ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் காஷ்னி நகரம் உள்ளது. அங்குள் ளகவாஜா ஹெகிம் பகுதியில் ஒரு வீட்டில் விதவை தாயும் அவரது மகளும் தங்கியிருந்தனர். அவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம வாலிபர்கள் 2 பேர் அவர்கள் இருவரையும் சரமாரியாக கல்லால் அடித்தனர். பின்னர் துப்பாக்கியால் சுட்டனர். அதில் தாயும் மகளும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயும், மகளையும் கொலை செய்த 2 வாலிபர்களையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் இருவரும் கள்ளக்காதல் மற்றும் செக்ஸ் உறவில் ஈடுபட்டதால் கொலை செய்ததாக தெரிவித்தனர். தலிபான்கள் ஆட்சி நடந்தபோது பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்கள் நடுரோட்டில் நிற்க வைத்து கல்லால் அடித்து கொல்லப்பட்டனர்.
தற்போதும் அதே நிலை நீடிக்கிறது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் மனித உரிமைகள் கமிஷனில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து 1026 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவம் காஷ்னி மாகாண கவர்னர் அலுவலகம் மற்றும் போலீஸ் தலைமையகத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் நடந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
by - yarlmuslim,
by - yarlmuslim,