மூலம் கோடி கோடியாய் லாபமீட்டுகின்றன. பெருந்தொழில் அதிபர்களின் தரகர்களாகச் செயல்பட்டு டாலர்களில் குளிக்கின்றன. மேலும் தங்களது உற்பத்திப் பொருட்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களையும் ‘உன்னதமாகச்’ சித்தரித்து மக்கள் மூளையில் திணித்து அதன் மூலமும் பில்லியன் கணக்கில் அறுவடை செய்கின்றன.

2. கருத்தியல் பயங்கரவாதம். உண்மைகளை மறைப்பது, திரிப்பது, அவதூறுகளையும் பீதியையும் பரப்புவது. அதாவது கடந்த கால உண்மைகளை மறைத்து, மேற்குலக அரசுகள் நிகழ்த்திய / நிகழ்த்தி வருகிற வன்முறைகளை மறைத்து, அரசு வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களையும் உரிமைகளுக்கான போராட்டங்களையும் தீவிரவாதமாகச் சித்தரித்து உலகமக்கள் மூளையில் திணிப்பது., சுருங்கச் சொன்னால், அவர்கள் தீர்மானிக்கும் செய்திகளையே படிப்பதும், பேசுவதும், சிந்திப்பதுமாக உலக மக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவது.

இதை எளிமையாகக் கூற வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அதாவது இன்று உலக அளவில் வளர்ந்த முன்னணி ஊடகங்கள் எவற்றைச் செய்திகளாக வெளியிடுகின்றனவோ அவற்றைத்தான் நடுத்தர, சிற்றிதழ்களும் செய்திகளாக வெளியிடுகின்றன. அவற்றைத்தான் விவாதத்திற்கு உட்படுகின்றன. இந்த வட்டத்திற்கு அப்பாற்பட்டு இவர்களால் எதுவுமே செய்து விட முடியாது. ஒருவேளை வேறு ஒரு வட்டத்தை உருவாக்க முயற்சித்தால் அது காற்றில் கரைந்த முயற்சியாகவே அமையும். அந்த அளவுக்கு யூதர்கள் ஊடகப் பலம் பெற்றுள்ளனர். சுருங்கச் சொன்னால் யூதர்கள் தீர்மானித்திருக்கும் வட்டத்திற்குள்ளேதான் உலக மக்களின் சிந்தனை, படிப்பு, முயற்சி எல்லாம் இருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் உலகளாவிய கருத்தியல் பயங்கரவாதம்.

3. யூதர்களே கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம். அவர்களே இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய உரிமையுள்ளவர்கள் என்கிற கருத்தாக்கத்தை ஊடகங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாகப் பரப்புவது. இதை மேற்குலகில் பல ஊடங்களின் மூலம் பகிரங்கமாகவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மேற்படி கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநாடுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் அமெரிக்கா, ஐரோப்பிய முன்னாள் / இன்னாள் அதிபர்கள், செயலர்கள் என்று பலரும் கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மொத்தத்தில் தங்களது பாஸிசக் கோட்பாட்டை தங்களின் செல்வாக்குமிகுந்த ஊடகங்களின் வழியாகப் பரப்பிவருகிறார்கள்.

குறிப்பாக முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் பல கருத்தாக்கங்களையும் இழிவாகவும் பயங்கரமாகவும் சித்தரித்துப் பரப்பி வருகிறார்கள். மேலும் நம் நாட்டில் உள்ள அச்சு ஊடகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் யூதர்களின் பங்கு ஏராளம் உள்ளன. யூதர்களோடு மிக நெருக்கமாக உறவு வைத்துள்ள ஆரிய சங்பரிவார் கூட்டம் அத்தகைய ஊடகங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லீம் வெறுப்பு என்ற அவர்களின் ஜீவநாதத்தை இடைவிடாது ஒலித்து வருகின்றனர்.

இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்து விழிப்புடன் செயலாற்ற வேண்டிய முஸ்லிம்களோ தாங்கள் ஒரே உம்மா என்கிற ஓருடல் என்பதையும் உலகுக்கு நேர்வழிகாட்ட வேண்டிய பொறுப்பை தங்களுக்கு அல்லாஹ் (சுபு) கடமையாகத் தந்திருக்கிறான் என்பதையும் மறந்து அந்நியச் சித்தாந்த நோய் பிடித்துத் திரிகிறார்கள். நோய் தீர பிரார்த்திப்பது மட்டுமல்ல, முயற்சிப்பதும் முக்கியம். முயற்சிப்போமா?

என்ன செய்வது?

உலக அளவிலும் இந்திய அளவிலும் வலிமையாக செய்யப்படுகின்ற திரிபுவாதத்திற்கு சரியான, முறையான பதிலடி கொடுக்க வேண்டும். உலக மக்களில் ஒன்ற¬க் கோடி யூதர்களால் செய்யப்படுகின்ற வேலைகளினால் 180 கோடி முஸ்லிம்கள் கடும் சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர்.

எதிர்கால இளம் தலைமுறைக்கு இந்த ஆபத்துக்களைச் சொல்லி எச்சரிக்கை செய்து வளர்க்க வேண்டும். அருட்கொடையாக, அமானிதமாக நம்மிடம் வழங்கப்பட்டுள்ள தீனுல் இஸ்லாம் மார்க்கத்தை உறுதியாகப் பற்றிப்
பிடிக்கும் சமுதாயமாக எதிர்கால முஸ்லிம் சமூகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

உலக வரலாறு, உலக நிகழ்வுகள் குறித்து தெளிவான ஞானம் மற்றும் இவற்றில் ஒரு முஸ்லிம்க்கு உள்ள பொறுப்புகள் குறித்த தெளிவான பார்வை ஆகியவை எல்லா முஸ்லிம்களிடமும் உருவாக வேண்டும்.

தலைமை தாங்குவோரிடத்தில் இஸ்லாமிய எதிரிகளுக்குக் களம் எது என்பதை தீர்க்கமாக அறிந்து, உணர்ந்து செயலாற்றும் ஆற்றல் வேண்டும். ஆபத்துகள் எது என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கு உணர்த்தி, அவற்றிலிருந்து மீண்டிட வழி என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

அடுத்த தலைமுறை எதிர்காலத்திற்கான தங்களது தொழில் துறைகளை தேர்வு செய்யும் போது எது எந்த துறையாக இருந்தாலும் அவர்கள் இதழியல் மற்றும் ஊடகம் அவற்றில் நுழைந்து முத்திரையைப் பதிக்கக்கூடிய ஆற்றலுடன் உருவாக்கப்பட வேண்டும்.

மக்களே, மார்க்கத்தில் பயிற்சி பெறுங்கள்!

உலகின் நிகழ்வுகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்!

உலகின் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை வாழ்ந்தும் வெளிப்படுத்தியும் காட்டுங்கள்!

வெற்றி இஸ்லாம் ஒன்றுக்கே!

———————————————————————————————————–

இணையதளங்களில் யூதர்களின் ஆதிக்கம்…!

இவை தவிர myspace – basynet – wikipedia – woopidoo முதலானவையும் யூதர்களுக்குச் சொந்தமே.

உலகச் செய்தி நிறுவனங்களில் யூதர்களின் ஆதிக்கம்

யூதர்களுக்குச் சொந்தமாக உலகெங்கும் பல செய்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட யூதச் செய்தி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து முன்னணி நிறுவனங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களாகும். ஏனெனில் இந்நிறுவனங்கள் உலகெங்கும் பல கிளைகளை பல்வேறு பெயர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்நிறுவனங்களும் இவற்றின் பல்லாயிரக் கணக்கான கிளைகளும் ஏராளமான தலைப்புகளில் எண்ணற்ற நூல்கள், மாத, வார, நாளிதழ்கள் ஆகியவற்றை வெளியிடுகின்றன. மேலும் மின்னணு ஊடகங்களையும் நடத்தி வருகின்றன.

1. டைம் பாக்ஸ் இது வார்னர் பிரதர்ஸ் என்ற சினிமா நிறுவனத்தின் பெரும் பங்குகளை வைத்திருப்பதுடன் உலகின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாகத் திகழ்கிறது. இதன் தலைமைப் பீடத்தில் ‘ஜெரால்டுலைபன்’ என்ற யூதர் கோலோச்சுகிறார்.

2. ராண்டம் – செய்தி நிறுவனம்

3. ஷைமன் அண்ட் ஷோஸ்டர் – செய்தி நிறுவனம்

4. ரிச்சர்டு பர்ன்ஸ்டைன் என்ற யூதரின் தலைமையிலான வெஸ்டர்ன் நிறுவனம்.

5. ரூபர்ட்முர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் செய்தி நிறுவனம்.

உலகெங்கும் செல்வாக்குச் செலுத்தி வரும் ’ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனமும் யூதர்களால் உருவாக்கப்பட்டு யூதர்களால் நிருவகிக்கப்படுபவையே. இதன் தலைமையகம் பிரிட்டனில் இருக்கிறது.

சினிமாத்துறையில் யூதர்களின் ஆதிக்கம்

1. ஹாலிவுட்டின் மிகப் பெரிய சினிமா நிறுவனங்களில் ஒன்றான பாரமவுண்ட் நிறுவனம் லூயிஸ் மேயர் என்ற யூதருக்குச் சொந்தம்.

2. மெட்ரோ கோல்டன் என்ற நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பங்குகள் இரண்டு யூதர்களுக்குச் சொந்தம்.

3. மிகப்பிரபலமான பாக்ஸ் நிறுவனம் வில்லியம் பாக்ஸ் என்ற யூதருக்குச் சொந்தம்.

4. வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வார்னர் என்ற யூதரால் உருவாக்கப்பட்டு இன்று அவரது சகோதரிக்குச் சொந்தமாக இருக்கிறது.

5. யுனிவர்சல் என்ற நிறுவனம் கார்ல் லைமீ என்ற யூதருக்குச் சொந்தம்.

இதுபோலவே பிரிட்டனில் 280க்கும் மேற்பட்ட மிகப்பெரிய சினிமா நிறுவனங்களை யூதர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர்.

தொலைத்தொடர்பு நிறுவனங்களில்…

யூதர்கள் உலகெங்கும் ஏராளமான தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருக்கின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்றால் டெலிபோன், செல்போன் நிறுவனங்கள் என்று பலர் சுருக்கமாகப் புரிந்து கொள்கின்றனர். ஆனால் யூதர்கள் கைவசம் வைத்திருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்பது டெலிபோன், செல்போன், இணையம், வானொலி, தொலைக்காட்சி என்று பல ஊடகங்களை அதுவும் ஆயிரக்கணக்கில் இயக்கும் வசதிகளை உள்ளடக்கியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெலைத் தொடர்பு நிறுவனங்கள் பலவற்றை யூதர்கள் உலகெங்கும் சொந்தமாக வைத்திருக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் முப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கின்றனர். இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளை இயக்கிக் கொண்டிருக்கின்றன.

1. ABC மற்றும் NBC குழுமம் 2. MTV குழுமம் 3. பாக்ஸ் குழுமம்

இவையல்லாமல் நியூ ஹவுஸ் நிறுவனம் மட்டும் 24 தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கிறது. அந்நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் உலகெங்கும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறது.

பிரிட்டனில் ATV குழுமம் என்கிற யூத தொலைத்தொடர்பு நிறுவனம் ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் கோசின்ஸ்கி என்ற யூதர் NTV குழுமம் என்ற பெயரில் பல தொலைக்காட்சிகளை நடத்தி வருகிறார். இதுபோலவே பிரேசில், உருகுவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பொலிவியா ஜெர்மனி, இத்தாலிய போன்ற தேசங்களில் யூதர்களே 90 விழுக்காடு ஊடகங்களில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
BY yaal muslim

ஞாயிறு, நவம்பர் 13, 2011

கடாபியின் மரணம் அறிந்ததும், அறிய வேண்டியதும்

ஈரானுக்கு பயப்படுவது யார் (கட்டுரை)




ஏ.ஜி.எம். தெளபீக்

ஈரானை எண்ணி இரண்டு வகையினர் பயப்படுவது போலுள்ளது. மேற்குலகமும் அமெரிக்காவும் முதலாவது வகையினர். ஈரானை நேசிப்போர் அதன் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அக்கறை கொண்டுள்ளோர் இரண்டாம் வகையினர். மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்காவுக்கு பிடிக்காத நாடுகளில் எஞ்சியுள்ளது ஈரான் மாத்திரமே. இதற்கு முன்னர் ஈராக்கும் இந்தப் பட்டியலில் இருந்தது. 2003 ஆம் ஆண்டு படையோடும் போர் முரசோடும் ஈராக்கிற்குள் நுழைந்த அமெரிக்கா தனக்குப் பிடிக்காத சதாம் ஹ¤ஸைனை சிம்மாசனத்திலிருந்து தூக்கி வீசும்வரை குண்டுகளைக் கொட்டியும் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தும் துவம்சம் செய்தது. இந்தப் பெரும் போரில் கல்லறைகளுக்குப்போனோர் ஏராளம் ஊனமுற்று கட்டில்களில் கிடப்போர் எம்மாத்திரம் இவைகளைக் கணக்கிடவோ கருத்திலெடுக்கவோ இப்போது நேரமில்லை. 2007 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹ¤ஸைன் தூக்கிலிடப்பட்ட பின்னர்தான் அமெரிக்காவின் கோபாவேஷம் குறைந்தது. 

நாசகார ஆயுதங்களை வைத்துக் கொண்டு சதாம் ஹ¤ஸைன் அயல் நாடுகளையும் இஸ்ரேலையும் அச்சுறுத்துகின்றார். மத்திய கிழக்கில் எஜமான்கோலம் பூண்டு அடாவடித்தனம் புரிகின்றார் என்ற காரணத்தைக் காட்டியே அன்று ஈராக் தாக்கப்பட்டது. சுமார் ஜம்பதாயிரம் ஈராக்கியப் பெண்கள் பாலியல் சேஷ்டைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக லண்டனை மையமாகக் கொண்ட அமைப்பொன்று அறிக்கையொன்றையும் அண்மையில் வெளியிட்டுள்ளமையும் ஈராக்கில் இதுவரை காலமும் புரட்டப்படாத பக்கங்களில் ஒன்று. இதுபோன்ற இன்னும் எத்தனை பக்கங்கள் புரட்டப்படாமலுள்ளதோ தெரியாது. இப்போது ஈரானைப் பற்றிப் பயப்படுவோரின் முதலாம் வகையினரைப் பார்ப்போம். பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், அமெரிக்கா, இஸ்ரேல் என்பவையே இவற்றில் பிரதானமானவை. யுரேனியத்தை செறிவூட்டி ஈரான் அணு ஆயுதம் செய்கின்றதாம் இவ்வாறு ஈரானிடம் அணு ஆயுதமிருப்பது ஏனைய நாடுகளின் இருப்புக்கு ஆபத்தாம். எனவே இவ்வாறான யுரேனியம் செறிவூட்டல் அணு ஆயுதம் தயாரித்தல் போன்ற வேலைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டுமாம். இல்லாவிட்டால் அடுத்த அடியும், உதையும் ஈரானுக்கே என்கின்றன மேற்குலக நாடுகள். ஐ. நா. விடம் இது தொடர்பான இறுக்கமானதும் கடைசியானதுமான அறிக்கைகளை அமெரிக்கா கொண்டு போய் கொடுத்தும் விட்டது. பிரிட்டனும் பிரான்ஸ¤ம் வழமைபோல தலையாட்டிவிட்டது. 

இதை எதனையும் ஈரான் கண்டுகொள்ளவில்லை. வழமையான பாணியில் பதில் சொல்லிவிட்டது. மின்சாரம் பெறுவதற்கான நோக்கிலேதான் யுரேனியம் செறிவூட்டப்படுகின்றது. மற்றப்படிக்கு அணுவும் இல்லை, ஆயுதமும் இல்லையென்கிறது ஈரான். அப்படியிருந்தாலும் அவை வேறு நாடுகளுக்கெதிராகப் பாவிக்கப்பட மாட்டாது. இஸ்ரேல் அணு ஆயதம் வைத்திருக்கின்ற போது எங்களிடமிருந்தால் என்ன என்று மறுகேள்வி கேட்கின்றது ஈரான். இது நெடிய கதையும் சுவாரஸ்யமானவொன்றும். சுப்பர் பெற்றோலை எண்பது வீதமளவில் செறிவூட்டி யுரேனியம், புளூட்டோனியம் இன்னும் இதர கலவைகளைச் சேர்த்தே அணு ஆயுதம் செய்யப்படுகின்றது. இன்று நேற்று வந்த முரண்பாடுகளல்ல இவை. நீண்ட காலந்தொட்டு அடிக்கடி வந்து போகும் பூகம்பமே இப்பிரச்சி னை. நான்கு தடவைகள் ஈரானுக்கெதிராக தடைகள் கொண்டு வருமளவிற்கு மிகவும் பாரதூரமாகிப் போன சர்ச்சை.

2010 ஆம் ஆண்டு கடைசியாக நான்காவது தடை ஈரான் மீது ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டும் முரண்பாடுகள் முடியவில்லை. ’நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா’ என்ற பாடலுக்கேற்றாற் போல கதை வசனம் கொண்ட விடயமிது. பொருளாதாரத் தடை, இராணுவத்தடை, இராஜதந்திர ரீதியான தடை, போக்குவரத்துத் தடை, எனப்பல வகையில் ஈரானுக்கெதிரான தடைகள் அமுலாக்கப்பட்டும் ஈரானை வழிக்குக்கொண்டு வரும் விடயத்தில் மேற்குலகம் தொடர்ந்தும் தோல்வியடைந்ததே கதை. ஈரானின் வெளிநாட்டுச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

சர்வதேச கடற்பரப்பில் செல்லும் ஈரானின் எல்லா வகையான கப்பல்களும் தேவையான நேரத்தில் தேவையான நாடுகள் சோதனையிடவும் தடுத்து வைக்கவும் ஐ.நா. அங்கீகாரமளித்துள்ளது. பிற நாடுகளுடனான கொடுக்கல் வாங்கல்களில் ஈரான் ஈடுபடமுடியாது. எனினும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் ஈரானுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றன. இவ்வளவு கடுமையான தடைகளையும் தாண்டி ஈரான் தன்பாட்டில் போய்க் கொண்டிருப்பதும் வளர்ந்து செல்வதும் மேற்குலகையும் அமெரிக்காவையும் வியக்க வைத்திருக்கும். என்ன செய்ய நிலைமையை தொடரவிட்டால் விளைவுகள் தங்கள் தோழையும் தலையையும் நோக்கி வருமென்பதே அமெரிக்காவுக்குள்ள பிரச்சினை. ஈரானில் அடிக்கடி விமானங்கள் விபத்துக்குள்ளாவதற்கான காரணங்கள் அண்மைய ஆய்வொன்றின்படி கண்டு பிடிக்கப்பட்டது. தரமான உதிரிப்பாகங்களால் விமானம் செய்யப்படவில்லை. உள்ளூரில் செய்யப்பட்ட மூலப் பொருட்களிலிருந்தே ஈரான் விமானங்கள் செய்யப்படுகின்றன. இவை தரமானதாக கெட்டியானதாக இல்லை என்பதே அந்த ஆய்வின் முடிவு. வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய ஐ.நா. வின் தடைப் பிரகாரம் அனுமதியில்லை. எனவேதான் உள்ளூர் உதிரிப்பாகங்களால் விமானங்கள் செய்யப்படுகின்றன எனவே பொருளாதாரத் தடைகளால் ஈரான் பாதிக்கப்பட்டு வருகின்றமையும் தெரிகின்றது. இதனால்தான் என்னவோ யுரேனியம் செறிவூட்டலை வெளிநாடுகள் கண்காணிக்க வேண்டுமென்ற நிபந்தனையை ஈரான் முன்னர் ஏற்றிருந்தது. 

பிரான்ஸ் ரஷ்யாவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் அனுப்ப வேண்டும். அதனை பரீட்சித்து பின்னர் ஈரானுக்கு அனுப்பப்படும் என்பதே ஐ. நா. வின் நிபந்தனை. இதை மறுத்த ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தேவையேற்படின் மேற்கு நாடுகள் தனது நாட்டுக்குள் பார்வையிடலாமே என்றது. இதை ஐ.நா. ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறான இழுபறிகளும் ஏட்டிக்குப் போட்டியும் இன்றைக்கு ஈரானை தர்மசங்கடத்தில் மாட்டிவிடுமோ என்ற பயம் ஈரானை நேசிப்போரிடமுள்ளது. என்னவென்றாலும் சியோனிஷ ஏகாதிபத்திய வாதிகளின் மிரட்டல்களுக்குப் பணிய மாட்டோம் என இராணுவ கல்லூரியில் உரையாற்றிய ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமய்னி சூளுரைத்துள்ளார். ரஷ்யாவும், சீனாவும் ஈரானுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகள் அவ்வளவு பொருத்தமானதல்ல பேச்சுவார்த்தைகளே இரண்டு தரப்பாருக்கும் ஏற்றமானதென்கின்றன. ஈராக்கின் நிலைமைகள் அயல்நாடான ஈரானுக்கே சாதகமாய் அமைய வாய்ப்புள்ளதென்கின்றனர் அவதானிகள். இன்னும் சவூதி அரேபியாவையும் ஈரானையும் மூட்டிவிட அமெரிக்கா மேற்கொண்ட பிரயத்தனங்கள் பொய்யாகிவிட்டன. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் நயிப் ஈரானை நண்பன் எனக் கூறியுள்ளதுடன் வோஷிங்டனிலுள்ள சவூதி தூதுவரை ஈரான் கொலைசெய்ய முயன்றமைக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதால் இக்குற்றச்சாட்டை நம்பமுடியாதென்று தெட்டத்தெளிவாக கூறிவிட்டார். இந்நிலைமைகள் அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதல் முயற்சியை கடுமையாக பாதிக்கலாம். மத்திய கிழக்கில் அமெரிக்கத் தளங்கள் உள்ள நாடுகளில் சவூதியும் ஒன்று. ஏனைய நாடுகளான பஹ்ரைன், குவைத், கட்டார், ஓமான், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் என்பன சவூதி அரேபியாவையே பின்பற்றும்.

இவ்வாறான நிலைமைகள் எழுந்தால் அமெரிக்கா மேற்குலகம் என்பன கடுமையாகத் திண்டாட வேண்டி ஏற்படும். இன்னும் முழு மத்திய கிழக்கின் வீச்செல்லைகளையும் தாக்குமளவிற்கு திறனுடைய ஏவுகணைகள் ஈரானிடமுள்ளன. ஒருவாறு போர் மூண்டால் அமெரிக்காவை ஆதரிக்கின்ற அனைத்து அரபு நாடுகளையும் ஈரான் தாக்கவும் கூடும். இதனாலேயே மத்திய கிழக்கிற்கு வெளியே பாரிய இராணுவத் தளத்தை கடலில் அமைக்க அமெரிக்கா யோசனை செய்வதாகவும் ஒரு கதை பேசப்படுகின்றது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அமெரிக்காவின் அணுகு முறைகளிலே தான் முரண்பாடுகள் வேரூன்றுகின்றன. எவவ்ளவுதான் விட்டுக் கொடுப்புடன் நடந்தாலும் நல்ல நோக்கத்தில் அமெரிக்கா எங்களைப் பார்ப்பதில்லையென ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் தெரிவித்துள்ளார். இப்போது இரண்டு வகையானோர் உள்ளங்களில் விபரீதமான எண்ணங்கள் இழையோடிக் கொண்டிருக்கும். அமெரிக்கா தோற்க வேண்டுமென்று சிலரும் ஈரான் தோற்க வேண்டுமென்று சிலரும் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பர். இவையிரண்டிலுமில்லாத மூன்றாம் வகையினரும் உலகில் இருக்கவே செய்வர் அவர்கள் என்றைக்கும் போரையும் அழிவையும் விரும்பாதவர்களாவர். என்னமோ’ உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும். நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும்.

சனி, நவம்பர் 12, 2011

ஈரான் மீதான தாக்குதல் - பயந்தாங்கொள்ளி அமெரிக்கா பின்வாங்குகிறது



ஈரான் நாட்டுக்கு எதிரான இராணுவ தாக்குதல் நினைக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் லியொன் பனெற்றா தெரிவித்துள்ளார். அது ஈரானின் அணுசக்தி ஆற்றல் முயற்சிகளை மேலும் ஆகக்கூடியது 3 ஆண்டுகளுக்கு தாமதப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

டெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை முடக்குவதாக தாக்குதல் அமையும் என்ற ஊகத்தை குறைத்து சொல்வதாக அவரின் கூற்றுக்கள் அமைந்துள்ளதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை இப்பிராந்தியத்தில் பாரதூரமான தாக்கங்களை ஏற்படுத்தும் மற்றும் இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கப்படைகளுக்கும் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும். எல்லாவற்றையும் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்றும் பாதுகாப்புச்செயலாளர் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தாயும், மகளுக்கும் கல்லால் அடித்து தண்டனை





ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் காஷ்னி நகரம் உள்ளது. அங்குள் ளகவாஜா ஹெகிம் பகுதியில் ஒரு வீட்டில் விதவை தாயும் அவரது மகளும் தங்கியிருந்தனர். அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர்கள் 2 பேர் அவர்கள் இருவரையும் சரமாரியாக கல்லால் அடித்தனர். பின்னர் துப்பாக்கியால் சுட்டனர். அதில் தாயும் மகளும் பரிதாபமாக இறந்தனர். 

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயும், மகளையும் கொலை செய்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள்  இருவரும் கள்ளக்காதல்  மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக தெரிவித்தனர். தலிபான்கள் ஆட்சி நடந்தபோது பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்கள் நடுரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடித்து கொல்லப்பட்டனர்.

தற்போதும் அதே நிலை நீடிக்கிறது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் கமிஷனில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து 1026 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் காஷ்னி மாகாண கவர்னர் அலுவலகம் மற்றும் போலீஸ் தலைமையகத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
by - yarlmuslim,

போரில் வென்ற இலங்கை சமாதானத்திலும் வென்றாக வேண்டும் - நோர்வே உபதேசம்





இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தவே நோர்வே எப்போதும் விரும்பியது. ஆனால், பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட இரு தரப்புகள் போரை தேர்ந்தெடுத்த போது சிறிய நாடான நோர்வேயாலோ அல்லது வேறு நாடுகளினாலோ என்ன செய்ய முடியும்? இலங்கைத் தரப்பானது போரில் வென்றுவிட்டது. அவர்கள் இப்போது சமாதானத்தை வெல்லவேண்டும். வலியுறுத்தித் தெரிவித்திருக்கிறார் என நோர்வே சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை அமைதி முயற்சிகளுக்கான முன்னாள் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம். 

இலங்கை அமைதி முயற்சிகள் குறித்துச் செய்யப்பட்ட மீளாய்வு அறிக்கை நேற்று ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.  இந்த அறிக்கை வெளியீடு ஒஸ்லோவில் நடைபெற்றது. இலங்கை சார்பில் கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் மிலிந்த மொறகொடவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். எரிக் சொல்ஹேய்ம் அந்த அறிக்கையை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையில் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தவே நோர்வே எப்போதும் விரும்பியது. ஆனால், பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட இரு தரப்புகள் போரை தேர்ந்தெடுத்தபோது சிறிய நாடான நோர்வேயாலோ அல்லது வேறு நாடுகளினாலோ என்ன செய்ய முடியும்? இலங்கைத் தரப்பானது போரில் வென்றுவிட்டது. அவர்கள் இப்போது சமாதானத்தை வெல்லவேண்டும்.

இலங்கை அமைதி முயற்சிகளின்போது கிடைத்துள்ள அனுபவங்களில் நாம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.  இலங்கை அமைதி முயற்சிகளில் நோர்வே சிறந்த பங்கை ஆற்றியது. 2002ம் ஆண்டில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த உதவியதன் மூலம் நாம் பல உயிர்கள் பலியாவதைத் தடுத்தோம். இந்த அமைதி முயற்சிகளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் எதிர்காலத்தில் இவை தொடர்பாக நாம் மேற்கொள்ளும் வேறு முயற்சிகளுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன்.

இலங்கையில் அமைதியை தவறவிட்டதற்கான பொறுப்பை  சம்பந்தப்பட்ட பிரச்சினையுடன் தொடர்புபட்ட தரப்புகளே ஏற்றுக்கொள்ளவேண்டும். போர்நிறுத்த ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட நன்மைகளையும் அவர்கள் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு சொல்ஹேய்ம் தெரிவித்தார்.
by yaal muslim 

வியாழன், நவம்பர் 10, 2011

அமெரிக்க உதவியுடன் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குவது உறுதி





ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் தகவல்களை ஆதாரம் காட்டி இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி மெயில்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் மீது கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னதாக இஸ்ரேல் இராணுவ தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதாக ‘டெய்லி மெயில்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல், ஈரான் மீது விரைவாகவோ அல்லது தாமதமாகவோ தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வெளியுறவு அமைச்சின் முக்கிய அதிகாரி ஒருவர் டெய்லி மெயிலுக்கு கூறியிருப்பதாவது, “கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னதாகவோ புது வருடத்திற்கு முன்னதாகவோ இஸ்ரேல், ஈரானின் அணு உலை மீது தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரானின் அணு சக்தி செயற்பாடுகளில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார். ஐ.நா. அணு ஆயுத கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத்திய ஈரானில் நடந்த கூட்டமொன்றில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அஹமதி நிஜாத் ஐ.நா.வின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்தார்.

“இந்த தேசத்தின் செயற்பாடுகளை எச்சரிக்கை கள் மூலம் நிறுத்திவிட முடியாது. சிறு எச்சரிக்கைகளுக்காக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தில் இருந்து பின்வாங்காது. அமெரிக்காவின் திட்டத்திற்கு அமைய செயற்பட்டு ஏன் உங்களது கெளரவத்தை (ஐ.நா. அணுசக்தி முகவர் நிலையம்) கெடுத்துக்கொள்கிaர்கள். ஈரானியர்கள் புத்திசாலிகள். உங்களிடம் இருக்கும் 20,000 (அணு) குண்டுகளுக்கு எதிராக இரண்டு குண்டுகளை தயாரிக்க தேவையில்லை” என்று அஹமதிநிஜாத் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலை அழிப்போம்' - ஈரான் இராணுவ தளபதிகள் எச்சரிக்கை






ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் (ஐ.ஏ.இ.ஏ.,) அறிக்கை,  வெளியானது. இதையடுத்து, மத்திய கிழக்கில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள், ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. அதேநேரம், ஐ.ஏ.இ.ஏ., அறிக்கையின் குற்றச்சாட்டுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், தனது அணுசக்தி உற்பத்தியை நிறுத்தப் போவதில்லை என உறுதியாகக் கூறியுள்ளது.

22 பக்க அறிக்கை: கடந்த ஒரு வார காலமாக, உலக நாடுகள் எதிர்பார்த்த, ஈரான் அணு ஆயுதத் தயாரிப்பு குறித்த ஐ.ஏ.இ.ஏ., அறிக்கை 
 வெளியானது. மொத்தம் 22 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை, தொழில்நுட்ப மொழியில் வறண்ட நடையில் எழுதப்பட்டுள்ளது.

சாராம்சம்: "ஈரான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே அணுகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் பெற்று, தற்போது அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. அதோடு, அணு ஆயுதங்கள் தாங்கிச் செல்லக் கூடிய ஏவுகணைகளையும் தயாரிப்பதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு விட்டது' என்பது தான் அந்த அறிக்கையின் சாராம்சம்.

ஆதாரம் என்ன? : இந்தக் குற்றச்சாட்டுக்கு தகுந்த ஆதாரங்கள், ஐ.ஏ.இ.ஏ.,யின் உறுப்பு நாடுகள் மற்றும் ஈரானின் அணுசக்தி தொடர்பான அறிக்கை, ஐ.ஏ.இ.ஏ., ஈரானில் நேரில் நடத்திய ஆய்வுகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டதாக ஐ.ஏ.இ.ஏ., கூறியுள்ளது.

அமெரிக்க கூட்டணி ஆலோசனை: ஏற்கனவே கடந்த சில நாட்களாக மிரட்டல் மேல் மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளும் இதில் சேர்ந்துள்ளன.

ஐரோப்பிய யூனியன், இந்த அறிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்தமாக இவை அனைத்தும் சேர்ந்து, ஈரான் மீது மேலும் கடினமான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளன.

ரஷ்யா எச்சரிக்கை: அதேநேரம், இந்த அறிக்கையின் தீவிரம் குறித்து கவலை தெரிவித்துள்ள ரஷ்யா, இதனால், ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லாமல் போய் விடும் என்றும் கூறியுள்ளது.

என்ன செய்கிறது இஸ்ரேல்? : இந்நிலையில், இப்பிரச்னையின் மையமான இஸ்ரேல், ஈரான் மீதான தனது தாக்குதல் குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் நேற்று முன்தினம், ராணுவ அமைச்சர், ராணுவ நடவடிக்கைகள் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என தெரிவித்தார்.

இஸ்ரேல் முன்னாள் ராணுவ அமைச்சர் ஷவுல் மொபாத், "ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் தூரத்திற்குள் ஐரோப்பா இருக்கிறது. ஈரான் ஐரோப்பா மீது தாக்குதல் நடத்தாது என்று யாராவது நினைத்தால் அது பெரும் தவறு' என்றார்.

ஈரான் பதிலடி: இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஈரான் பதிலளித்துள்ளது. ஐ.ஏ.இ.ஏ.,வுக்கான ஈரான் தூதர் அலி அஸ்கர் கூறியதாவது: ஐ.ஏ.இ.ஏ., தலைவர் யுகியா அமனோ, அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறார். அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தின் கீழ், ஈரான் தனது கடமையை என்றும் புறக்கணிக்காது. அமைதிப் பணிக்கான அணுசக்தி உற்பத்தியை ஈரான் தொடரும். இந்த அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பழையவை. இவற்றுக்கு ஈரான் ஏற்கனவே 117 பக்கத்தில் பதிலளித்துள்ளது. இந்த அறிக்கை, அமெரிக்கா மற்றும் மேற்குலகின் நிர்பந்தத்தால் உருவானது. அரசியல் உள்நோக்கம் உடையது. இவ்வாறு அஸ்கர் தெரிவித்தார்.

மேலும், ஐ.நா.,வில் உள்ள அணி சேரா இயக்க நாடுகளின் கூட்டத்தை நேற்று அவசரமாகக் கூட்டும்படி அவர் கோரிக்கை விடுத்தார். அந்தக் கூட்டத்தில், ஈரான் அணுசக்தி உற்பத்தி பற்றிய 20 முக்கிய கேள்விகளுக்கு அவர் விரிவாகப் பதிலளித்தார்.

அமெரிக்காவின் அணு ஆயுத தயாரிப்பு: ஈரான் அதிபர் காட்டம் : ஐ.ஏ.இ.ஏ., அறிக்கையால் காட்டம் அடைந்துள்ள ஈரான் அதிபர் அகமதி நிஜாத் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: தங்கள் உரிமையில் இருந்து ஒரு இம்மியளவு கூட ஈரானியர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அணு ஆயுதங்கள் குவிந்துள்ள இந்த உலகில் ஒன்றிரண்டு அணுகுண்டுகளைத் தயாரிப்பது பெரிய விஷயமல்ல.

எங்களைப் பற்றி அறிக்கை கொடுக்கும் ஐ.ஏ.இ.ஏ., அமெரிக்க அணு ஆயுதத் தயாரிப்பு குறித்து அறிக்கை வெளியிடுமா? பண்பட்ட நாகரிகம் வாய்ந்த ஈரான், அணுகுண்டுகளைத் தயாரிக்க வேண்டிய அவசியமில்லை. அதேநேரம், அணு ஆயுதங்களால் தாக்குவோம் என்ற மிரட்டலுக்கும் ஈரானியர்கள் பயப்பட மாட்டார்கள்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், ஆயிரக்கணக்கில் குண்டுகளை வைத்துள்ளன. இன்றைய நவீன தொழில்நுட்பத்தோடு அவர்கள் குண்டுகளைத் தயாரிக்கின்றனர். அந்தக் குண்டுகள், உலகின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறன் கொண்டவை. இவ்வாறு நிஜாத் தெரிவித்தார்.

ஆனால், அவரது ராணுவத் தளபதிகள், "ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துமானால், அதன் பின் இஸ்ரேலே இருக்காது' என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

by yarlmuslim

புதன், நவம்பர் 09, 2011

ஈரான் மீது தாக்குதல் வேண்டாம் - எச்சரிக்கிறது ரஷ்யா



ஈரான் மீதான இராணுவ நடவடிக்கை மிகவும் பாரதூரமான அச்சம் தரும் விளைவுகளை கொண்டு வரும் என்றும் எதிர்வுகூற முடியாத ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் எச்சரித்துள்ளார். ஈரானின் ஆயுத பிரச்சினைக்கு ராஜதந்திரம் மூலமான தீர்வு காணப்படவேண்டுமே தவிர எறிகணைத்தாக்குல் மூலமான தீர்வைக் காணமுடியாது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஈரான் மீதான தாக்குதல் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என்று இஸ்ரேலின் ஜனாதிபதி ஷிமொன் பெறெஸ் தெரிவித்ததை அடுத்து ரஷ்யாவின் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் அணுவாயுத் திறனை இரகசியமாகப் பெற்றுள்ளதா என்பது பற்றி ஐநாவின் அணுவாயுதக் கண்காணிப்புக்குழு இவ்வாரம் தனது அறிக்கையை வெளியிடவிருக்கிறது.

நாளை செவ்வாய்க்கிழமையோ அல்லது புதன்கிழமையோ சர்வதேச அணுசக்தி ஏஜன்சி வெளியிடவிருக்கும் அறிக்கையில் ஈரானினால் மறுக்கமுடியாத அளவு சாட்சியங்கள் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பொதுமக்களின் தேவைக்கான மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கான அணுசக்தி செயற்றிட்டத்தை மட்டும் தான் செயற்படுத்தி வருவதாக ஈரான் வலியுறுத்தி வருகின்றது.

அணுவாயுதங்கள் தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தனது நாட்டுக்கு எதிராக பல்கோண அவமதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமெரிக்கா இதனை மேற்கொண்டு வருவதாகவும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலேஹி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிடம் 300 அணு ஆயுதங்கள் - ஈரான் ஜனாதிபதி அஹ்மதிநெஜாட் கூறுகிறார்



அணு ஆயுதத் தயாரிப்புக்கான முக்கிய தொழில்நுட்பங்களை, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் விஞ்ஞானிகளிடம் இருந்து ஈரான் பெற்றுள்ளது. இதன் மூலம் அது எந்நேரமும் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் தருணத்தில் உள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை அந்த மண்டலத்தை பெரும் அபாயத்திற்குள்ளாக்கும் என, பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பரபரப்புத் தகவல்கள்: ஈரானின் ரகசிய அணு ஆயுதத் தயாரிப்பு குறித்த அறிக்கையை, ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி (ஐ.ஏ.இ.ஏ.,) இன்று அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளது. இந்நிலையில், அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில தகவல்களை, அமெரிக்காவில் இருந்து வெளிவரும், "வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய, பாக்., விஞ்ஞானிகள்: இதுகுறித்து அப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது: அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான முக்கிய தொழில்நுட்பங்களை, ரஷ்யாவின் வியாச்செஸ்லாவ் டானிலென்கோ என்ற விஞ்ஞானியும், பாகிஸ்தானின் அப்துல் காதிர் கானும் அளித்துள்ளனர்.

ஆர் 265 ஜெனரேட்டர்:அணு ஆயுதத் தயாரிப்புக்கு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் அல்லது புளுட்டோனியம் தேவை. ஆர் 265 ஜெனரேட்டர் என்ற கருவியில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்து நிகழ்த்தப்படும் செயல் முறையின் மூலம் அணுத்தொடர் விளைவு உருவாகும். இதில் இருந்து பெறப்படும் சக்தி மூலம், அணுகுண்டுகளைத் தயாரிக்க முடியும். ஆர் 265 ஜெனரேட்டர் தயாரிப்பு என்பது மிகக் கடினமான ரகசியமான தொழில்நுட்பம் கொண்டது.

ஐந்தாண்டுகள்: ரஷ்ய விஞ்ஞானி டானிலென்கோ 1990களில், ஈரான் விஞ்ஞானிகளுக்கு ஆர் 265ஐ தயாரிப்பது குறித்த தகவல்கள், ஆராய்ச்சிகளை அளித்துள்ளார். அவர் ஐந்தாண்டுகள் ஈரானில் இருந்து அவர்களுக்கு கற்பித்துள்ளார்.

ஆதாரம் இல்லை: இதுகுறித்து ஐ.ஏ.இ.ஏ., பிரதிநிதிகள் டானிலென்கோவிடம் நடத்திய விசாரணையில், அவர் மின்சாரத் தயாரிப்புக்குத் தேவையான அளவிற்கு மட்டுமே அத்தொழில்நுட்பத்தை ஈரான் விஞ்ஞானிகளுக்கு கற்பித்ததாகத் தெரிவித்துள்ளார். ஈரானில் டானிலென்கோவின் நடவடிக்கைகள் குறித்த எவ்வித ஆதாரங்களும் ரஷ்யாவிடம் இல்லை.

வடகொரியா உதவி: சில வடிவமைப்பு வேலைகளுக்கான கணித சூத்திரங்கள், குறியீடுகள், வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கிடைத்துள்ளன. கூடுதல் உதவிகள், பாகிஸ்தானின் அப்துல் காதிர் கானிடம் இருந்து ஈரான் விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். இவ்வாறு அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் எதிர்ப்பு: ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அலய்ன் ஷூப்பே கூறியதாவது: ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை, அந்த மண்டலத்தையே பெரும் அபாயத்திற்குள்ளாக்கும். ஒருவேளை, ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு, ராணுவ குறிக்கோளுடன் இருக்குமானால், ராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க முடியாது.

நிலவரம் மோசமில்லை: எனினும், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை எவ்வகையிலாவது தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அந்தத் தாக்குதல் அந்த மண்டலத்தையே ஒட்டுமொத்தமாக சீர்குலைத்து விடும். இஸ்ரேல் முதலில் தாக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடவில்லை.இவ்வாறு ஷூப்பே தெரிவித்தார்.

ஐ.நா., தடைக்கு ஆதரவு கிடைக்குமா? ஐ.ஏ.இ.ஏ., அறிக்கை வெளியான பின், ஈரான் மீது ஐ.நா., பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வருமானால், பாதுகாப்புக் கவுன்சில் இடம் பெற்றுள்ள நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யாவும், சீனாவும் தமது, "வீட்டோ' எனப்படும் மறுப்பாணையைப் பயன்படுத்தி தடைத் தீர்மானத்தை தோல்வியுறச் செய்து விடும் வாய்ப்பே அதிகமாக உள்ளது. தீர்மானம் தோற்கும் பட்சத்தில், அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் மேலும் பல தடைகளை தன்னிச்சையாக ஈரான் மீது விதிக்கும். அதன் பின் தங்கள் நிலைப்பாட்டுக்கு ஐ.நா.,வை இழுக்கும்.

அகமதிநிஜாத் எச்சரிக்கை ஈரான் மீதான தாக்குதல் குறித்து எகிப்து அரசின் அல் அக்பர் செய்திப் பத்திரிகைக்கு ஈரான் அதிபர் அகமதி நிஜாத் அளித்த பேட்டியில் கூறியதாவது: இஸ்ரேலிடம் 300 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் ஈரான் அமைதியான பணிகளுக்காகத் தான் அணுசக்தி உற்பத்தியில் இறங்க விரும்புகிறது. இந்த மண்டலத்தில் உள்ள நாடுகளிடம் இல்லாத ராணுவ பலம் எங்களிடம் மட்டுமே உள்ளது. ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறோம். அதனால் இஸ்ரேல், மேற்குலகம் குறிப்பாக அமெரிக்காவை எதிர்கொள்ள நாங்கள் தயார். அமெரிக்கா எங்களைக் கண்டு பயப்படுகிறது. எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அகமதி நிஜாத் தெரிவித்தார்.

செவ்வாய், நவம்பர் 08, 2011

ஈரான் மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் திட்டம்'; தானும் தயார் என்கிறது ஈரான் ...




ஈரானிய அணுசக்தி நிலைகள் மீது பிரித்தானிய, அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் குறித்து ஆராய்ந்து வருவதாக பிரிட்டனின் டெய்லி மெய்ல் பத்திரிகை தெரிவித்துள்ளது.


ஈரானிடம் நான்கு அணுவாயுதங்களை தயாரிப்பதற்கு போதுமானளவு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக தகவல்கள் வெளியானதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனும் யுத்தத்திற்கு தயாராகி வருகின்றனர் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

ஈரானிய நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தவதற்கான திட்டத்தை அமெரிக்கா முன்னெடுக்கும் என பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் கருதுகின்றனர். அமெரிக்கா வலியுறுத்தினால் எந்த நடவடிக்கைக்கும் பிரித்தானிய இராணுவ உதவியை அமெரிக்கா பெறும என பிரித்தானிய இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிரிட்டனின் கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனிலுள்ள இராணுவ அதிகாரிகள் பிரித்தானிய கப்பல்கள், டொமாஹாவ்க் ஏவுகணை பொருத்தப்பட்ட நீர்மூழ்கிகளை எதிர்வரும் மாதங்களில் எங்கு நிலைகொள்ளச் செய்வது சிறப்பானது என ஆராய்ந்துவருவதாக டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்து சமுத்திரத்திலுள்ள பிரிட்டனின் கட்டுப்பாட்டிலுள்ள தீவான டியாகோ கார்ஸியாவிலிருந்து தகர்குதல் நடத்துவதற்கு அமெரிக்க அனுமதி கோரும் என பிரித்தானிய அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். அத்தீவில் கடற்படைத் தளமொன்றை கொண்டுள்ள அமெரிக்கா அதை முந்தைய மத்திய கிழக்கு மோதல்களின் போது பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் தாக்குதலொன்றை ஆரம்பிப்பதற்கு பராக் ஒபாமா தயங்குவதாகவும் ஆனால் ஈரானிய அணுசக்தி திட்டங்கள் தொடர்பான அதிகரித்து வரும் பதற்றங்கள் இந்நிலையை மாற்றிவிடும் எனவும் பிரித்தானிய அரசாங்க மற்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாக கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

சவூதி ராஜதந்திரியொருவர் கடந்த மே மாதம் கொல்லப்பட்டதிலும் வாஷிங்டனிலுள்ள சவூதி தூதுவரை கடந்த கொல்வதற்கு இடம்பெற்ற சதியிலும் ஈரான் பின்னணியில் இருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

ஈரான் மீது தாக்குதல் நடத்தவேண்டுமென இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாஹு வலியுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஈரானுக்கு மேற்குப்புறத்திலுள்ள ஆப்கானிஸ்தனரில் 98,000 அமெரிக்க துருப்பினர் உள்ளனர். கிழக்கிலுள்ள ஈராக்கில் 43,500 அமெரிக்கப் படையினர் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 10,000 பிரித்தானிய துருப்பினரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஈரான் தயார்
இதேவேளை நேற்று வியாழக்கிழமை லிபியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அலி அக்பர் சலாஹி, மேற்படி செய்திகள் குறித்து கூறுகையில், எந்த அச்சுறுத்தலையும் ஈரான் தண்டிக்கும் எனக் கூறினார்.

சர்வதேச விவகாரங்களைக் கையாள்வதில் துரதிஷ்டவசமாக, அமெரிக்கா தனது மதிநுட்பத்தை இழந்துவிட்டது. அது பலத்தில் மாத்திரமே தங்கியுள்ளது. ஆம் நாம் மோசமானதை எதிர்கெர்ள தயாராகவுள்ளோம். ஆனால் ஈரானுக்கு எதிராக மோதலில் ஈடுபடுவற்கு முன் அவர்கள் இரு தடவை சிந்திப்பார்கள் என நம்புகிறோம் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சலாஹி கூறினார்.

ஈரான் எப்போதும் இஸ்ரேலின் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. எனவே இது எமக்குப் புதிதல்ல. எட்டு வருடங்களாக இஸ்ரேலின் அச்சுறுத்தல் குpத்து நாம் கேள்விப்பட்டுவருகிறோம்.

எமது நாடு ஐக்கியமான ஒரு நாடு. எமது படைகளுக்கு நீண்ட வரலாறு உள்ளது. எமக்கு இந்த அச்சுறுத்தல்கள் புதியவை அல்ல. எமக்கு நம்பிக்கை உள்ளது. எமது நாட்டை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும் என துருக்கிய பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

எகிப்திய எழுச்சியின் பின்னணியிலிருந்த இளம் பெண்மணி அஸ்மா மஹ்ஃபூஸ்.



முபாரக்கின் மூன்று தசாப்த சர்வாதிகார ஆட்சியை ஆட்டங்காண வைத்து அவரை பதவியிலிருந்து விரண்டோட வைத்த மக்கள் எழுச்சிக்கு பின்னணியிலல் இருந்து செயற்பட்டவர்களில் ஒருவர்தான் அஸ்மா மஹ்ஃபூஸ் என்ற 26 வயதான இளம் யுவதி.கெய்ரோ அமெரிக்க பல்கலைககழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் பட்டம் பெற்றவர்.

எகிப்தின் இந்த எழுச்சி இப்படித்தான் ஆரம்பமானது.
அஸ்மா மஹ்ஃபூஸ் தஹரீர் சதுக்கத்தில் ஒன்று சேர்ந்து முபாரக்கின் அடக்குமுறைக்கு எதிராக 2011 ஜனவரி 25ம் திகதி அன்று அணி திரளுமாறு எகிப்திய மக்களை உருக்கமாக அழைக்கும் ஒரு வீடியோவை தனது வலைப்பூவில் (புளக்கில்) பதித்தார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு எகிப்தின் அல்மஹல்லா அல் குப்ரா நகரத்தில் இடம்பெற்ற தொழிலாளர் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்து, ஆதரவு தெரிவித்து துவக்கப்பட்ட ‘ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம்’ என்ற ஃபேஸ் புக் குழுமத்தின் ஸ்தாபகர்களில் இந்த அஸ்மா மஹ்ஃபூசும் ஒருவர்.
இவர் பதித்த வீடியோ எகிப்தியர்களை எழ வைத்ததது.துனீசியாவில் போஅஸீஸி என்ற இளைஞன் தனக்குத்தானே வைத்துக்கொணட தீ அந்த நாட்டின் எதேச்சதிகார தலைமையை எப்படி அதிர வைத்தது என்பதையும் அந்த தூனிசிய புரட்சி ஏற்படுத்திய உத்வேகத்தில் எகிப்தில் தங்களை தாங்களே தீவைத்துக் கொளுத்திய 4 இளைஞர்களைப் பற்றிய தகவல்களுடன் அந்த வீடியோ இணையத்தில் வேகமாக உலாவியது.
அந்த வீடியோவில் அஸ்மா இப்படி உரையாற்றினார்,
“எகிப்தில் துனீசியாவைப் போல் புரட்சியை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வத்தில் நான்கு இளைஞர்கள் தங்களை தாங்களே தீவைத்துக் கொளுத்தியுள்ளனர்.
அந்த இளைஞர்கள் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள் அவர்கள். அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். அவர் பாவம் புரிந்துவிட்டதாகவும். வீணாக தனது உயிரை பலிகொடுத்துவிட்டார் என்றும். அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னிப்பானாக! என்றும் சிலர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?”
“நாட்டில் ஒரு மாற்றத்தை வேண்டி தனது உயிரை தியாகம் செய்த அந்த இளைஞருக்கு ஆதரவு தேடி நான் தனியாக தஹ்ரீர் சதுக்கத்திற்கு சென்று சுலோகங்களை உயர்த்திப் பிடிக்கப்போகிறேன் என்று ஃபேஸ்புக்கில் ஒரு தகவலை பதிவு செய்தேன். ஒரு சிலராவது எனக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நினைத்தேதன். ஆனால், மூன்று இளைஞர்கள் மட்டும் எனக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தனர். எங்களுக்கு பின்னால் போலீஸ் கவச வாகனங்கள் அணிவகுத்து வந்தன.”
“ஹுஸ்னி முபாரக்கின் குண்டர் படையினரும், அதிகாரிகளும் எங்களை அச்சுறுத்தினர். பலம் பிரயோகித்து எங்களை அகற்றினர். சுயமாக தங்களை தீவைத்துக் கொளுத்தியவர்கள் மனநோயாளிகள் என அவர்கள் தெரிவித்தனர். மனநோயாளிகளாகயிருந்தால் ஏன் அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்கு சென்று தீவைக்கவில்லை?” அஸ்மா வினா தொடுக்கிறார்
“ஜனவரி 25-ஆம் தேதி உங்கள் அனைவரையும் தஹ்ரீர் சதுக்கத்திற்கு அழைக்கத்தான் இந்த வீடியோவை பதிவு செய்கிறேன்.உங்களுக்கு தன்னம்பிக்கை இருக்குமானால், இந்த நாட்டில் கண்ணியமாக வாழ விருப்பம் இருக்குமானால் ஜனவரி 25-ஆம் தேதி போராட்டத்தில் நாம் குதிக்கவேண்டும். அரசியல் உரிமைகள் குறித்து ஒன்றும் நான் பேசவில்லை. மனித உரிமைகளாவது எமக்குக் கிடைக்கவேண்டும்.
உங்களில் யார் வந்தாலும், வராவிட்டாலும் நான் தனியாகவே தஹ்ரீர் சதுக்கத்திற்குச் செல்வேன். தீக்குளிப்பதற்காக அல்ல. என்னை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றாலும் பரவாயில்லை.
நீங்கள் ஆணாக உங்களை கருதினால் என்னுடன் வாருங்கள்.
இந்த செய்தியை நீங்கள் எஸ்.எம்.எஸ், ட்விட்டர் போன்ற இணையதள சமூக வலையமைப்புகள் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு அனுப்புங்கள்.” -
புரட்சி ஒன்றுக்கு போடப்பட்ட இந்த விதை எகிப்திய மக்கள் அனைவரினது உள்ளங்களிலும் ஆழமாக வேர் விட்டது. அஸ்மா மஹ்ஃபூஸின் அரசியல் மாற்றத்திற்கான இந்த அழைப்பு எகிப்தின் எட்டுத் திக்கும் வேகமாக பரவியது. இளைஞர்களின் இதயங்களை ஒன்றிணைத்து ஜனவரி 25-ஆம் தேதி தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்றுக் கூட்டியது.
வீடியோ காட்சியின் இறுதியில் அவர் உருக்கமாக வேண்டுகிறார்
“அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த சக்திக்கும் அஞ்சாதீர்கள்.
“எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்…” என தனது திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்.
ஜனவரி 25-ஆம் தேதி நான் தஹ்ரீர் சதுக்கத்திற்கு செல்வேன். பின்னர் நான் உரக்கக் கூறுவேன் “ஊழல் ஒழியட்டும்! முபாரக் அரசு ஒழியட்டும்! என ந◌ான் கோஷமிடுவேன்”
இது தான் அஸ்மாவின் வேண்டுகொள்.
இந்த இளம் யுவதியின் வேண்டுகொளுக்கு எகிப்திய மக்கள் செவி சாய்த்தார்கள்.
போராடினார்கள்.
அமரிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகளின் ஆசிர்வாத்தோடு வாழ்ந்த முபாரக்கின் ஆட்சி முற்றுப்பெற்றிருக்கிறது.
ஆனால் அதிகாரத்தை பங்கு போட்டுக்கொள்ள பலர் முண்டியடித்துக் கொண்டு முன் வந்துக்கொண்டிருக்கின்றார்கள்.
எகிப்தின் எதிர்காலம் எப்படி அமையும்..?
பொறுத்திருந்து பார்போம்.

கடாபியின் மரணம் உணர்த்தும் உண்மைகள் – ஓர் ஆன்மீக, அரசியல் அலசல்.





கடைசி நேரத்தில் கதரக் கதர அவர் கொலை செய்யப்பட்ட காட்சியை ஊடகங்கள் வாயிலாக உலக மக்கள் அனைவரும் பார்த்தார்கள். 42 வருட காலங்கள் ஓர் நாட்டை ஆட்சி செய்த தளபதி ஒருவரின் மரணம் இப்படியும் அமையும் என்பதை அன்றுதான் உலகம் நிதர்சனமாக நேரடியாக கண்டிருக்கும்.

முஅம்மர் கடாபியின் வரலாறு என்ன? அவரின் நல்ல பக்கங்கள் இருக்கிறதா? அல்லது அவர் செய்தது அனைத்துமே கெட்ட செயல்கள் தானா? என்பதைப் பற்றி நிறையப் பேருக்கு தெரியாமல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கடாபியின் உண்மை வரலாற்றைப் பற்றிய சிகப்புப் பக்கங்களை சரியாக அறியாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

இந்த ஆக்கம் கடாபியின் வாழ்க்கையின் நல்ல செயல்பாடுகள் மற்றும் மார்க்கத்திற்கு விரோதமான மார்க்கத்தையே இழிவு படுத்த நினைத்த அவரது செயல்பாடுகள் போன்றவற்றைப் பற்றி ஆராய்கிறது.

நபியவர்களின் முன்னறிவிப்பும், நாம் அறிய வேண்டியவைகளும்.

"உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள்உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?'' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள். எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி விடுவீர்கள். உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழன்று விடும்! உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் "வஹ்னை' ஏற்படுத்தி விடுவான்'' என்று பதிலளித்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?'' என்று நாங்கள் கேட்டோம். "உலகத்தை நேசிப்பது;மரணத்தை வெறுப்பது'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)நூல்: அஹ்மத் 21363

இன்றைய கால கட்டத்தில் உலகில் பல நாடுகளிலும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. ஆப்கான், ஈராக் என்று பட்டியலில் பல நாடுகள் இணைந்து வருகிறது. இதே நேரத்தில் பல நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் மிகவும் அகோரமாக நடந்து வருகிறது.

மேற்கு நாடுகள் முஸ்லீம்கள் வாழும் நாடுகளின் மீது காரணமே இல்லாமல் தாக்குதல்களை தொடுக்கின்ற போதும் முஸ்லீம் ஆட்சியாளர்களாக தங்களைக் கூறிக் கொள்பவர்கள் யாரும் அவற்றை கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

கேட்டால் அது உள்நாட்டுப் பிரச்சினை நாங்கள் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள். இதைத் தான் நபியவர்கள் மேற்கண்ட செய்தியின் மூலம் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.

"உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள்உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்''  என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நேரத்தில் முஸ்லீம்கள் குறைவாகவா இருப்பார்கள் என்று நபி்த் தோழர்கள் கேட்கும் போது இல்லை, நீங்கள் நிறையப் பேர் இருப்பீர்கள் என்கிறார்கள்.

இன்று உலகில் 135 கோடிக்கும் அதிகமாக வாழக்கூடிய பெரும் சமுதாயத்தினராக முஸ்லீம்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எந்தத் தலைவருமோ அல்லது எந்த சமுதாயமுமோ எதிரிகளுக்கு எதிராக தங்கள் பலத்தை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. காரணம் அவர்களின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள உலக மோகமே.

மரணத்தைப் பற்றிய பயம் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. உலக வாழ்வைப் பற்றிய ஆசை அவர்களை மிகைத்திருக்கிறது. இப்படி வாழும் போது நம்மை எதிர்ப்பவர்களுக்கு நாம் அடிமைப் படுவதைத் தவிர வேறு வழி இல்லை.

லிப்யாவின் ஆரம்ப வரலாறு. சுருக்க அறிமுகம்.

1950 ம் ஆண்டு பெயரளவில் சுதந்திரம் அடைந்த லிப்யா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குள் கொண்டுவரப்பட்டது. அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களின் படை நகர்த்தலின் பின் ஏற்பட்ட இந்த வெற்றியின் பின் பல ஆண்டுகள் வரை இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நாடு பின்னர் மீண்டும் அண்ணியர்கள் வசமானது.

பலவிதமான ஆட்சி மாற்றங்களுக்கும் பல தடவைகள் உள்ளாக்கப்பட்ட லிப்யா இறுதியாக உமர் முக்தார் என்ற போராட்ட வீரரின் படையெடுப்பின் காரணத்தினால் இத்தாலியிடமிருந்து மீண்டும் பெயரளவுக்கு முஸ்லீம்கள் வசமானது.

சுதந்திரம் கிடைத்து 19 ஆண்டுகளுக்குப் பின் இத்ரீஸ் அஸ்ஸனுஸி என்பவரிடமிருந்து தனது 27வது வயதில் யுத்தமே இல்லாமல் ஆட்சியைக் கைப்பற்றினார் முஅம்மர் கடாபி.

1969ம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறிய முஅம்மர் கடாபி 2011 வரை லிப்யாவின் மாற்றமில்லா ஆட்சியாளராக இருந்தார்.

கடாபியின் ஆட்சியின் அரசியல் மாற்றங்கள்.

கடாபி ஆட்சியைக் கைப்பற்றிய நேரத்தில் லிப்ய மக்கள் அனைவரும் அவரை ஓர் மிகப்பெரிய வீரனாக மட்டுமன்றி சிறப்பான ஆட்சியாளராகவும் இவர் திகழ்வார் என்ற எண்ணத்தில் திழைத்தார்கள்.

இவருடைய ஆட்சியின் ஆரம்ப காலம் அப்படித் தான் இருந்தது.

ஏழைகளின் தோழன் என்று தன்னை மார்தட்டி அழைத்துக் கொண்ட முஅம்மர் கடாபி. எந்த நாட்டுக்கு சென்றாலும் தனது கலாசார அடிப்படையில் தான் தன்னைக் காட்டிக் கொண்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் எதிரியாக ஆரம்ப காலத்தில் தன்னைக் காட்டிக் கொண்ட கடாபி 2000க்குப் பிந்திய காலகாட்டத்தில் மேற்கின் ஊதுகுழலாகவே மாறினார். அதிலும் குறிப்பாக இஸ்ரேலின் நண்பனாகவே மாறிவிட்டார். (இதனால் தான் என்னவோ கடாபிக்கு எதிராக பல நாடுகளும் குரல் கொடுத்த நேரம் இஸ்ரேல் மாத்திரம் வாய் மூடி மௌனித்தது).

சம்பளத்திற்கு வேலை செய்யும் முறையை மாற்றி நாட்டில் உள்ள அனைவரும் பங்குதாரர்கள் என்ற பங்கு முறையை இவர்தான் லிப்யாவில் ஏற்படுத்தினார். சோசலிஸ கொள்கையினால் கவரப்பட்ட முஅம்மர் கடாபி தனது கொள்கைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கும் தயங்கவில்லை.

“காலித் பின் வலீத் முதல் கடாபி வரை” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்ட இவர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை தனது ரோல் மாடலாக காட்டிக் கொள்ள முயன்றது மட்டுமன்றி வீரத்திலும் அவருக்கு சரிசமனாக இருப்பதாக நினைத்து இருமாப்புக் கொண்டார்.

இவர்தான் லிப்யாவிற்கு “மக்கள் பொதுவுடைமை ஜனநாயக லிபிய அரபிக் குடியரசு” என்ற பெயரைச் சூட்டினார். பெயரில் தான் ஜனநாயம் இருந்ததே தவிர லிப்யாவிட்கும் ஜனநாயத்திற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இவருடைய ஆட்சியில் மக்கள் சேவை ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது எனலாம், அனைவருக்கும் இலவச மின்சாரம், வீடற்றோருக்கு வீட்டு வசதி, கட்டாயக் கல்வித் திட்டம் என பல திட்டங்களை வகுத்து நடை முறைச் சாத்தியமாக்கியவர் முஅம்மர் கடாபி.

1969ம் ஆண்டு கடாபி ஆட்சிப் பொருப்பெடுக்கும் போது 28 சதவீதமாக இருந்த படித்த மக்கள் தொகை கடாபி கொல்லப்படும் போது 90 சதவீதத்தைத் தாண்டியிருக்கிறது.

பசுமைப் புத்தகமும், பாசிச சிந்தனையும்.

ஆரம்ப கால தனது ஆட்சி முறையில் தன்னை ஒரு முஸ்லிமாக காட்டிக் கொண்ட முஅம்மர் கடாபியின் உண்மை முகம் அவர் எழுதிய ஓர் புத்தகத்தின் மூலம் வெளி உலகுக்கு தெரியவந்தது.

கிதாபுல் அஹ்லர் – கிரீன் புக் – கருப்புப் புத்தகம். தனது புரட்சியை பசுமைப் புரட்சி என்றும் தனது ஆட்சி முறை பசுமையானது என்பதையும் அறிவிக்கும் முகமாக அரசியல் சாசனமாக கடாபி தொகுத்த புத்தகம் தான் இந்த கிரீன் புக்.

இந்தப் புத்தகம் முழுக்க முழுக்கஇஸ்லாத்தை எதிர்க்கும் தனது வக்கிரசிந்தனைக்கு வித்திடக் கூடியதாகவேஇருந்ததுஇந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட சில ஆண்டுகளிலேயேமுஅம்மர் கடாபி மதம் மாறியவர் என்ற பத்வாவை பல முஸ்லீம்அமைப்புக்களும் வெளியிட ஆரம்பித்தன.

சவுதி ஆரேபியாவின் “ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி” இவருக்கு எதிராககடாபியின் அவதூருகளும் – தக்க பதில்களும் என்ற தலைப்பில்புத்தகத்தையே வெளியிட்டது. குறிப்பிட் புத்தகத்தின் அட்டை வாசகமேமுஅம்மர் கதாஃபி எல்லைகள் அனைத்தையும் மீறிவிட்டார்; இஸ்லாத்தின் கொள்கை, நம்பிக்கை,சட்டம், வாழ்க்கை நெறி அனைத்தின் மீதும் தாக்குதல் தொடுத்துவிட்டார்’’ என்றிருந்தது.

1980ம் ஆண்டு மக்காவில் கூடிய சவுதியின் மார்க்கத் தீர்ப்பாயத்தின்அறிஞர்கள் குழு அவரை முர்தத் – மதம் மாறியவர் என்று பகிரங்கமாகவேஅறிவித்தது.

இஸ்லாத்திற்கு எதிரான கடாபியின் செயல்பாடுகளும்கருத்துக்களும்.

தூய இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக கடாபி வெளியிட்ட கருத்துக்கள்சிலவற்றை இங்கு நாம் பட்டியலிடுகிறோம். (இதைத் தவிர்த்து இன்னும் பல தீய கருத்துக்களையும் அவர் வெளியிட்டான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்).

ஆட்சிப் பொருப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே பல பள்ளிகளை குண்டுவைத்து தகர்த்தான் முஅம்மர் கடாபி.

குர்ஆனில் இருக்கும் குல் (நபியே! நீங்கள் சொல்லுங்கள்) என்றவார்தையை நீக்கி குர்ஆனையே குறைபடுத்தும் விதமாக இஸ்லாத்திற்கு எதிராக நடந்தான்.

நான்கு ரக்அத் தொழ வேண்டிய அசர் தொழுகையை 3 ரக்அத்துக்கள் என்றான்.

சப்தமின்றி அமைதியாக கிராஅத் ஓத வேண்டிய அசர் தொழுகையில்சப்தமிட்டு கிராத் ஓதி தொழுகையை கிண்டல் செய்தான்.

மஃரிப் இஷா தொழுகைகளில் கிராஅத்தை சப்தமின்றி ஓதினான்.

ரமழான் கால நோன்பை கஷ்டமான – தேவையற்ற ஒரு கடமை என்று நிந்தித்தான்.

நபியவர்களின் ஹதீஸ்களை மார்க்க ஆதாரமல்ல என்று கருத்து வெளியிட்டான்.

நபியவர்கள் வின்வெளிப் பயணம் மேற்கொண்ட மிஃராஜ் நிகழ்வை கட்டுக்கதை என்றான்.

நபியின் மீது ஸலவாத் சொல்லுவது ஜாஹிலிய்யாக் கால இணைவைப்புஎன்றான்.

குர்ஆன் பலதார மணத்தை அங்கீகரிக்வில்லை என குர்ஆனுக்கு எதிராகவே பேசினான்.

ஹிஜாப் இஸ்லாத்தில் இல்லை என்றான்.  (ஹவ்வாவைப் படைக்கும்போது ஆடையுடனா இறைவன் படைத்தான் என்று கிண்டல் கேள்விஎழுப்பினான்)

நபியின் போதனைகள் அரபிகளுக்கு மாத்திரம் மற்ற எவருக்கும் உரியதல்ல என்று உலகத் தூதரை கேளி செய்தான்.

மற்ற மதங்களைப் போல் இஸ்லாமும் மாற்றத்துக்குறியதுதான் என்றுவாதிட்டான்.

ஹஜ் வணக்கத்தை கேளிகிண்டல் செய்தான்.

கல் எறிதல்ஸஈ செய்தல் போன்றவற்றை அல்லாஹ் விரும்புவதில்லைஎன்றான்.

கஃபா தான் உலகில் இருக்கும் கடைசி சிலை அதனையும் தகர்க்க வேண்டும் என்றான்.

யுசுப் நபி மட்டமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நபியின் மீது தனது வக்கிரக் கருத்தை வெளியிட்டான்.

ஸஹாபாக்களை கடுமையான முறையில் விமர்சனம் செய்தான்.

இஸ்ரேலை நண்பனாக்கி – இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தை இணைத்து(இஸ்ராடீன்ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்றார்.

நபியின் உருவப்படத்தை வெளியிட்ட டென்மார்க் பத்திரிக்கைக்கு எதிராக போராடியவர்களை சுட்டுத் தள்ளினார்.

இது போன்று இஸ்லாத்திற்கு எதிரான பல கருத்துக்களை முன்வைத்து இஸ்லாத்தை விட்டே வெளியேறினான் இந்த முஅம்மர் கடாபி.

இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்த நினைத்த முஅம்மர் கடாபியை இறைவனே கேவலப்படுத்திவிட்டான்.

இறுதியாக........................

முஅம்மர் கடாபி இஸ்லாத்தின் பார்வையில் தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சந்தர்ப்பம் பார்த்து மேற்கு நாடுகள் ஜனநாயகம் பேசி லிப்யாவிற்குள் நுழைந்ததை ஓருக்காலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இறைவா இந்த உலகிலும் மறு உலகிலும் எங்களுக்கு நலவை நாடுவாயாக!       
     i getfrom this site rasminmisc.blogspot.com