தற்போதைய காலத்தில் பென்டிறைவும்(PenDrive)புரோட்பாண்டும்(BroadBand)இல்லாதவர்களின் வீடே இல்லை எனலாம். எனவே பொதுவாக கணனியில் நிறுவத் தேவையான மென்பொருட்களில் பெரும்பாலானவை இணையம் மூலமாகவே தரவிறக்கப்(Download)படுகின்றது. இதுபோலவே Windows7 இயங்குதளத்தையும் தரவிரக்கக் கூடியதாக உள்ளது. இவ்வேளையில் DVD ROM இல்லாத கணணிகளுக்கு இம்முறையே பெரிதும் பயன்படுகின்றது..
இதன்போது நேரடியாக ISO கோப்பினை USB யில் copy செய்து, உபயோகிக்க முடியாது. USB யை bootable ஆக மாற்ற வேண்டும். இதற்கென எளிதான மென்பொருளை MicroSoft அளித்துள்ளதுWindows 7 USB/DVD Download Tool. அதை இங்கு கிளிக் செய்து தரவிறக்கி நிறுவி கொள்ள கூடியதாயிருக்கும்.. இதனை திறக்கும்(Open) போது வரும் முதல் விண்டோவில் Browse கிளிக் செய்து நீங்கள் தரவிறக்கி வைத்துள்ள Windows7 இன் ISO கோப்பினை கொடுக்கவும். பின்னர் 'Next' கிளிக் செய்யுங்கள்.
USB யை டிரைவில் பொருத்தி விட்டு, அடுத்த விண்டோவில் 'USB Device' கிளிக் செய்து கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் குறைந்து 4GBஅளவுள்ள USB உபயோகப்படுத்துங்கள்.
சில நிமிடங்களில் COPY செய்து முடித்துவிடும். இப்போது உங்கள்Windows7 இன்ஸ்டாலேஷன் USB தயார் ஆகிவிடும்..
இப்போது நீங்கள் Install பண்ணுவதற்கு தயாராகிவிட்டீர்கள்.
கடந்த அலசல்கள்1000 இன் பதிப்பில் கூறியது போல் BIOS SETUPஇனுள் செல்லவேண்டும். BIOS இல் உள்ள BIOS SETUP இற்குச் சென்று அங்கு FIRST BOOT DEVICE ஆக USB Drive ஐத் தெரிவுசெய்ய வேண்டும்.
இதற்காக நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..... முதலில் உங்கள் கணணியைRestart செய்ய வேண்டும். இப்போது கணணி Openபண்ணும்போது குறுகிய கணத்தினுள் சில செய்திகள் வந்து செல்லும். அப்போது உன்னிப்பாக அவதானியுங்கள்,,, “<BIOS SETUP> DEL “ என்ற செய்தி அல்லது அதற்கு ஒப்பான செய்தி தோன்றும்.(இதில் “DEL” Key இற்குப் பதிலாக F2, ESC,F10போன்றவையும் காணப்படலாம். Mother Board இற்கு ஏற்ப இவை மாறுபடும்) இவ்வாறு செய்தி தோன்றும் அக் கணத்தில் குறிப்பிட்ட அக் கீயை ஓரிரு முறை அழுத்துதல் வேண்டும். இப்போது இக் கட்டளையானது BIOS SETUP இற்குள் அழைத்துச் செல்லும். சிலவேளைகளில் கீயை அழுத்த தாமதமாகின் ஏற்கனவே முதலில் உள்ள Operating System ஆனது இயங்க ஆரம்பித்துவிடும். எனவே அப்படி ஏற்படின் மீண்டும் கணணியை Restart செய்து மீண்டும் தொடர வேண்டும்.
BIOS SETUP இற்குள் சென்று அங்கு BOOT இனுள் BOOTABLE DEVICESசென்று FIRST BOOT DEVICE ஆக USB Drive ஐத் தெரிவுசெய்ய வேண்டும். அதன் பின் செய்த மாற்றத்தை SAVE பண்ணவேண்டும். இதற்காக F10கீயை அழுத்தத் வேண்டும். இப்போது நீங்கள் செய்த மாற்றம் சரியா என்ற வினா கேக்கப்படும். அதற்கு ’Y’ என்பதை அழுத்தி ENTERபண்ணினால் போதும் செய்த மாற்றங்கள் பதிவாகிடும்.
இப்போது விண்டோஸ் இயங்குதளம் நிறுவ ஆரிம்பித்துவிடும். அதனைத் தொடர வேண்டியதுதான்..