எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...

வியாழன், நவம்பர் 10, 2011

அமெரிக்க உதவியுடன் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குவது உறுதி





ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத் தகவல்களை ஆதாரம் காட்டி இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி மெயில்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் மீது கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னதாக இஸ்ரேல் இராணுவ தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரிட்டன் உளவுப் பிரிவு எச்சரித்துள்ளதாக ‘டெய்லி மெயில்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல், ஈரான் மீது விரைவாகவோ அல்லது தாமதமாகவோ தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் வெளியுறவு அமைச்சின் முக்கிய அதிகாரி ஒருவர் டெய்லி மெயிலுக்கு கூறியிருப்பதாவது, “கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னதாகவோ புது வருடத்திற்கு முன்னதாகவோ இஸ்ரேல், ஈரானின் அணு உலை மீது தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஈரானின் அணு சக்தி செயற்பாடுகளில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத் தெரிவித்துள்ளார். ஐ.நா. அணு ஆயுத கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத்திய ஈரானில் நடந்த கூட்டமொன்றில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி அஹமதி நிஜாத் ஐ.நா.வின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்தார்.

“இந்த தேசத்தின் செயற்பாடுகளை எச்சரிக்கை கள் மூலம் நிறுத்திவிட முடியாது. சிறு எச்சரிக்கைகளுக்காக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தில் இருந்து பின்வாங்காது. அமெரிக்காவின் திட்டத்திற்கு அமைய செயற்பட்டு ஏன் உங்களது கெளரவத்தை (ஐ.நா. அணுசக்தி முகவர் நிலையம்) கெடுத்துக்கொள்கிaர்கள். ஈரானியர்கள் புத்திசாலிகள். உங்களிடம் இருக்கும் 20,000 (அணு) குண்டுகளுக்கு எதிராக இரண்டு குண்டுகளை தயாரிக்க தேவையில்லை” என்று அஹமதிநிஜாத் குறிப்பிட்டுள்ளார்.