எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...

சனி, நவம்பர் 12, 2011

சிந்தனை


கிளையில் அமர்ந்துள்ள பறவைக்கு

காற்றில் கிளைகள் அசைவதால்

பயம் இல்லை.


காரணம் அவைகள்

கிளைகளை நம்புவதில்லை..!

தன் சிறகுகளை நம்புகின்றன...!!!



நீங்கள் அடுத்தவரை நம்பி எதனையும் செய்யாதீர்கள்

உங்களை நீங்கள் நம்புங்கள்...!!!

நீங்களே உங்கள் வாழ்க்கையை செதுக்கும் சிப்பி...!!!


நம் வாழ்க்கை நம் கையில்

தன்னம்பிக்கை ஒன்றே அதனை நிர்ணயிக்கும்....!!!!


....................................................................................................................................................................


ஒரு மரத்தால் ஒரு லட்சம்

தீக்குச்சிகள் தயார் செய்ய முடியும்.

ஒரே தீக்குச்சியால் ஒரு லட்சம்

மரங்களை அழிக்கவும் முடியும்.


ஒரு தீய எண்ணம்

நம்முள் இருக்கும்

அத்தனை நல்ல

எண்ணங்களையும்

எரிக்கக் கூடும்...!!!!


நல்ல எண்ணத்தை விதைத்து

வாழ்வைச் செம்மைப்படுத்துங்கள்...!!!!



--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வான் அளவு லட்சியம்..,

கடல் அளவு நம்பிக்கை..,

மலை அளவு முயற்சி..,

உன்னிடம் இருந்தால்...!!!!


விண்ணை தாண்டி தேடிவரும் வெற்றி...!!



....................................................................................................................................................................

வாழ்க்கை என்பது பிறப்பு(Birth) மற்றும் இறப்பு(Death)

இவை இரண்டும் நிச்சயிக்கப்பட்ட முடிவுகள் கொண்ட

ஒரு விளையாட்டாகும்.


"இந்த இரண்டு எல்லைகள் கொண்ட விளையாட்டில்

நாம் எப்போதும் வெற்றிபெற இயலாது"

என்பதைப் புரிந்துகொண்டு வாழ வேண்டும்.


இருந்தாலும் அந்த விளையாட்டில் நாம்

எப்படி பங்கு எடுத்துக் கொண்டோம்

என்பது மிக முக்கியமானது.



அதுவே நம் வாழ்க்கையில்

மன நிறைவையும், மகிழ்ச்சியையும்

தரக்கூடியது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.



இதன் மூலம்

சந்தேகமும், பயமும் கொண்ட வாழ்க்கையை

நிரந்தரமாய் நீக்கிவிடலாம்...



தன்னம்பிக்கையோடு வாழலாம்.....

மற்றவர்களையும் மகிழ்விக்கலாம்.....

by   Mansur Ali