முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை விளக்குகின்ற புத்தகங்கள் ஏராளமாக இருக்கின்றன ஆரம்ப கால இமாம்களால் எழுதப்பட்ட முதன்மையான புத்தகங்கள் பின்னர் அவ்வாறான பல முதன்மையான நூல்களை உசா துணையாக கொண்டு எழுதப்பட்ட நவீன கால இஸ்லாமிய சிந்தனையாளர்களின் புத்தகங்கள் என வகைப்படுத்தலாம்,
இவாறு சீறா பற்றிய அல்-குரான் அல்-ஹதீஸ் களின் நிலைக்களநிலிருந்தும் ஏனைய மூலநூல்களின் தரவுகளின் வாயிலாகவும் எழுதப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட புத்தகம் அல்-றஹீக் அல்- மக்தூம் ( The Seald Nectar) ஆகும் .தற்காலத்தில் வெளியான சீறா பற்றிய நூல்களில் காத்திரமானதும் எளிமையான வடிவில் இறைதூதரின் வாழ்வினை விவரிக்கின்ற புத்தகம் என பெயர் பெற்றது அல்-றஹீக் அல்-மக்தூம். 1976 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி இடம்பெற்ற மகா நாடொன்றில் சவூதி அரேபியா, மக்காவை மையமாக வைத்து இயங்கும் “ராபிததுல் ஆலமில் இஸ்லாமி” (Muslim World League) எனும் அமைப்பின் ஆய்வுக்கட்டுரை போட்டி ஒன்றிற்காக இவர் எழுதி உலகளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற ஆய்வே இந்த நூலாகும் இது பற்றிய மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள இந்த நூலின் பதிப்புரையினை இந்த இணைப்பினை கிளிக் செய்து வாசிக்கவும்http://www.islamkalvi.com/portal/?p=613
இந்த புத்தகத்தின் Mp3 ஒலி வடிவினை இஸ்லாம் கல்வி .கொம் தளத்தில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம். மிக இலகுவான தமிழ் நடையில் வார்த்தைகள் கோர்க்கப்பட்டிருக்கின்றன , ஒரு சிறு குழந்தைக்கு கதை சொல்வது போன்ற லாவகமான மொழி நடையில் இறைதூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்கை சரிதை விவரிக்கப்படுகின்றது. நபியவர்கள் கலந்து கொண்ட யுத்தங்கள் பற்றிய வர்ணனைகளும் விவரிப்புகளும் நம் மனக்கண் முன் காட்சிகளாக விரிகின்றன.
இந்த Mp3 ஒலிப்பேழைகளை (CD) தரவிறக்கி வீட்டில் அனைவருக்கும் கேட்கும் படி ஒலிக்க விடலாம், அல்லது தனிமையில் மன ஓர்மையுடன் ஹெட்செட் மூலமாக் கேட்பது இலகுவில் மனதில் பதிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். வேண்டுமானால் தூங்குவதற்கு முன் கேட்டுப்பாருங்கள் பெருமானாரின் வரலாற்றையே ஒருவர் நம்மக்கு கதையாக சொல்வது போன்று இருக்கும், இரண்டு மூன்று தடவைகள் செவிமடுக்கும் போது இயல்பாகவே சீறா பற்றிய ஓரளவு தெளிவினை பெற்றுக்கொள்ளலாம். புத்தகம் ஒன்றினை வாசித்து கிடைக்கும் தரவுகளின் மூலமாக பெருமானாரின் வாழ்க்கை சரிதையை நினைவில் நிறுத்துவதை இலகு படுத்தி இருக்கின்றன இந்த ஒலிப்பேழைகள்.
சிலவேளைகளின் முதல் ஓரிரு பாகங்களில் விவரிக்கபட்டிருக்கும் நபியவர்களின் குலம், கோத்திரம் மற்றும் இஸ்லாத்திற்கு முன்னரான அரேபியர்களது வாழ்வுமுறை அதிகமான தரவுகளை முன்வைப்பதால் சற்று சுவாரசியம் குறைவாக இருக்கலாம், ஆனாலும் அதன் பின்னர் வருகின்ற அனைத்து பாகங்களும் அடுத்து என்ன நடைபெறும் எனும் வகையில் நம் ஆவலை தூண்டி கொண்டே இருக்கும். குறிப்பாக நபியவர்களது வாழ்வில் இடம்பெற்ற மிஹ்ராஜ் இரவு ஹிஜ்ரத் பற்றிய விவரிப்புகள், தவிரவும் நபியவர்கள் கலந்து கொண்ட யுத்தங்கள், உடன்படிக்கைகள், என்பன சுவாரசியமானதும் விறுவிறுப்பானதுமான நடையில் கூறப்பட்டிருக்கின்றன , புத்தகத்தில் குறிப்பிட்ட படி இவை அத்தனையும் அந்த யுத்தங்களில் நேரடியாக கலந்து கொண்ட சஹாபாக்களின் வர்ணனைகளுடன் சற்றேனும் சுவாரசியம் குன்றாமல் இந்த ஒலிப்பேழை வாயிலாக கேட்கலாம்.
Graves of Martyrs in Badr
இதிலும் குறிப்பாக இந்த கதை சொல்லியின் குரல் சம்பவங்களுக்கு ஏற்ப உயர்ந்தும் தாழ்ந்தும் ஒரு வகை ராகத்துடன் இருப்பது செவிமடுப்பவர்களின் கவனத்தை சிதற விடாமல் செய்கின்றது.
அதிகரித்த வேலைப்பளுக்களுக்கு மத்தியில் புத்தகங்களை வாசித்து நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிய முடியாதவர்கள் கிடைக்கின்ற ஓய்வு நேரத்தில் இந்த அல்-றஹீக் அல்- மக்தூம் புத்தகத்தின் ஒலி வடிவினை கேட்பதன் மூலமாக பெருமானாரின் வாழ்க்கை சரிதையை அறிந்து கொள்ளலாம் குறிப்பக சிறுவர்களுக்கு இதனை அறிமுகப்படுத்தலாம் கதைகளின் வாயிலாக சலிப்பேதுமின்றி சீறா பற்றிய அறிவினை அவர்களால் பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும்.
இதனை முழுமையாக தரவிறக்கி கொள்ள இந்த இணைப்பினை கிளிக் செய்யவும் மொத்தமாக மூன்று CD கள் நிரற்படுத்த பட்டிருக்கும். ஒவ்வொன்றாக தரவிறக்கி கொள்ளுங்கள்.
http://www.islamkalvi.com/download_cd/al_raheeq/browse/
http://www.islamkalvi.com/download_cd/al_raheeq/browse/
அல்லது குறிப்பிட்ட பாகத்தினை ஒன்லைன் வழியாக கேட்பதற்கு விரும்பினால் இந்த இணைப்பினை கிளிக் செய்து கேட்கலாம் விரும்பினால் பக்கத்திலிருக்கும் தரவிறக்க இணைப்பினை கிளிக் செய்து குறித்த Mp3 கோப்பினை தரவிறக்கலாம். மொத்தமாக 45 பாகங்கள் நிரற்படுத்த பட்டிருக்கின்றன. http://www.islamkalvi.com/history/raheeq_audio/index.htm
எதோ முடிந்தளவு குறுகிய நேரத்திற்குள் எழுதி இருக்கிறேன். தவறுகள் அல்லது திருத்தங்கள் இருந்தால் தயவு செய்து சுட்டி காட்டவும் நீங்கள், என் பதிவுக்கு வாக்களிக்கா விட்டாலும் பரவாயில்லை சற்றேனும் என் பதிவின் மூலம் உங்களுக்கு பிரயோசனம் கிடைத்தால் அதுவொன்றே போதும்.