எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கிறோம். மூதூர் ஆன்லைன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது...

செவ்வாய், நவம்பர் 08, 2011

கடாபியின் மரணம் உணர்த்தும் உண்மைகள் – ஓர் ஆன்மீக, அரசியல் அலசல்.





கடைசி நேரத்தில் கதரக் கதர அவர் கொலை செய்யப்பட்ட காட்சியை ஊடகங்கள் வாயிலாக உலக மக்கள் அனைவரும் பார்த்தார்கள். 42 வருட காலங்கள் ஓர் நாட்டை ஆட்சி செய்த தளபதி ஒருவரின் மரணம் இப்படியும் அமையும் என்பதை அன்றுதான் உலகம் நிதர்சனமாக நேரடியாக கண்டிருக்கும்.

முஅம்மர் கடாபியின் வரலாறு என்ன? அவரின் நல்ல பக்கங்கள் இருக்கிறதா? அல்லது அவர் செய்தது அனைத்துமே கெட்ட செயல்கள் தானா? என்பதைப் பற்றி நிறையப் பேருக்கு தெரியாமல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக முஸ்லீம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கடாபியின் உண்மை வரலாற்றைப் பற்றிய சிகப்புப் பக்கங்களை சரியாக அறியாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.

இந்த ஆக்கம் கடாபியின் வாழ்க்கையின் நல்ல செயல்பாடுகள் மற்றும் மார்க்கத்திற்கு விரோதமான மார்க்கத்தையே இழிவு படுத்த நினைத்த அவரது செயல்பாடுகள் போன்றவற்றைப் பற்றி ஆராய்கிறது.

நபியவர்களின் முன்னறிவிப்பும், நாம் அறிய வேண்டியவைகளும்.

"உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள்உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?'' என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள். எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி விடுவீர்கள். உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழன்று விடும்! உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் "வஹ்னை' ஏற்படுத்தி விடுவான்'' என்று பதிலளித்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?'' என்று நாங்கள் கேட்டோம். "உலகத்தை நேசிப்பது;மரணத்தை வெறுப்பது'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)நூல்: அஹ்மத் 21363

இன்றைய கால கட்டத்தில் உலகில் பல நாடுகளிலும் இஸ்லாமியர்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. ஆப்கான், ஈராக் என்று பட்டியலில் பல நாடுகள் இணைந்து வருகிறது. இதே நேரத்தில் பல நாடுகளில் உள்நாட்டு யுத்தங்கள் மிகவும் அகோரமாக நடந்து வருகிறது.

மேற்கு நாடுகள் முஸ்லீம்கள் வாழும் நாடுகளின் மீது காரணமே இல்லாமல் தாக்குதல்களை தொடுக்கின்ற போதும் முஸ்லீம் ஆட்சியாளர்களாக தங்களைக் கூறிக் கொள்பவர்கள் யாரும் அவற்றை கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

கேட்டால் அது உள்நாட்டுப் பிரச்சினை நாங்கள் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள். இதைத் தான் நபியவர்கள் மேற்கண்ட செய்தியின் மூலம் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்.

"உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள்உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்''  என்று நபியவர்கள் குறிப்பிடுகிறார்கள். அந்த நேரத்தில் முஸ்லீம்கள் குறைவாகவா இருப்பார்கள் என்று நபி்த் தோழர்கள் கேட்கும் போது இல்லை, நீங்கள் நிறையப் பேர் இருப்பீர்கள் என்கிறார்கள்.

இன்று உலகில் 135 கோடிக்கும் அதிகமாக வாழக்கூடிய பெரும் சமுதாயத்தினராக முஸ்லீம்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எந்தத் தலைவருமோ அல்லது எந்த சமுதாயமுமோ எதிரிகளுக்கு எதிராக தங்கள் பலத்தை வெளிப்படுத்தியதாகத் தெரியவில்லை. காரணம் அவர்களின் உள்ளங்களில் ஏற்பட்டுள்ள உலக மோகமே.

மரணத்தைப் பற்றிய பயம் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. உலக வாழ்வைப் பற்றிய ஆசை அவர்களை மிகைத்திருக்கிறது. இப்படி வாழும் போது நம்மை எதிர்ப்பவர்களுக்கு நாம் அடிமைப் படுவதைத் தவிர வேறு வழி இல்லை.

லிப்யாவின் ஆரம்ப வரலாறு. சுருக்க அறிமுகம்.

1950 ம் ஆண்டு பெயரளவில் சுதந்திரம் அடைந்த லிப்யா உமர் (ரலி) அவர்களின் காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்திற்குள் கொண்டுவரப்பட்டது. அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களின் படை நகர்த்தலின் பின் ஏற்பட்ட இந்த வெற்றியின் பின் பல ஆண்டுகள் வரை இஸ்லாமியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த நாடு பின்னர் மீண்டும் அண்ணியர்கள் வசமானது.

பலவிதமான ஆட்சி மாற்றங்களுக்கும் பல தடவைகள் உள்ளாக்கப்பட்ட லிப்யா இறுதியாக உமர் முக்தார் என்ற போராட்ட வீரரின் படையெடுப்பின் காரணத்தினால் இத்தாலியிடமிருந்து மீண்டும் பெயரளவுக்கு முஸ்லீம்கள் வசமானது.

சுதந்திரம் கிடைத்து 19 ஆண்டுகளுக்குப் பின் இத்ரீஸ் அஸ்ஸனுஸி என்பவரிடமிருந்து தனது 27வது வயதில் யுத்தமே இல்லாமல் ஆட்சியைக் கைப்பற்றினார் முஅம்மர் கடாபி.

1969ம் ஆண்டு ஆட்சி பீடம் ஏறிய முஅம்மர் கடாபி 2011 வரை லிப்யாவின் மாற்றமில்லா ஆட்சியாளராக இருந்தார்.

கடாபியின் ஆட்சியின் அரசியல் மாற்றங்கள்.

கடாபி ஆட்சியைக் கைப்பற்றிய நேரத்தில் லிப்ய மக்கள் அனைவரும் அவரை ஓர் மிகப்பெரிய வீரனாக மட்டுமன்றி சிறப்பான ஆட்சியாளராகவும் இவர் திகழ்வார் என்ற எண்ணத்தில் திழைத்தார்கள்.

இவருடைய ஆட்சியின் ஆரம்ப காலம் அப்படித் தான் இருந்தது.

ஏழைகளின் தோழன் என்று தன்னை மார்தட்டி அழைத்துக் கொண்ட முஅம்மர் கடாபி. எந்த நாட்டுக்கு சென்றாலும் தனது கலாசார அடிப்படையில் தான் தன்னைக் காட்டிக் கொண்டார்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் எதிரியாக ஆரம்ப காலத்தில் தன்னைக் காட்டிக் கொண்ட கடாபி 2000க்குப் பிந்திய காலகாட்டத்தில் மேற்கின் ஊதுகுழலாகவே மாறினார். அதிலும் குறிப்பாக இஸ்ரேலின் நண்பனாகவே மாறிவிட்டார். (இதனால் தான் என்னவோ கடாபிக்கு எதிராக பல நாடுகளும் குரல் கொடுத்த நேரம் இஸ்ரேல் மாத்திரம் வாய் மூடி மௌனித்தது).

சம்பளத்திற்கு வேலை செய்யும் முறையை மாற்றி நாட்டில் உள்ள அனைவரும் பங்குதாரர்கள் என்ற பங்கு முறையை இவர்தான் லிப்யாவில் ஏற்படுத்தினார். சோசலிஸ கொள்கையினால் கவரப்பட்ட முஅம்மர் கடாபி தனது கொள்கைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கும் தயங்கவில்லை.

“காலித் பின் வலீத் முதல் கடாபி வரை” என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்ட இவர் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை தனது ரோல் மாடலாக காட்டிக் கொள்ள முயன்றது மட்டுமன்றி வீரத்திலும் அவருக்கு சரிசமனாக இருப்பதாக நினைத்து இருமாப்புக் கொண்டார்.

இவர்தான் லிப்யாவிற்கு “மக்கள் பொதுவுடைமை ஜனநாயக லிபிய அரபிக் குடியரசு” என்ற பெயரைச் சூட்டினார். பெயரில் தான் ஜனநாயம் இருந்ததே தவிர லிப்யாவிட்கும் ஜனநாயத்திற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இவருடைய ஆட்சியில் மக்கள் சேவை ஓரளவுக்கு சிறப்பாக இருந்தது எனலாம், அனைவருக்கும் இலவச மின்சாரம், வீடற்றோருக்கு வீட்டு வசதி, கட்டாயக் கல்வித் திட்டம் என பல திட்டங்களை வகுத்து நடை முறைச் சாத்தியமாக்கியவர் முஅம்மர் கடாபி.

1969ம் ஆண்டு கடாபி ஆட்சிப் பொருப்பெடுக்கும் போது 28 சதவீதமாக இருந்த படித்த மக்கள் தொகை கடாபி கொல்லப்படும் போது 90 சதவீதத்தைத் தாண்டியிருக்கிறது.

பசுமைப் புத்தகமும், பாசிச சிந்தனையும்.

ஆரம்ப கால தனது ஆட்சி முறையில் தன்னை ஒரு முஸ்லிமாக காட்டிக் கொண்ட முஅம்மர் கடாபியின் உண்மை முகம் அவர் எழுதிய ஓர் புத்தகத்தின் மூலம் வெளி உலகுக்கு தெரியவந்தது.

கிதாபுல் அஹ்லர் – கிரீன் புக் – கருப்புப் புத்தகம். தனது புரட்சியை பசுமைப் புரட்சி என்றும் தனது ஆட்சி முறை பசுமையானது என்பதையும் அறிவிக்கும் முகமாக அரசியல் சாசனமாக கடாபி தொகுத்த புத்தகம் தான் இந்த கிரீன் புக்.

இந்தப் புத்தகம் முழுக்க முழுக்கஇஸ்லாத்தை எதிர்க்கும் தனது வக்கிரசிந்தனைக்கு வித்திடக் கூடியதாகவேஇருந்ததுஇந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட சில ஆண்டுகளிலேயேமுஅம்மர் கடாபி மதம் மாறியவர் என்ற பத்வாவை பல முஸ்லீம்அமைப்புக்களும் வெளியிட ஆரம்பித்தன.

சவுதி ஆரேபியாவின் “ராபிததுல் ஆலமுல் இஸ்லாமி” இவருக்கு எதிராககடாபியின் அவதூருகளும் – தக்க பதில்களும் என்ற தலைப்பில்புத்தகத்தையே வெளியிட்டது. குறிப்பிட் புத்தகத்தின் அட்டை வாசகமேமுஅம்மர் கதாஃபி எல்லைகள் அனைத்தையும் மீறிவிட்டார்; இஸ்லாத்தின் கொள்கை, நம்பிக்கை,சட்டம், வாழ்க்கை நெறி அனைத்தின் மீதும் தாக்குதல் தொடுத்துவிட்டார்’’ என்றிருந்தது.

1980ம் ஆண்டு மக்காவில் கூடிய சவுதியின் மார்க்கத் தீர்ப்பாயத்தின்அறிஞர்கள் குழு அவரை முர்தத் – மதம் மாறியவர் என்று பகிரங்கமாகவேஅறிவித்தது.

இஸ்லாத்திற்கு எதிரான கடாபியின் செயல்பாடுகளும்கருத்துக்களும்.

தூய இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக கடாபி வெளியிட்ட கருத்துக்கள்சிலவற்றை இங்கு நாம் பட்டியலிடுகிறோம். (இதைத் தவிர்த்து இன்னும் பல தீய கருத்துக்களையும் அவர் வெளியிட்டான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்).

ஆட்சிப் பொருப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே பல பள்ளிகளை குண்டுவைத்து தகர்த்தான் முஅம்மர் கடாபி.

குர்ஆனில் இருக்கும் குல் (நபியே! நீங்கள் சொல்லுங்கள்) என்றவார்தையை நீக்கி குர்ஆனையே குறைபடுத்தும் விதமாக இஸ்லாத்திற்கு எதிராக நடந்தான்.

நான்கு ரக்அத் தொழ வேண்டிய அசர் தொழுகையை 3 ரக்அத்துக்கள் என்றான்.

சப்தமின்றி அமைதியாக கிராஅத் ஓத வேண்டிய அசர் தொழுகையில்சப்தமிட்டு கிராத் ஓதி தொழுகையை கிண்டல் செய்தான்.

மஃரிப் இஷா தொழுகைகளில் கிராஅத்தை சப்தமின்றி ஓதினான்.

ரமழான் கால நோன்பை கஷ்டமான – தேவையற்ற ஒரு கடமை என்று நிந்தித்தான்.

நபியவர்களின் ஹதீஸ்களை மார்க்க ஆதாரமல்ல என்று கருத்து வெளியிட்டான்.

நபியவர்கள் வின்வெளிப் பயணம் மேற்கொண்ட மிஃராஜ் நிகழ்வை கட்டுக்கதை என்றான்.

நபியின் மீது ஸலவாத் சொல்லுவது ஜாஹிலிய்யாக் கால இணைவைப்புஎன்றான்.

குர்ஆன் பலதார மணத்தை அங்கீகரிக்வில்லை என குர்ஆனுக்கு எதிராகவே பேசினான்.

ஹிஜாப் இஸ்லாத்தில் இல்லை என்றான்.  (ஹவ்வாவைப் படைக்கும்போது ஆடையுடனா இறைவன் படைத்தான் என்று கிண்டல் கேள்விஎழுப்பினான்)

நபியின் போதனைகள் அரபிகளுக்கு மாத்திரம் மற்ற எவருக்கும் உரியதல்ல என்று உலகத் தூதரை கேளி செய்தான்.

மற்ற மதங்களைப் போல் இஸ்லாமும் மாற்றத்துக்குறியதுதான் என்றுவாதிட்டான்.

ஹஜ் வணக்கத்தை கேளிகிண்டல் செய்தான்.

கல் எறிதல்ஸஈ செய்தல் போன்றவற்றை அல்லாஹ் விரும்புவதில்லைஎன்றான்.

கஃபா தான் உலகில் இருக்கும் கடைசி சிலை அதனையும் தகர்க்க வேண்டும் என்றான்.

யுசுப் நபி மட்டமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நபியின் மீது தனது வக்கிரக் கருத்தை வெளியிட்டான்.

ஸஹாபாக்களை கடுமையான முறையில் விமர்சனம் செய்தான்.

இஸ்ரேலை நண்பனாக்கி – இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தை இணைத்து(இஸ்ராடீன்ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்றார்.

நபியின் உருவப்படத்தை வெளியிட்ட டென்மார்க் பத்திரிக்கைக்கு எதிராக போராடியவர்களை சுட்டுத் தள்ளினார்.

இது போன்று இஸ்லாத்திற்கு எதிரான பல கருத்துக்களை முன்வைத்து இஸ்லாத்தை விட்டே வெளியேறினான் இந்த முஅம்மர் கடாபி.

இஸ்லாத்தை கொச்சைப்படுத்தி கேவலப்படுத்த நினைத்த முஅம்மர் கடாபியை இறைவனே கேவலப்படுத்திவிட்டான்.

இறுதியாக........................

முஅம்மர் கடாபி இஸ்லாத்தின் பார்வையில் தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சந்தர்ப்பம் பார்த்து மேற்கு நாடுகள் ஜனநாயகம் பேசி லிப்யாவிற்குள் நுழைந்ததை ஓருக்காலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இறைவா இந்த உலகிலும் மறு உலகிலும் எங்களுக்கு நலவை நாடுவாயாக!       
     i getfrom this site http://rasminmisc.blogspot.com/