எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...
இயற்கை மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இயற்கை மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 19, 2011

பயனுள்ள மருத்துவ குறிப்புகள்



மருத்துவம் என்பது நோய்களைக் குணப்படுத்துவதற்கான கலையும், அறிவியலும் ஆகும். மனிதர்களின் உடல்நலத்தை பேணுதல், மீள்வித்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட்ட செயல்முறைகளை உள்ளடக்கும்.
1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் குமரி என அழைப்பர். இதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால் அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.
2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும் உண்டாகும்.
3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.
4. செம்பருத்தி பூவைக் காயவைத்து தூளாக்கி தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
5. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
6. இரவில் தினந்தோறும் நித்திரை வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.
7. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் உஷ்ணமும் தணியும்.
8. எந்த மருந்துகளை உட்கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.
9. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.
10. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

சனி, மே 21, 2011

தக்காளி சாறு அருந்தினால் கொழுப்பு குறையும்: ஆய்வில் தகவல்


தக்காளி சாறு அருந்தினால் கொழுப்பு குறையும்: ஆய்வில் தகவல்

சமைக்கப்பட்ட தக்காளி அல்லது தக்காளிச் சாறில் காணப்படும் இரசாயனம் இரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கும், உயர் குருதி அழுத்தம் உள்ளவர்களுக்கும் மிகவும் சிறந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய பிரச்சினை உள்ளவர்களுக்கு பொதுவாக statins மருந்து வகைகள் சிபாரிசு செய்யப்படுகின்றன. இந்த மருந்துகளில் காணப்படும் இரத்தக் கொழுப்பு அல்லது கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடு இரசாயனத்தை போலவே சமைக்கப்பட்ட தக்காளியும், தக்காளிச் சாறும் பயன்தரக் கூடியவை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கொலஸ்ட்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகிய இரண்டுமே இதயத்தில் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடியவை. இத்தகைய நோயாளிகள் தினசரி இரண்டு அவுன்ஸ் தக்காளிச் சட்னி அல்லது ஒரு பைன்ட் தக்காளிச் சாறை உட்கொள்வதன் மூலம் பெரும் பயனை அடைய முடியும்.
நன்கு பழுத்த தக்காளியில் சிவப்பு நிற பளபளப்பு ஏற்படக் காரணமாக இருப்பது அதில் பொதிந்துள்ள lycopene என்ற இரசாயனமாகும். இந்த சக்தி மிக்க இரசாயனம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் சிறந்தது.
அத்தோடு மாரடைப்பு, பக்கவாதம் என்பனவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Lycopene என்ற இந்த இரசாயனம் பற்றி நடத்தப்பட்டுள்ள 14 சர்வதேச ஆய்வுகளை கடந்த 55 வருடங்களாக நன்கு ஆராய்ந்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
உடம்பிலுள்ள கெட்ட கொலஸ்ட்ரோலுக்கு இது இயற்கையான பாதுகாப்பை வழங்கக் கூடியது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். பிரிட்டனில் 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த கொலஸ்ட்ரோல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு statins மருந்து வகைகளே வழங்கப்படுகின்றன.

உறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்



சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுக்க உதவி செய்கின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.
உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக்  கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.
தேநீர்: உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை. அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்தோடு இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.
இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.
பால்: பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது.
ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.
ஓட்ஸ்: நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.
இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.
செர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.

செவ்வாய், மே 17, 2011

செர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்




செர்ரிப்பழத்தைப் பற்றிப் பலர் இன்றும் தெரியாமலேயே இருக்கிறார்கள். மற்ற பழவகைச் செடிகளுக்குத் தண்ணீர், உரம் தேவைப்படுவது போல செர்ரிப்பழச் செடிக்குத் தேவைப்படுவதில்லை.
இந்தச் செடிகளுக்கு நோய் பிடிப்பதில்லை. "பிணிகள் பிடிக்காத செடி" என்றே இதைச் சொல்லாம். மேலும் இதன் அருகில் வந்து ஆடு, மாடுகள் மேய்வதில்லை. போர்ட்டோ ரிகே, செர்ரிபார்படோஸ் செர்ரி என்பன செர்ரிப்பழத்தின் வேறு பெயர்கள். தமிழில் "அற்புத நெல்லி" என்று வழங்கப்படுகிறது.
இது புதர்வகைச் செடியாகும். நான்கு அடி முதல் ஐந்து அடி உயரம் வரை அடர்ந்து தழைத்து வளரும். இவைகள் கரும்பச்சை நிறத்திலும், பழங்கள் சிறிய ஆப்பிள் வடிவத்திலும் இருக்கும்.
பழங்கள் சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கும். இந்தச் செடியை நட்டு ஏழு மாதத்திற்குள் பயன் தரக்கூடியது. பழம் தரக்கூடியது. ஒரு செடியிலிருந்து வாரம் ஒரு முறை இரண்டு கூடைகள் பழம் கிடைக்கும். இந்தச் செடியை விவசாயிகள் மட்டுமே வளர்க்க முடியும் என்றில்லை நாமும் நம் வீடுகளில் வளர்த்துச் சிறந்த பலனைக் காணலாம்.
செர்ரி செடி தாவர இயலில் "மல்பீஜஸியாஸ்" குடும்பத்தைச் சேர்ந்தது. செர்ரிப் பழத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. 100 கிராம் எடையுள்ள செர்ரிப் பழத்தில் 1000 முதல் 3000 மி.கி வரை வைட்டமின் சி நிறைந்துள்ளது.
எனவே நீங்கள் தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று செர்ரிப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் போதும். உங்கள் உடம்புக்குத் தேவையான வைட்டமின் சி கிடைத்துவிடும். செர்ரிப் பழத்தைக் கொண்டு ரசம், ஜாம், ஜெல்லி, ஜூஸ் ஆகியவை தயாரிக்க முடியும்.
தண்ணீருடன் தேவையான அளவு பழங்களைப் போட்டுப் பிழிய வேண்டும். மெல்லிய துணிப்பையினால் அதை வடிகட்டி அத்துடன் தேவையான அளவு சர்க்கரை, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவேண்டும். இதுதான் செர்ரிப் பழ ஜூஸ்.
செர்ரிப் பழங்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி விதைகளை நீக்கிவிட வேண்டும். சம அளவு சர்க்கரை சேர்த்துத் தேவையான விகிதத்தில் எலுமிச்சைச் சாறு கலந்து கொதிக்கவிட வேண்டும். தகுந்த பதத்தில் அதை அடுப்பிலிருந்து இறக்கி விட வேண்டும். இதுவே அருமையான செர்ரி ஜாம் ஆகும்.
ரொட்டித் துண்டுகளை இந்த ஜாமில் தொட்டுச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி ஆகியவற்றிற்கு இந்த ஜாமைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
செர்ரி காய்களை நறுக்கி உப்பில் கலந்து அவைகளை வெயிலில் காய வைக்கவேண்டும். மூன்று நாட்கள் இவ்வாறு செய்தபின் அவைகளுடன் இஞ்சிச் சாறு, மஞ்சள் தூள் ஆகியவைகளைப் போட்டுக் குலுக்க வேண்டும்.
அதன்பின் கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை போன்றவற்றைக் கொண்டு தாளியுங்கள். அதன்பின் அந்தக் கலவையைப் பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்

புதன், மே 11, 2011

எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்




எலுமிச்சையில் செடி எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகை உண்டு. வைட்டமின் சி, சுண்ணாம்புச்சத்து, செம்புச்சத்து கொண்டுள்ள எலுமிச்சை பல்வேறு பலன்களை தருகிறது.
தேள் கொட்டினால் அந்த இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரண்டு துண்டையும் தேய்க்க விஷம் இறங்கும். தலைவலிக்கு கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து கொடுத்தால் உடனே குணமாகும்.
நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்த்து கலந்து குடித்து வந்தால் தகுந்த நிவாரணம் பெறலாம்.
மயக்கம், வாந்தி, வாய் குமட்டல், நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.
எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து தலை முழுகி வர பித்தம், வெறி, உடல் உஷ்ணம் தணியும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால் எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை(கரிய போளம் என்பது கற்றாழையின் உலர்ந்த பால். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) சேர்த்து காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர ரத்தக்கட்டு கரையும்.
நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தில் துளையிட்டு விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும். எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடிக்க வறட்டு இருமல் தீரும். இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் குணமாகும். சிறிதளவு எலுமிச்சை இலைகளை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து குடித்தால் வாந்தி நிற்கும்.
எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி பிடிக்க நீர்பினிசம் தீரும்.
சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து பின் அந்த சாற்றுடன் வெயிலில் காய வைக்கவும். நன்றாக காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம் பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து மீண்டும் வெயிலில் காய வைக்கவும். நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு தேன் அல்லது தண்ணீரில் கலந்து மூன்று வேளை சாப்பிட்டுவர அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம் சீராகும்.

செவ்வாய், மே 10, 2011

அழகான முகத்திற்கு ஆலோசனைகள்.




முகம்தான் அழகின் முதல் அம்சம். முகம் பளபளப்புடன் திகழவும், சுருக்க மின்றி இருக்கவும்... வீட்டிலேயே உங்களுக்கு நீங்களே செய்து கொள்ளும் சில வழிமுறைகள்...

தயிர் அரை ஸ்பூன், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், ஆரஞ்சு பழச்சாறு ஒரு ஸ்பூன் காரட்சாறு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டா,; ஒருஸ்பூன், ஈஸ்ட்பவுடர் அரை ஸ்பூன், இது எல்லாவற்றையும் குழைத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைத்து கழுவி விடவும். முகம் பளப்பளப்பாக இருக்கும்.

தயிர் ஏடு அல்லது பால் ஏடு எடுத்து கால் ஸ்பூன் மஞ்சள்கலந்து முகத்தில் பூசி நல்ல மசாஜ செய்து வந்தால் முகத்தின் கருமை நீங்கி பளிச்சிடும்.ரோஸ் வாட்டர் ஒரு ஸ்பூன், கிளிசரின் ஒரு ஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு ஒருஸ்பூன் தேங்காய்எண்ணெய் அல்லது பாதாம்எண்ணை ஒருஸ்பூன் எல்லாவற்றையும் நன்றாக கலக்கி முகத்தில் பூசி, மசாஜ; செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகளும் நீங்கி பளபளப்பாக இருக்கும். இரவு படுக்கப் போகும் முன்பு புதினா சாறை முகத்தில் பூசி, மறுநாள்காலையில் முகம் கழுவி வரவும்.

சிறிதளவு பால், ஒரு ஸ்பூன் காலி ஃபிளவர் சாறு, ஒரு ஸ்பூன் முள்ளங்கிச் சாறு சேர்த்து முகம் பூராவும் பூசி 10 நிமிடம் கழித்து நன்றாக வாஷ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் பள பளப்பாக மாறும். வெள்ளரிக் காயையும், காரட்டையும் மிக்சியில் போட்டு நன்றhக அரைத்து அதை முகத்தில் பூசி வந்தால் முகம் எண்ணைவழியாமல் இருக்கும்,முகத்தில் இருக்கும் புள்ளிகள் கரும் மச்சங்கள் மறைய ஆரம்பிக்கும்.

முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?
கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன்
தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் வாஷ் செய்து கொண்டு பின்னர் குளிர்ந்த நீரை முகத்தில் மறுபடியும் தடவவும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிடவும். கொஞ்சம் வெந்நீரில் ஒருதுளி சோடா உப்பை போட்டு அந்தத் தண்ணீரில் பஞ்சை நனைத்து முகத்தை நன்றாகத் துடைக்கவும். வாரத்தில் இரண்டு, மூன்று தடவை இப்படி செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும்
சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.

வல்லாரை



வல்லாரைக்கு சரஸ்வதி, பிண்டீரி, யோகவல்லி, நயனவல்லி, குணசாலி, குளத்து குளத்தி, அசுர சாந்தினி போன்ற வேறு பெயர்களும் உண்டு. வல்லாரையில் அதன் இலைதான் மருத்துவ பயன் மிகுதியாக கொண்டது.

மருத்துவ பயன்கள்:
இது கற்பக மூலிகைகளில் ஒன்றாகும். வாய்ப்புண், அதிக இரத்தக் கழிச்சலால் உண்டாகும் ஆசனவாய்க் கடுப்பு, ஆசனவாய் எரிச்சல், யானைக்கால், நெறிகட்டுதல், மேகப்புண் ஆகிய நோய்களுக்கும் நல்லது.

வல்லாரை இலையை முறைப்படிக் பச்சையாய் உண்டால் அறிவு துலங்கும். வல்லாரைச் சாற்றில் உப்பும், சாதிபத்ரியும் சேர்த்துக் கொடுக்க பெருவயிறு, மகோதரம் முதலிய நோய்கள் நீங்கும். வல்லாரையை உணவில் துவையல் போன்று அடிக்கடி சேர்த்துவர உடலுக்கு வன்மையைத் தந்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கி எந்த நோயும் நம்மை அணுகாமல் செய்யும்.

வல்லாரை தோல் நோய்களுக்கு, குறிப்பாகத் தொழுநோய்க்கு நல்லது.தோல் நோய் தொந்தரவுகள் இருப்பவர்கள் தொடர்ந்து வல்லாரையை பயன்படுத்தி வந்தால் தோல்நோய் வெகு சீக்கிரத்தில் அகலும். நினைவாற்றலை பெருக்கும் ஆற்றல் வல்லாரைக்கு அதிகம் உண்டு .எனவே இந்த வல்லாரை இலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக நான்கைந்து இலைகளை பறித்து உண்ணலாம்.

வல்லாரை இலை கசப்பு சுவை கொண்டிருப்பதனால் இதனை பச்சையாக வெறும் வயிற்றில் சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். பச்சையாக தொடர்ந்து சாப்பிட முடியாதவர்கள் இந்த வல்லாரை இலையை பாடம் செய்து பொடியாக வைத்துக் கொண்டு பொடியினைக்கூட சாப்பிட்டு வெந்நீர் அருந்தலாம்.

மறதி நோயைக் கண்டித்து நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை மாணவர்களுக்கு ஒரு அரிய மூலிகையாகும். மூளையைப் பலப்படுத்து வதில் மிகவும் சிறந்தது இது. இன்று மருந்து கடைகளில் வல்லாரை கேப் ஸூல் நிறைய விற்பதிலிருந்து இதன் அரிய சிறப்பை நீங்கள்உணரலாம்.

வல்லாரையை முதலாகக் கொண்டு வல்லாரை எண்ணெய், வல்லாரை நெய் முதலிய சித்த மருந்துகளும் செய்யப்படுகின்றன.

அத்திப்பழம்



அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்.

அன்னாசி




அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறத

தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

இஞ்சி




1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.

11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.

12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.

13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

பீர்க்கங்காய்



சூடு சுபாவம் கொண்ட பீர்க்கங்காயில் பல வகைகள் உண்டு. இதில் சில வகைகள் கசக்கும். ஆகையால் சமையல் செய்யும் போது கொஞ்சம் சுவைத்துப் பார்த்து சமைக்க வேண்டும்.

பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும். வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.
பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும். பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும். சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர் களுக்கு சிறந்தது.

பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.

வெற்றிலை




மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி: 

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5 வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி: 

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்: 

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்: 

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.