எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...

சனி, நவம்பர் 12, 2011

மிஸ்டுகால் (Missed Call)....






பாதையில் ஊரும் பாம்பை பிடித்து

தனது பைக்குள் போட்டுக் கொண்டது போல் தான்

மொபைல் போன்களை நாம் நமது சட்டைப்பைக்குள்

வைத்துக் கொண்டு அலைகின்றோம்.



ஒரு சிறிய "மிஸ்டுகால்" என்றால்

உடனே என்ன, அல்லது எவ்வளவு பிஸியாக இருந்தாலும்

அதை பார்த்துவிட்டுத் தான்

அல்லது விடையளித்து விட்டுத்தான்

அடுத்த விசயத்திற்கு நம்மை திசைதிருப்புகின்றோம்.



நமது கையிலிருக்கும் அந்த மொபையில்

எந்தளவு நமக்கு பயனளிக்கின்றது

என்று நாம் உறுதிப்படுத்துகின்றோமா என்றால், இல்லை.

சிலருக்கு எந்த வருமானமும் இருக்காது,

ஆனால் பல கால்கள் வந்துகொண்டே இருக்கும்.



பல்லாயிரக்கணக்கான பணத்தை செலவளித்து

அதை வாங்கி பாவிக்கின்றோம்.

நாம் கடுமையான வேலையில் சிக்கி

கடும் கஷ்டத்தில் வந்து தூங்குவோம்,

நல்ல ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது

சிறிதாக ஒரு மிஸ்டுகால் வந்துவிட்டால்

ஏதோ தூக்கத்தில் பாம்பு கடித்துவிட்டது போல் அல்லது

சுனாமி வந்தது போல் அசிர்ச்சியுற்று எழுகின்றோம்,

உடனே பதிலளிக்க முயல்கின்றோம்.



அப்படியென்றால் நமது வீட்டுக்கு பக்கத்தில்,

நம்மை படைத்த, நமக்கு உணவளிக்கின்ற,

நமக்கு நல்ல தூக்கத்தை தந்த

அந்த அல்லாஹ்வின் வீட்டிலிருந்து அழைப்பு வருகின்றது

அந்த அதிகாலை “சுபஹ்” வேளை,

ஆனால் நாம் அயர்ந்து, ஆழ்ந்து தூங்குகின்றோம்.



ஒரு மிஸ்டுகால் (Missed called)க்கு

ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழித்தெழும்புகின்றோம்.



ஆனால்



பெரிய சத்தத்தில் அழைப்பு கேட்கிறது,

“வெற்றியின் பக்கம் வாருங்கள்” என அழைக்கப்படுகின்றது

ஆனால் நாம் செவிடர்களாக தூங்குகின்றோம்.

وَاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلاَّ عَلَى الْخَاشِعِينَ [البقرة

"பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்...!

பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்"

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ [البقرة : 153

"நம்பிக்கை கொண்டோரே....!

பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்...!

அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்”.



{நன்றி:TNTJ Student Wing WEB TEAM.}