எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...

சனி, நவம்பர் 12, 2011

போரில் வென்ற இலங்கை சமாதானத்திலும் வென்றாக வேண்டும் - நோர்வே உபதேசம்





இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தவே நோர்வே எப்போதும் விரும்பியது. ஆனால், பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட இரு தரப்புகள் போரை தேர்ந்தெடுத்த போது சிறிய நாடான நோர்வேயாலோ அல்லது வேறு நாடுகளினாலோ என்ன செய்ய முடியும்? இலங்கைத் தரப்பானது போரில் வென்றுவிட்டது. அவர்கள் இப்போது சமாதானத்தை வெல்லவேண்டும். வலியுறுத்தித் தெரிவித்திருக்கிறார் என நோர்வே சுற்றாடல் மற்றும் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை அமைதி முயற்சிகளுக்கான முன்னாள் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம். 

இலங்கை அமைதி முயற்சிகள் குறித்துச் செய்யப்பட்ட மீளாய்வு அறிக்கை நேற்று ஒஸ்லோவில் வெளியிடப்பட்டது.  இந்த அறிக்கை வெளியீடு ஒஸ்லோவில் நடைபெற்றது. இலங்கை சார்பில் கொழும்பு மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் மிலிந்த மொறகொடவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். எரிக் சொல்ஹேய்ம் அந்த அறிக்கையை வெளியிட்டு வைத்து உரையாற்றுகையில் மேலும் கூறியவை வருமாறு,

இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தவே நோர்வே எப்போதும் விரும்பியது. ஆனால், பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட இரு தரப்புகள் போரை தேர்ந்தெடுத்தபோது சிறிய நாடான நோர்வேயாலோ அல்லது வேறு நாடுகளினாலோ என்ன செய்ய முடியும்? இலங்கைத் தரப்பானது போரில் வென்றுவிட்டது. அவர்கள் இப்போது சமாதானத்தை வெல்லவேண்டும்.

இலங்கை அமைதி முயற்சிகளின்போது கிடைத்துள்ள அனுபவங்களில் நாம் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.  இலங்கை அமைதி முயற்சிகளில் நோர்வே சிறந்த பங்கை ஆற்றியது. 2002ம் ஆண்டில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த உதவியதன் மூலம் நாம் பல உயிர்கள் பலியாவதைத் தடுத்தோம். இந்த அமைதி முயற்சிகளிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் எதிர்காலத்தில் இவை தொடர்பாக நாம் மேற்கொள்ளும் வேறு முயற்சிகளுக்கு உதவியாக இருக்குமென்று நம்புகிறேன்.

இலங்கையில் அமைதியை தவறவிட்டதற்கான பொறுப்பை  சம்பந்தப்பட்ட பிரச்சினையுடன் தொடர்புபட்ட தரப்புகளே ஏற்றுக்கொள்ளவேண்டும். போர்நிறுத்த ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட நன்மைகளையும் அவர்கள் மறந்துவிடக்கூடாது. இவ்வாறு சொல்ஹேய்ம் தெரிவித்தார்.
by yaal muslim